செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 1 reply
- 351 views
- 1 follower
-
-
கனடா-ஒரு செட் இறந்த பற்றறிகள் கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கிறிஸ்ரின் ஹவ்லி அவரது மகனிற்கு ஒரு பொம்மை வாங்கியுள்ளார். ஆனால் அதன் பற்றறிகள் பழுதடைந்து விட்டன. அதனால் அவர் அருகில் உள்ள வீட்டுப்பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்று பற்றறிகள் வாங்க சென்றார். அவரிடம் கடை சொந்காரர் சுரண்டும் ரிக்கெட் ஒன்றை கிறிஸ்மஸ் ஈவ் தினமான இன்று வாங்க போகின்றீர்களா என கேட்டதுடன் இவை அதிஷ்டமானதென தான் கேள்விப் பட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்ரினும் சரியென்று 20-டொலர்களிற்கு 200-மில்லியன் டொலர்கள் பரிசிற்கான வியக்கத்தகு சுரண்டல் சீட்டை வாங்கினார். வீட்டிற்கு சென்ற அவர் ரிக்கெட்டை சுரண்ட அவர் 2-மில்லியன் ட…
-
- 0 replies
- 793 views
-
-
யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும் நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது. ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது. 4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில்…
-
- 1 reply
- 514 views
-
-
-
- 1 reply
- 606 views
-
-
மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…
-
- 7 replies
- 677 views
-
-
சட்ட விரோதமாக பறவைகளைக், கடத்தியவர் கைது! சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார். வென்னப்புவ, கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 10 லவ் பேர்ட்ஸ் மற்றும் விஷேட கிளி வகையைச் சேர்ந்த பறவைகள் 17 களும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த பறவைகள் சுமார் 650,000 ரூபாய் பெறுமதியுடையவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரிற்கு ஒ…
-
- 0 replies
- 440 views
-
-
உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By பெரியார்தளம் On Friday, January 13th 2012. Under பெரியார் முழக்கம் Edit Post முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொ…
-
- 6 replies
- 1k views
-
-
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதில் திருச்சி மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல 124 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு தயாராக இருந்தனர். ஆனால் உடல்நலக்குறைவினால் திடீரென விமானி விடுப்பு எடுத்துக்கொண்டார். விமானி இல்லாததால் விமானம் புறப்படவில்லை என்றும், மாற்று விமானி வந்த பின்னர் விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் 8½ மணி நேரம் கழித்து நேற்று காலை 9.30 மணிக்கு விமானி வந்ததும் விமானம் திருச்சிக்கு புறப்பட்டுச்சென்றது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குவைத் சென்ற விமானத்திலும் விமானி வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். - See more…
-
- 2 replies
- 329 views
-
-
நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார். அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். 'உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்' என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார். ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆர…
-
-
- 4 replies
- 527 views
- 1 follower
-
-
[size=3][size=4]சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.[/size][/size] [size=3][size=4]இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]…
-
- 5 replies
- 725 views
-
-
இளம்பெண்ணிடமிருந்து பேய் வெளியேறும் மிரட்டல் வீடியோ Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (18:31 IST) ஒரு இளம்பெண்ணை பிடித்துள்ள பேயை விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களுக்கு, பேய், ஆவி, பிசாசு ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கை உண்டு. அங்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவ்வப்போது பலருக்கு பேய் ஓட்டப்படுகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது போல் பயங்கரமான ஒன்றை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணை, ஒரு வெள்ளை நிற கட்டத்தினுள் அமர வைக்கிறார்கள். பேய் ஓட்டுபவரின் உதவியாளர், அந்த பெண்ணை பிடித்துக் கொள்ள அவர் வாயிலிருந்து ரத்தம் வழிகிறது. மேலும்…
-
- 2 replies
- 467 views
-
-
ஆந்திர எல்லையில் குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு வாலிபர் ஒருவர் மது குடித்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் பலர் சமூக இடைவெளியை கூட பின்பற்றாமல் பல மணிநேரம் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்றப்பட்ட தகராறில் 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். ஆந்திர-கர்நாடக எல்லையில் 43 நாட்களுக்கு பின் ஒரு வாலிப குடிமகன் புதன்கிழமை மதுவை வாங்கி குடிக்கச் சென்று கொண்டிருந்தபோது வழியில் எதிர்பட்ட ஒரு பாம்பை பார்த்தார். மது…
-
- 0 replies
- 469 views
-
-
90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். கம்மாக்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர். ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் …
-
- 2 replies
- 478 views
-
-
dec25,2012 அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர். ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வளவு ஆழ…
-
- 0 replies
- 746 views
-
-
பஸ்சில் பயணித்த உம்மன்சாண்டி... பார்த்து வியந்த பயணிகள்! கொல்லம் பேருந்து நிலையம். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி. கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஒன்று திருவனந்தபுரத்துக்கு புறப்படத் தயாராக நிற்கிறது. அப்போது வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பேருந்தில் ஏறுகிறார். பஸ் அருகே நின்றிருந்த லேடி கண்டக்டருக்கு அவரை எங்கேயோ பார்த்த நினைவு. கூர்ந்து கவனித்தால், அது உம்மன் சாண்டி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர். சேட்டா என அலறுகிறார் கண்டக்டர். அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன நடக்குதுனு ஒன்னும் புரியவும் இல்லை.கண்டக்டருக்கு நமஸ்காரம் போட்டு விட்டு, பேருந்தில் ஏறி, ஓட்டுநர் இருக்கைக்கு பின்னே உள்ள சீட்டில் அமர்ந்து கொள்கிறார் சாண்டி.செக்யூரிட்டியிட…
-
- 0 replies
- 363 views
-
-
வேலைக்கு செல்பவரா? உணவில் கவனம் தேவை! அலுவலகம், நிறுவனங்களில் பணி புரியும் பெரும்பாலானவர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் மதிய உணவை முறைப்படி உட்கொள்ளாமல் ஒப்புக்கு ஏதோ சாப்பிடுகின்றனர். மதிய உணவை ஒரு பொருட்டாகவே பலர் மதிப்பதில்லை. ஆனால் அதில் போதிய கவனம் செலுத்தி, ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காற்கறி, கீரைகள், பழங்கள், தானியங்கள் நிறைந்ததாக மதிய உணவு இருக்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சேர்க்காமல், குறைந்த அளவில் சேர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது. தினமும் ஒரே மாதிரி உணவையே சாப்பிடாமல் மாறுபட்ட, வித்தியாசமான உணவு வகைகளை மதிய நேரத்தில் சாப்பிடலாம். அலுவலகத்த…
-
- 1 reply
- 886 views
-
-
ஏழாயிரம் தனியார் கார்களுடன் வாழும் ஆடம்பர மனிதன்.! ஹசனல் போல்கியா புருனேயின் தற்போதைய சுல்தான் மற்றும் யாங் டி-பெர்டுவான், அதே போல் புருனே பிரதம மந்திரி ஆவார், அவரே கடைசி முழுமையான மன்னர்களில் ஒருவராக ஆகிறார். அவர் தனது கடையில் 7,000 கார்களை வைத்திருக்கிறார். அவுட் ஹவுஸ் கிழக்கு ஆசியாவில் உள்ள போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இறையாண்மை மாநிலம் புருனே. ராயல்டியைத் தவிர, அவர் தனது கேரேஜில் ஏழு ஆயிரம் கார்களின் தொகுப்பைக் கொண்ட உண்மையான அழகான கவர்ச்சியான ஆட்டோமொபைலின் காதலன். அவரது கடையில் கார்களின் முறிவு கீழே: 604 -ரோல்ஸ் ராய்ஸ் 574 -மெர்சிடிஸ் பென்ஸ் 452 -ஃபெராரி 209 -பி.எம்.டபிள்யூ 179 ஜாகுவார் 134 -Coenigsegg’s 2…
-
- 0 replies
- 347 views
-
-
ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பில் உண்மை வெளியானது : லண்டன் நாளிதல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒரு பிர…
-
- 0 replies
- 262 views
-
-
3.5 மாதத்தில் பிறந்த குழந்தையின் முதல் வருடம்
-
- 0 replies
- 208 views
-
-
உடலில் ஏற்படும் வேதனையை போக்க மாத்திரைகளை விட பீர் சிறந்தது: - ஆய்வில் தகவல் [Sunday 2017-04-30 16:00] வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.“உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி …
-
- 2 replies
- 529 views
-
-
15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை! கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2021/1233947
-
- 0 replies
- 200 views
-
-
ஹரியானாவில்... பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிப்பு. பேய்... பிசாசின், வேலையோ என அச்சம் ! ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக பெண்களின் முடிகள் மட்டுமே துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கூந்தல் துண்…
-
- 6 replies
- 386 views
-
-
யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…
-
- 6 replies
- 404 views
-