Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆந்திர மாநிலத்தில் புகழ்மிக்க பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிம்மாசலம் எனப்படும் மலையில் அமைந்திருக்கும் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் இரு தினங்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் பணத்துக்கு நடுவே ஒரு காசோலை கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை. காரணம் அந்தக் காசோலையில் நூறு கோடி ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப் பக்தர் ஒருவர் கோயிலுக்கு 100 கோடி ரூபாவுக்குக் காசோலை செலுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. திருமலை திருப்பதியிலேயே ஒரே காசோலையாக நூறு கோடி ரூபா கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் உடனடியாக உண்டியல் எண்ணும் பணியில் ஈட…

  2. கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கேயான பிரத்தியேக மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்க…

  3. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர்வீ.ருத்ரகுமாரனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்திமுரளீதரன் எனப்படும் கருணா அம்மான் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ருத்ரகுமாரனும் அவரது ஆதரவாளர்களும் நேரில் கண்டறிந்துகொள்ள வேண்டுமேன முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழர்களைமூளை சலவை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களை பார்வையிட்டு மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதனைபுலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழ் …

  4. தெல்லிப்பளை குளமங்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் வாழைக்குலைப் பொத்தி நிலத்தின் கீழ் இருந்து மேல் எழுந்து வளரும் அபூர்வமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்படும் வாழை குட்டி போட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாழையின் அடிமட்டத்தில் இருந்து சுமார் ஓர் அடி தூரத்தில் மற்றுமொரு குட்டி வருவதைப் போன்று வாழைப் பொத்தி வெளி வந்துள்ளது. இந்தச் சம்பவம் குளமங்கால் முருகன் தேவதாஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு வாழை நிலத்தின அடியில் இருந்து பொத்தி வெளிவந்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12361

    • 8 replies
    • 1.9k views
  5. http://life.dailymirror.lk/article/8134/festival

  6. -நவரத்தினம் கபில்நாத் முல்லைத்தீவு, தட்டாமலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனம் ஒன்று, வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த எருமை மாடுகளை மோதியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/122308--7-.html

  7. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊழியர்களை அடி, பின்னி எடுத்து விடுவார். இவரது அடி, உதைக்கு, பில் கிளிண்டன் கூட தப்பியது இல்லை என்றும், பலமுறை, கிளின்டனை அறைக்குள் விட்டு, கதவை சாத்தி, கும்மி எடுத்துள்ளதாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளின்டன் சிக்கியபோது, ஹிலாரியின் கோபம், உச்சக்கட்டத்தை அடைந்ததாக…

  8. கோவை: கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடுத்தடுத்து 3 திருமணம் செய்தும், மூன்று பேருமே அவரை விட்டுப் பிரிந்து போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை, பாப்பாயக்கன் பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முருகமூர்த்தி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, இரண்டு மனைவியரும் இவரை விட்டுப் போய் விட்டனர். இருந்தும் மனம் தளராத முருகமூர்த்தி, மூன்றாவதாக 27 வயதுப் பெண்ணை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 3வது மனைவி கடந்த வாரம் வீட்டை விட்டுப் போய் விட்டார். திரும்ப வரவே இல்லை. இதனால் முருகமூர்த்தி பெரும் சோகமடைந்தார். 3 முறை திருமணம் செய்தும…

  9. http://www.youtube.com/watch?v=GgNCW_hJgro மேலேயுள்ள காணொளியில், அமீரகத்திலுள்ள துபாய் மால்(Dubai Mall) அண்மித்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' (Burj Khalifa) வின் உச்சிக்கு (உயரம் : 828 Metres) ஏறும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ஆலன் ராபர்ட்' உலகின் பல கட்டிடங்களில் எந்தவித உதவிப் பொருட்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர். துபாயின் இக்கட்டிடத்தில், இம்மாதம் 28ந் தேதி அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் சில இடங்களில் கயிற்றின் உதவியுடன் மேலே எறி கட்டிடதின் உச்சியை எட்டினார்.

    • 8 replies
    • 776 views
  10. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண் ஈடுபட்டுள்ளார். ஓர் இளம் பெண் முழு நிர்வாணமாக இருப்பதை கண்ட வாகன சாரதிகள் தமது கவனத்தை திசை திருப்பியதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. வாகன சாரதிகள் அனைவரது கவனமும் இந்த நிர்வாணப் பெண் மீது இருந்ததால் வாகனங்கள் ஒவ்வொன்றும் மோதிக்கொண்டன. அதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. ஏன் வாகன நெரிசல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக நிர்வாணமாகவே அந்தப் பெண் வெளியில் வந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக …

    • 8 replies
    • 2.3k views
  11. 20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார் 2017-01-02 13:39:42 ஜப்­பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வரு­டங்கள் தனது மனை­வி­யுடன் பேசு­வதை தவிர்த்து வந்தநிலையில், அண்­மையில் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார். ஒட்டோவ் கேட்­டே­யமா எனும் இந் ­நபர் தனது மனைவி­யுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வரு­ட­ கா­ல­மாக இரு­வ­ருக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் நடக்­க­வில்லை. யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகு­வாக பாதித்­ததால் அவ­ருடன் பேசு­வதை கேட்­டே­யமா நிறுத்­தி­னாராம். அவரின் மனைவி கேட்­டே­ய­மா­வு­டன பேசுவதற்கு முற்­பட்­ட­போ…

  12. டேட்டிங் தோல்வியில் முடிந்ததால் கோப்பி வாங்குவதற்கு செலவிட்ட பணத்தை திருப்பித் தருமாறு கோரிய இளைஞன் தன்­னுடன் டேட்­டிங்­கிற்கு வந்த யுவ­தி­யு­ட­னான உறவு முறிந்­ததால் அவ­ருக்கு கோப்பி வாங்கிக் கொடுப்­ப­தற்கு செல­விட்ட பணத்தை திருப்­பிக்­கொ­டுக்­கு­மாறு நபர் ஒருவர் கோரி­யுள்ளார். லண்­டனைச் சேர்ந்த லொரின் குரொச் எனும் யுவ­தி­யி­டமே இந்த விசித்­திர கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. லண்டன் ஐலிங்டன் பகு­தியைச் சேர்ந்த 28 வய­தான லொரின் குரொச், தன்­னுடன் டேட்டிங் வந்த இளை­ஞரின் கோரிக்கை அடங்­கிய எழுத்­து­மூல உரை­யா­டல்­களை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார். உள்ளூர் ரயில் நிலை­ய­மொன்­றுக்கு …

  13. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…

  14. வானில் பறக்கும் பறவைகள்

    • 8 replies
    • 1.6k views
  15. லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா! தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார். ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது. எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்…

  16. நாயொன்று மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் கம்பளை வெலிவேரிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது . தனது நாய் மூன்று பூனைக்குட்டிகளை பிரசவித்திருப்பதாக அதன் உரிமையாளரான ஜி.கே. சோமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறு பிறந்த மூன்று பூனை குட்டிகளில் ஒன்று பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அதிசயப் பூனைக்குட்டிகளைப் பார்ப்பதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எஞ்சிய குட்டிகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உரிமையாளர் குறிப்பிட்டார். எனினும் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், இது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறியுள்ளனர். http://www.paristamil.com/tamilnews/?p=85307

    • 7 replies
    • 931 views
  17. பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலி…

  18. புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இ…

  19. முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…

  20. அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இதில் பங்குபற்றினர். போட்டியாளர்கள் தமது ஆடைகளைக் களைந்து கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தினர். மக்கள் இயற்கையுடன் ஒன்றித்திருப்பதற்கும் தமது உடல்வடிவ குறைபாடுகள் தொடர்பான கவலைகளை விலகச்செய்வதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்hளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் முதல் தடவையாக இந்த நிர்வாண நீச்சல் நிகழ்வு சிட்னியில் நடைபெற்றபோது அதில் 700 பேர் பங்குபற்றியிருந்தனர். …

  21. ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில் அவர் கண் எதிரே தாலி கட்டினார் மகன். பாதசாரிகளே பார்வையாளர் களாக இருந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஓமலுரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத் (22), சேலத்தில் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் …

    • 7 replies
    • 1.5k views
    • 7 replies
    • 777 views
  22. எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…

  23. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் லண்டன், ஆக. 16- மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது. குழந்தைகள் பற்றியும், கடைகள், உபயோகிக்கும் சோப்புகள், மற்றும் “செக்ஸ்” பிரச்சினைகள் குறித்தும் பெண்கள் பேசுகின்றனர். அதே நேரத்தில் தங்களின் உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடை விவகாரங்கள் குறித்து மட் டும் 24 நிமிடங்கள் விவாதிக்கின்றனராம். ஆய்வு மேற்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் …

  24. தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். படத்தில் இதனை வேடிக்கைக்காக காட்டியிருப்பாhர்கள். ஆனால் நிஜத்திலும் இது போன்று வேடிக்கையான நிகழ்வை வருடாந்த நிகழ்வாக கொண்டாடி சிரிக்க வைக்கின்றார்கள். ஜனவரி 12 ஆம் திகதியை 'No Trousers Day' (காற்சட்டை அணியாத தினம்) என உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. 2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இத்தினம் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவலடைந்து 13ஆவது வருடாந்த 'காற்சட்டை அணியாத தினம்' கடந்த ஞாயிற்றுக்கிழமை கொ…

    • 7 replies
    • 830 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.