Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Posted Date : 17:42 (10/10/2014)Last updated : 18:05 (10/10/2014) ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிவிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர். ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கிழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து ச…

  2. பங்களாதேசத்தின் புகையிரதம்

    • 2 replies
    • 737 views
  3. அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breif…

  4. பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …

  5. மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர் Tuesday 26th of January 2010 12:29:36 PM போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் …

  6. மரணம் அல்லாத... கழுத்தை நெரிக்கும், குற்றவாளிகளுக்கு... ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு பயத்தை கட்டுப்படுத்த அல்லது தூண்டும் முயற்சியில் தங்கள் நண்பர்களை கழுத்தை நெரிக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணம் அல்லாத கழுத்தை நெரித்தல் என்பது பொதுவாக யாரோ ஒருவர் கழுத்தை நெரிப்பது அல்லது வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் மூச்சுத்திணறல் திறனைக் கட்டுப்படுத்த அல்லது பயமுறுத்துவதை உள்ளடக்குகிறது மேலும், இது அரசாங்கத்தின்…

  7. மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 60 வயதான தாயொருவர் தனது உயிரிழந்த 27 வயது மகனுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு ஊட்டியுள்ளார். இந்த தாயும் அவரது மகனும் குறித்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர். மகன் உயிரிழந்து கட்டிலின் மீது காணப்பட்ட நிலையில் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை அறியாத மானநோயாளியான தாய் தொடர்ந்து ஐந்து நாட்கள் இவருக்கு உணவூட்டி இருக்கின்றார். அயலவர்கள் குறித்த வீட்டியிலிருந்து துர்வாடை வருவதை உணர்ந்து சென்று பார்த்த போதே அந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. பிரதேசவாசிகள் அவ்வீட்டுக்க…

  8. மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…

    • 0 replies
    • 404 views
  9. அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்துள்ளன. இவை ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்களது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப்பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மைய…

  10. மரத்தின் வயது 4,768! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவ…

  11. இந்த விமானிக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம் தான். 80 வயதான அந்த விமான ஓட்டி தவறான இடமொன்றில் விமானத்தை நிறுத்தியுள்ளார். அது வேறு எங்கும் அல்ல 40 அடி உயரமான மரத்தில். உடனடியாக அவசர உதவிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்துள்ளார்கள்.. இந்தச் சம்பவம் போலந்து நாட்டில் உள்ள Wielmoza என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தற்செயலாக நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானிக்கு விமானத்துக்கோ பெரிதாக எந்தச் சேதமும் ஏற்படவில்லை. http://thamilfm.com/...l.aspx?ID=10177 It is remarkable that he survived unscathed and equally that this kind of thing hasn't happened before to 80-year-old Cezary Muchnik given that h…

  12. உலகில் அதிகமானோரால் விரும்பிப் பருகப்படும் பானமாக திகழ்வது கோப்பியாகும். இவ்வாறு விரும்பி அருந்தப்படும் கோப்பி வகைகளில் பல வகைகள் உண்டு. எனினும் உலகில் விலையுயர்ந்த கோப்பி வகை எதுவென்று உங்களுக்கு தெரியுமா? அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அத் தகவல் சற்று சுவாரஸ்யமானது. இவ்வகை கோப்பியின் பெயர் ' கோபி லுவாக்' Kopi Luwak. ' கோபி லுவாக்' (Kopi Luwak) இவை இந்தோனேசியாவின் சுமாத்ரா, பாலி , ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தீமோரிலும் இவை உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அங்கே இது 'மொடிட் கொபி' motit coffee மற்றும் 'கெபே லாகு' kafé-laku என அழைக்கப்படுகின்றன.…

  13. உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது. தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்…

  14. மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம் November 18, 2020 யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாத…

  15. மருத்துவமனையில் சிறுமி மரணம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 49 Views விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு -------த்தீவு பிரதான வீதி பகுதியில், நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த ச…

  16. இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். 68 வயதாகும் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பதறிய இவரது செல்ல நாய் போன்குக், ஆம்புலன்ஸையே பின்தொடர்ந்து சென்றுள்ளது. ச…

  17. மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …

  18. கொழும்பு புளூமெண்டால் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமெண்டால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டால் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்தக் கைத்தொலைபேசியை திருடியவர் இதுவரை சிக்காத நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லங்காதீப https://thinakkural.lk/article/275642

  19. மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்துக இலங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று, பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஆயுள்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, இராஜாங்க அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை, தேரர் நேடியாக முன்வைத்திருந்தார். வௌ்ளைக்காரர்கள் அனுமதி இன்றி, கஞ்சா பயிரிடவும் பயன்படுத்தவும் முடியாது என்றே, தடை விதித்திருந்ததாக நாலக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், 1984ஆம் ஆண்டு, எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாது என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். கஞ்சா என்பது மருந்து பொரு…

    • 2 replies
    • 433 views
  20. மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்: வவுனியாவில் சம்பவம் வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52) ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில…

  21. கோட்டயம் பிப்ரவரி 23,2013,01:12 IST தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்…

  22. தமிழ் நாட்டில் மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை தாக்கி விட்டதாக மாமியார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான புகாரை வாபஸ் பெற கூறி கல்பானா மாமியாரை மிரட்டி வந்தார். இந்நிலையில் நாகே…

  23. மர்ம ஓவியர் புது முயற்சி . Friday, 07 March, 2008 11:07 AM . லண்டன், மார்ச். 7: லண்டனில் யாருக்கும் தெரியாமல் ஓவியங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மர்ம ஓவியர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாராம். . லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றின் சுவரில் கொடிக் கம்பத்தில் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கேரி பேக் பறப்பது போலவும், அதற்கு முன் இரண்டு சிறுவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது போலவும் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியம் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி சிந்திக்க வைப்பதாகவும் அமைந் துள்ளதாம். malaisudar.com

    • 0 replies
    • 774 views
  24. தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார். சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம். இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170439/மர-மத-த-க-ட-ட-யவர-ம-ட-ட-ன-ர-#sthas…

  25. மறக்காது.. டபாய்க்க முடியாது வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ் வாஷிங்டன்: ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.