Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  2. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என…

  3. 2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்! பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள், "எங்களுக்கு கடமையே கண்" என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள். இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல…

  4. ஸ்ரீலங்கா தேசியக் கொடியை... கால் துடைக்கும், கம்பளத்தில் அச்சிட்ட உலகின் முன்னணி நிறுவனம்! உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது. இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த …

  5. இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…

    • 0 replies
    • 449 views
  6. கடல் கடந்து கச்சேரிக்கு வந்து உதட்டை மட்டும் அசைத்தாரா பீபர்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாப் நட்சத்திர பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டவுடன், அவருடைய இந்திய ரசிகர்கள் உற்சாக நிலைக்கு சென்றனர். இசைக்கச்சேரிக்கு சென்றுவிட ஒரு டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். ஆனால் சிலருக்கோ, கச்சேரி நடைபெறும் இடமான மும்பையில் உள்ள புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அரங்கத்திற்கு பயணப்படுவது என்பது சற்று தூரமாக இருப்பதை போன்று கருதினார்கள். சிலருக்கு டிக்கெட்டின் கட்டணம் அதிகமாக தெரிந்தது. அதன் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 75,000 ரூபாய். ஆனால், இந்த காரணங்கள் எல்லாம் ஜஸ்டின் ரச…

  7. புலிகளின் தங்கம் ஜப்பானுக்கு விற்பனை August 11, 201510:36 am தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கத்தின் ஒரு பகுதி ஜப்பான் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் சுமன தேரர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆவண ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், தான் அவற்றை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கே.பி.எனும் குமரன் பத்மநாதன், மஹிந்த ராஜபக்‌ஷ, பஷில் ராஜபக்‌ஷ, கோத்தபாய ராஜபக்‌ஷ, காமினி செனரத், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு இராணுவ தலைமையகத்தில், 02 கொள்கலன்களில் பத்த…

    • 0 replies
    • 449 views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆர்சி அடண்டிரில்லா பதவி,பிபிசி பங்களா 16 நவம்பர் 2023 இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது. யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் 'சியோனிசம்' (Zionism) தோன்றியது. ஹீப்ரூ விவிலியத்தில், சியோன…

  9. அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கானை கௌரவிக்க விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானம்? 06 May 10 01:25 am (BST) http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24014&cat=1 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல இந்தித் திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய நடிகர்கள் இருவருக்கு இலங்கையில் தபால் தலையொன்றை வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நடிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர். எனினும் இந…

    • 1 reply
    • 449 views
  10. தமிழர்களை வெருட்டும்போது வீர பரம்பரைபோல அறிக்கைவிடும் மனிதன், ஒரு ஆளை எதிர்கொள்ள பயந்து நடுங்கி கைபுள்ளபோல ஓடி தப்புறார். கொஞ்சம் எண்டால் மூஞ்சை பேந்திருக்கும்போல

  11. ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா

    • 2 replies
    • 449 views
  12. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு உணர்த்தும் விதமாக, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மகனின் முகத்தை இவர் தனது இடது தாடையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளார். தனது இந்த புதிய தோற்றத்தை சமீபத்தில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட் வெளியிட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் தரப்பில் இருந்து பெருத்த வரவேற்பும் ஒருசிலரிடம் இருந்து அதிருப்தியும் கிடைத்துள்ளது. இப்படி, உன் முக அழகையும், அமைப்பையும் கெடுத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், விசா போன்றவற்றில் எதிர்காலத்தில் உனக்…

    • 0 replies
    • 449 views
  13. நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…

  14. இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…

  15. 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதக்கப்பட்ட இரு நபர்கள் 30 வருடங்களின்பின் நிராபராதிகளாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுவிட்ட சகோதர்களான லியோன் பிரவுண் மறறும் ஹெனட்ரி மெக்கலம் எனும் இவ்விருவரும் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி மிக நீண்டகாலமாக சிறையில் இருந்தவர்கள் ஆவர். 1983 ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லியோன் பிரவுண் 15 வயதானவராகவும மெக்கலம் 19 வயதானவராகவும் இருந்தனர். தற்போது இவ்விருவருக்கும் முறையே 46 மற்றும் 50 வயதாகிறது. தம்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் இவர்கள் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் …

  16. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த…

  17. வீரகேசரி இணையம் 7/7/2011 8:18:31 PM அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுற்றாடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'ஜயன்ட் ஹொக்வீட்' எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது. மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்த…

  18. நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம் தெரியாத நபர்கள் கடத்தி கொலை செய்து இறைச்சி ஆக்கியுள்ளனர். வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர். குறித்த பசுமாடு 20 நாள்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்…

  19. கர்னூல் மாவட்டம் தேவரகட்டா கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் கட்டைகளால் தாக்கி கொண்டு வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது . கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்…

  20. Published By: SETHU 12 MAY, 2023 | 06:04 PM இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மாதாந்தம் 30,000 சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரிடம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இருப்பதை அதிகரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹேமா மீனா எனும் இவர், மத்திய பிரதேச பொலிஸ் வீடமைப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஆவார். 7 வருடங்களாகவே அவர் சேவையில் உள்ளார். அண்மையில் அவரின் வீட்டில் ஊழல் எதிர்ப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முற்றுகையின்போது ஹேமா மீனாவின் பெயரிலும் அவரின் குடும்பத்தினரின் பெயரிலும் 7 கோடி இந்திய ரூபா பெறுமியான சொத்துககள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடம்பர கார்கள் …

  21. தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு, வீடியோ ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. அதில், பேசிய நபர், “பார்த்திங்கதானே அனுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல (pavement) வந்து அப்பிள் வாங்குறாங்கக, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அனுரட கேம்” என்று அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்கின்றார். அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் எந்த பேமெண்டு என்று சரியாக தெரியவில்லை. அதேபோல, குரல்கொடுத்த நபரும், எந்த பேமெண்டு என்று கூறவே இல்லை. Tamilmirror Online || இந்த ஐயா யாரென தெரியுதா?

  22. எகிப்தில் படையெடுக்கும் தேள்கள் ! - 3 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் காயம் ! எகிப்தில் தேள்fள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகின்றதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குறித்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும…

  23. வீட்டின் கூரையில் ஏறிய கார் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஒரு தம்­ப­தி­யினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் அண்மையில் இடம்­பெற்­றது. தான் தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது கூரையில் சத்­த­மொன்று கேட்­ட­தா­கவும் வெளியே சென்று பார்த்­த­போது வீட்டின் கூரையில் காரொன்று இருப்­பதைக் கண்டு தான் வியப்­புற்­ற­தா­கவும் 83 வய­தான பெண்ணொருவர் தெரி­வித்­துள்ளார். மேற்­படி காரின் சாரதி சுக­வீ­ன­முற்­றதால் கட்­டுப்­பாட்டை இழந்­த­போது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13020#sthash.PpAGt59Z.dpuf

    • 1 reply
    • 448 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.