செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பார்த்த நொடியில் பிரமிப்பை ஏற்படுத்தும் "பாங்காக்" அரண்மனை (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 08:36.26 மு.ப GMT ] ’ப்ரா போரம் மஹா ரட்ச வாங்’ என்று ’தாய்’ மொழியில் அழைக்கப்படும் ஒரு பெரிய அரண்மனைதான், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அதன் அடையாளமாகவும் இதயமாகவும் திகழ்கிறது.இது போன்ற பெரிய அரண்மனைகள், பல நாடுகளில் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் பாங்காக் அரண்மனையின் தனிச்சிறப்பே அதன் கட்டடக்கலை நுட்பம்தான். ஆயிரம் அரண்மனைகளை நாம் பார்த்திருந்தாலும் பாங்காக் அரண்மனையை பார்க்கையில் வியக்கவே செய்வோம். பாங்காக் செல்பவர்கள் அரண்மனையை தவிர்த்து, அங்கு எத்தனை இடங்களை சுற்றிப் பார்த்தாலும் முழுமை பெறாது. இந்த அரண்மனை சோவா ப்ரேயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த பெரி…
-
- 2 replies
- 507 views
-
-
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…
-
- 1 reply
- 507 views
-
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்ததால், பயணிகள் பீதியடைந்தனர். கடந்த, 11ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இருந்து, ஹொங்கொங்குக்கு, "ஐக்கிய அரபு எமிரேட்ஸ்' விமானம், சென்று கொண்டிருந்தது. விமானம், 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் அவசர கால கதவு ஒன்று, திடீரென உடைந்தது. அப்போது குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனால், அதிக அளவில் காற்று உள்ளே புகுந்தது.இதனால், பயணிகள் பீதியடைந்தனர். இது குறித்து, பணிப்பெண், விமானிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆலோசனைக்கு பின், விமான பணியாளர்கள், தலையணை மற்றும் போர்வைகளை வைத்து, கதவில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்தனர்.எனினும், விமானம் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படவில்ல…
-
- 4 replies
- 507 views
-
-
ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போயுள்ளது. இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது.அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்திஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=14925&page=3
-
- 0 replies
- 507 views
-
-
[size="5"]95 வயதிலும் உழைத்து வாழ விரும்பும் பெரியவர்[/size] இலங்கையர் ஒருவரின் தற்போதைய சராசரி ஆயுள் 76 என சென்றாண்டு அறிக்கை கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் நீண்ட ஆயுள் ஒருவருக்கு அமைய அவரது ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம்பெற்று இருக்க வேண்டும் என்கிறது. எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள் என்பது வரப்பிரசாதமே. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.பி.தங்கவேல் ஐயா(95 வயது) வத்தளையில் தற்போது வசித்து வருகிறார்.இன்று எமது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம்முடன் பகிந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1918 ஏப்ரல் 22இல் பிறந்த…
-
- 0 replies
- 507 views
-
-
வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஒரு ஏழை தம்பதிக்கு ஒரு வித்தியாசமான குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதாவது சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல அந்த குழந்தை காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பரவியது. மேலும், இது வேற்றுகிரகவாசி என்றும், அதனை உடனே கொன்றுவிடுமா…
-
- 0 replies
- 507 views
-
-
கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆகாஷ் தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பியுள்ளார். கைக்குழந்தையான ஸ்வராவை, அவரது மனைவி மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார்.…
-
- 2 replies
- 507 views
-
-
இலங்கை-இந்திய இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும் என்று சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இத்தகைய போராட்டங்களைப் பெரிதாக்கி இந்தியாவுடன் பகையை ஏற்படுத்திக் கொள்வது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்பாகப் படுத்துப் புரண்டெல்லாம் போராட்டங்கள் செய்கின்றனர். இதற்காக அமெரிக்கா, இலங்கையிடம் கோபித்துக் கொண்டால் அதில் அர்த்தம் இல்லை. எனவே அர்த்தமற்ற விடயங்களுக்கு விளம்பரங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று …
-
- 0 replies
- 507 views
-
-
அன்னமிட்ட கையை அபகரிக்க நினைத்த மீனிடமிருந்து ஒரு மனிதர் அலறி தப்பிய வீடியோ காட்சியை இப்போது பார்க்கலாம். florida- வில் உள்ள ஒரு கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த இந்த மனிதர்,மீன் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டே மீனுக்கு உணவு கொடுக்க நினைத்தார். ஆனால்,நடந்ததோ வேறு. கிட்ட தட்ட 50 கிலோ எடைகொண்ட இந்த மீனிடமிருந்த தப்பிக்க மனிதர் படாதபாடு பட்டுவிட்டார்.அவரது சக நண்பரால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்த இந்த வீடியோ காட்சி. தற்போது அதிகமான நபர்களால் விரும்பி பார்க்கப்பட்டும் வருகிறது. ஒருவேளை இவர் கொடுத்து சாப்பாடு போதாமையால் அவரின் கையை கடித்து திண்ண ஆசைப்பட்டதோ என்னமோ.. இந்த மீன்
-
- 0 replies
- 506 views
-
-
அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார். அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக…
-
- 1 reply
- 506 views
-
-
மும்பை: தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆபாச செய்திகளை பதிவு செய்ததால், மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இச்சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்தச் சிறுமி பள்ளி…
-
- 0 replies
- 506 views
-
-
படித்ததில் பிடித்தது..... அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை. 3000 ஆண்டுகட்கு முன்பு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சுமந்த வட இந்தியப் பெருமொழி சமஸ்கிருதம், தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்படடுள்ளது. உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை. மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது. உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்…
-
- 1 reply
- 506 views
-
-
பெரும் சவாலாகிறது இலங்கைக்கு மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்தமாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட் டத்தொடர் இலங்கைக்கு சவால்மிக்க தாகவே இருக்கும் என்ற கருத்து பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான இறுக்க மான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19வது கூட்டத்தொடரில் நிறை வேற்றப்பட்ட, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்துகொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைதான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக…
-
- 2 replies
- 506 views
-
-
கடந்த 14-05- 2015 அன்று கொழும்பு மகஸீன் சிறைச்சாலையில் முன்னால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் சுந்தரம் சதீஸ் கிணற்றடியில் வழுக்கிவிழுந்ததால் மரணமடைந்ததாக சிறைச்சாலை அதிகரிகள் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனல் அவர் நஞ்சு உட்டப்பட்டு மரணத்தை தழுவியதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவர் வழுக்கி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயங்களும் சிறைச்சலையில் வைத்து அவர் தாக்கப்படிருகலாம் என்ற சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. மேலும் இச்சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அவருடன் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது தொடர்பில் இருந்த அப்புத்துரை நியாயராசா எனப்படும் சதீஸ்சினுடைய உறவினரை விசாரணைக்கு வரும்படி இராணுவத்தினர் என தம்மை அடையாளபடுத்தி சிலர் மேற்படி நப…
-
- 0 replies
- 506 views
-
-
Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 12:46 PM கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன…
-
-
- 5 replies
- 506 views
- 1 follower
-
-
[size=4]எகிப்து நாட்டில், முழுக்க முழுக்க பெண்கள் பணியாற்றும், "டிவி' சேனல், வரும் ரம்ஜான் மாதத்தில், நிகழ்ச்சிகளை துவக்குகிறது. எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் தலைமையிலான குடும்ப ஆட்சி, கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது.[/size] [size=4]தற்போது, அங்கு ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முகமது முர்சி அதிபராகியுள்ளார். முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில், கடுமையாக கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.[/size] [size=4]இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம்…
-
- 3 replies
- 506 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…
-
- 0 replies
- 506 views
-
-
நைஜீரிய போக்குவரத்து காவலர் 6fa0e7126f02b893b984a2ba4603984c
-
- 3 replies
- 506 views
-
-
டுபாயில் நடைபெறும் முப்பரிமாண ஓவியத் திருவிழா! August 11, 2020 டுபாயில் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் பிராண்ட் டுபாய் (Brand Dubai) (அரச ஊடகத்துறையிலுள்ள பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவியத் திருவிழாவொன்று நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக டுபாயிலுள்ள முக்கிய வீதிகளில், முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களால் வரையப்படுவதாகவும் தற்போது சிட்டி வாக் பகுதியில் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவானது இம் மாத இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/…
-
- 0 replies
- 505 views
-
-
74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா.. மூத்த மகனுக்கு வயது 52! Posted by: Sudha Published: Monday, December 31, 2012, 10:02 [iST] லண்டன்: இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.…
-
- 2 replies
- 505 views
-
-
லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்து விதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை தனித்துவமானது. அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சுங்கத்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் கராச்சி நகரின் டி.ஹெச்.ஏ பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர். சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் க…
-
- 5 replies
- 505 views
- 1 follower
-
-
புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!
-
- 0 replies
- 505 views
-
-
[size=4]லண்டனில் உள்ள புகழ்பெற்ற, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத், அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.[/size] [size=4]இவரை போற்றும் விதத்தில், லண்டனில் பார்லிமென்டையொட்டி அமைந்துள்ள, வரலாற்று புகழ்மிக்க, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்துக்கு, "எலிசபெத் கோபுரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கையை, பிரிட்டன் பார்லிமென்ட் வரவேற்றுள்ளது.புகழ்பெற்ற இந்த கோபுரம், கடந்த 1859ம் ஆண்டு, கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள, மிகப்பெரிய மணியின் ஓசை, லண்டனின் ச…
-
- 3 replies
- 505 views
-
-
"அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது" : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி 01 AUG, 2025 | 11:29 AM இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவிவ் போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்…
-
-
- 5 replies
- 505 views
- 1 follower
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றது. தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார். அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 505 views
-