செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
."எங்கிட்டே மோதாதே' கோல்கட்டா :கோல்கட்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் கற்களை வீசி தொல்லை கொடுத்த பார்வையாளர் களுக்கு, அவர்கள் பாணியிலேயே சிம்பன்சி குரங்கு பதிலடி கொடுத்தது. தொடர்ந்து அரைமணி நேரம் கற்களை வீசி வலுவை சிம்பன்சி காட்டியதும், பார்வையாளர்கள் தப்பி ஓடினர். கோல்கட்டாவில் அலிப்பூர் விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு இரண்டு சிம்பன்சி குரங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல அடி உயர தடுப்பு சுவர் உள்ள பகுதிக்குள் சிம்பன்சிகள் செய்யும் சேஷ்டைகளை பார்வையாளர்கள் கண்டு களித்து வந்தனர். சமீபத்தில், பார்வையாளர் ஒருவர் சிம்பன்சி மீது கல்லை வீசினார்.கோபம் அடைந்த இரண்டு சிம்பன்சிகளும், தடுப்பு சுவரை தாண்டி வெளியே வந்தன. பித்து பிடித்தது போல இங்கும் அங்கும் ஓ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி. அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்.............. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்...... நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
நியூயார்க்: அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டன. இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. http://tamil.oneindia.in/news/international/upset-hindus-urge-withdrawal-lord-shiva-beer-188989.html காளிமா முன்னதாக அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்த பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர…
-
- 1 reply
- 652 views
-
-
நடுவானில் மயங்கிய விமானி – விடுமுறையிலிருந்த விமானியின் உதவியால் தரையிறங்கிய விமானம்! பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர். விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர். விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனை…
-
- 1 reply
- 506 views
-
-
காரணம் என்ன.? காரை புதைத்த கோடிஸ்வரர்.! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான 10 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் 10 லட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன திகதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர். பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையா…
-
- 1 reply
- 331 views
-
-
01 Oct, 2025 | 06:14 PM வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத…
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
எமது நாட்டின் முதலாவதும் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவருமான (1947 – 1964) ஜவகர்லால் நேருவின் அரசியல் தந்திரோபாயங்களும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் பாரத தேசத்தின் பாரம்பரியமாக இடம்பெறுகின்றன. அவருடைய பரம்பரையினர் நேரு பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். சமாதானச் சகவாழ்வு என்ற உன்னதமான பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தவர் எமது பாரதப் பிரதமராவார். சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப் போரின் வெப்பத்தைத் தணிக்க இந்தக் கொள்கை உதவியது. இரு வல்லரசுகளும் அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை (Detente) ஏற்படுத்தின என்பது உலகறிந்த உண்மை. வெளி உலகிற்கு சமாதானப் பிரியராகவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையும் விட்டுக் கொடுப்பு…
-
- 1 reply
- 648 views
-
-
இந்தோனேஷியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்கத் தயார் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகத் தேவைப்படும் பணத்துக்காகவே இதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை தனது தந்தைக்காக அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். இணைய வர்த்தக தளம் ஒன்றில் அவர் இந்த சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரம் செய்திருக்கிறார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் புகைப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தோனேஷியாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான் என்றாலும், உறுப்புகளை விற்பதோ அல்லது வாங்குவதோ…
-
- 1 reply
- 1k views
-
-
28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை [07 - June - 2008] லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். 63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார். இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார். தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் …
-
- 1 reply
- 996 views
-
-
யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள…
-
- 1 reply
- 170 views
-
-
வட்டுக்கோட்டையில்... வயோதிபப் பெண்ணை, வன்புணர முற்பட்ட... சிறுவன் கைது! யாழ. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் குறித்த வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான். அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ச…
-
- 1 reply
- 346 views
-
-
நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது. முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject…
-
- 1 reply
- 2k views
-
-
ஆணமடுவ பிரதேசத்தில், பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட தாதியை பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கடுமையான வலி ஏற்பட்டதாகத் தெரிவித்து, ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு குறித்த தாதியை கண்ணாடி தட்டினால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தாதியின் தலையில் பலத்த காயமம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணமடுவ ஆதார வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் தாதியொருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆணமடுவ குமாரகம விஹாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு தாதியை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத…
-
- 1 reply
- 333 views
-
-
சற்றுமுன் திருமணமொன்றில் நிகழ்ந்த திடீர் குழப்பம்; சினிமாப் பாணியில் நிகழ்ந்த அதிரடி! (நேரடிக் காணொளி) இலங்கையின் வடக்கே பல திருமணங்களைச் செய்த மணமகன் ஒருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து விரிவாகத் தெரியவருவதாவது, குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்துவிட்டு அந்தப் பெண்னையும் கைவிட்டுவிட்டு இன்று வவுனியாவில் மூன்றாவது திருமணத்தினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதே வசமாக சிக்கியுள்ளார். இதனால் குறித்த திருமணம் நின்றுபோயுள்ளது. இவ்விடயம் குறித்து அவரின் இரண்டாவது மனைவி தெ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் அப்போது நினைக்கவிலை. அவருக்கு ஏற்பட்டது ‘ஏரோடாக்சிக் சிண்ட்ரோம்’ என்ற நோய். தொடக்கத்தில் இந்த நோயின் பாதிப்பால் கை விரல்கள் மற்றும் கால்களில் உணர்ச்ச…
-
- 1 reply
- 334 views
-
-
அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…
-
- 1 reply
- 386 views
-
-
கோழி சிறுநீர் கழிக்குமா…? கோழி சிறுநீர் கழிக்குமா…? என நண்பரொருவர் என்னிடம் கேட்டிருந்தார். கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. ஊரில் கோழி உரித்தவர்கள் இதைக் கண்டிருப்பார்கள். (கோழி மாங்காயை நான் சொல்லவில்லை) பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும் (சிறுநீர், மலம்), முட்டையும் வெளியேறும். சிறுநீர்க்குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், (இட்ட) முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக(குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண…
-
- 1 reply
- 897 views
-
-
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
கட்டுப்பாடுகளுக்கு புகழ்பெற்ற தேசமான சவுதி அரேபியாவில் பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக விற்பதோ அல்லது பொது இடங்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதோ இனி செய்யக்கூடாத விஷயங்கள் என்று அந்நாட்டு கலாச்சார காவல்துறை அறிவித்திருக்கிறதாம். சவுதி அரேபியாவில் இத்தகைய தடை ஏற்கனவே அமலில் இருந்ததாம். தற்போது அந்நாட்டு அறிஞர்களின் பரிந்துரையின்பேரில் இந்த தடை மீண்டும் விதிக்கப் பட்டுள்ளதாம். இந்த தடைக்கு கூறப்பட்டிருக்கும் காரணம்தான் விநோதமாக இருக்கிறது. செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச்செல்லும் ஆண்கள் அதை சாக்காக வைத்துக் கொண்டே பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார். இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது குழந்…
-
- 1 reply
- 485 views
-
-
இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பைப் பயன்படுத்தி யுவதி ஒருவர் 25 பவுண் தங்க நகைகளை அபகரித்துள்ளார். இச்சம்பவம் தாவடி பத்திரகாளி கோவிலடியிலுள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ்.ஆசாட் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐந்து நாட்கள் தாவடியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். இவர் இளைஞன் ஒருவரை தொலைபேசி மற்றும் இணையம் மூலமாகக் காதலித்துள்ளார். இத்தொடர்பைப் பயன்படுத்தி தாவடியில் வீடொன்றில் தங்கியிருந்த குறித்த பெண் கடந்த 15ஆம் திகதி மாலை மயக்க மருந்தைத் தெளித்து வீட்டிலுள்ளவர்களை தூக்கத்தில் ஆழ்த்திய பின்னர் அலுமாரியிலிருந்த தாலிக்கொடி, நெக்லஸ், சிமிக்கி தோடு, பதக்கச் சங்கிலி ஆகிய தங்க நகைகளை அ…
-
- 1 reply
- 287 views
-
-
கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்கள் மூலம், ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்துள்ளார். ஒட்டகப்பாலையும் தீக்கோழி முட்டையையும் பெறுவதற்காக இங்கு ஒட்டகம் மற்றும் தீக்கோழிப் பண்ணைகளை அமைக்கப்போவதாக கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபால கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நானே தொடர்புகொண்டேன். ஒட்டங்களின் விலைகள் மிக அதிகம். எனினும் விபரமான அறிக்கையை விரைவில் நாம் பெறுவோம் என அவர் தெரிவித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கணவனின் தேனிலவு : சிவபூசைக்குள் புகுந்த முதல் மனைவி இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார். வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். …
-
- 1 reply
- 442 views
-
-
என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ "என் வயசு 18.. நான் பத்திரமா இருக்கேன்.. என்னை யாரும் கடத்தவில்லை" நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அ…
-
- 1 reply
- 602 views
- 1 follower
-
-
50 கிலோ மீற்றர் நீளமான வீதி “திருடப்பட்டது” - ரஷ்ய சிறைச்சாலை சேவை உயர் அதிகாரி கைது! ரஷ்யாவில் ஐம்பது கிலோமீற்றர் (31 மைல்) நீளமான வீதியை திருடிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலெக்ஸாண்டர் புரோடோபொபோவ் எனும் இந்த அதிகாரி, கொங்கிறீட்டினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையொன்றின் கொங்கிறீட் பாலங்களை அகழ்ந்து விற்பனை செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வடக்கிலுள்ள கோமி பிராந்தியத்தில் இக்குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரையான ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 7,000 கொங்கிறீட் பாலங்களை த…
-
- 1 reply
- 840 views
-