செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நவநீதம்பிள்ளையை வளைத்துப் போடலாம் என்ற இலங்கை அரசின் நப்பாசை கை கூடவில்லை. இலங்கை அரச படைகளின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதியாக இருக்கிறார். மனித உரிமை கவுன்சிலில் மேற்கு நாடுகள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தடுப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசு கங்க…
-
- 1 reply
- 482 views
-
-
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது. இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்…
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது - ஒபாமா! "இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் ("ethnic slaughter") தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது." "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. "சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை" - என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை "இனப்படுகொலை" என்பதை ஒபாமா "ethnic slaughter" என்ற ஆங…
-
- 2 replies
- 729 views
-
-
இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார். இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/156146
-
- 1 reply
- 383 views
-
-
இலங்கைக் கடற்கரைகளில் சாதாரணமாக மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழமை ஆனால் வழமைக்கு மாறாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கனிசமான அளவு மீன்கள் பிடிபட்டதுடன் அப் பகுதியில் பல நூறு மக்களும் பார்த்து ரசித்தது இங்கு குறிப்பிடத் தக்கது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1413961166&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 826 views
-
-
அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது. ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி. ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த…
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள், நிதியங்கள் மற்றும் தணை நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு கூடத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட பெட்ரீ குழுவின் மீளாய்வு அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் இந்த மீளாய்வு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க முடியம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net
-
- 2 replies
- 653 views
-
-
இலங்கை இனவிவகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கான தீர்வு ஒன்றினைக் காணும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியாக ஜெர்மனியில் இலங்கையர் ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பினால் இரு நாள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வினைக் காணமுடியாது என்றும் சமாதான முயற்சிகள் தொடர்பில் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். BBC தமிழோசை
-
- 0 replies
- 791 views
-
-
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வழிபடும் சிவன் கோவிலிலுக்குள் புகுந்து சிங்கள ராணுவ வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருகின்றனர். இலங்கை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான தமிழர்கள் வருவார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அந்த கோவிலுக்குள் அதிரடியாகப் புகுந்து கருவரை அருகே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ஆண், பெண் பக்தர்களை அடித்து விரட்டினர். பிறகு அர்ச்சகரிடம் சென்று கோவிலுக்குள் பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது, அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கோவிலை இடித்து தர…
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கை பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் மரணம்! July 12, 201511:27 am ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஃஹூஜிரா என்ற பிரதேசத்தில் இந்த பெண்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/116159.html
-
- 0 replies
- 262 views
-
-
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாடு 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை அண்மித்துள்ளதாகவும், எனினும் இது 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்திலும் 1.8 சதவீதம் குறைவெனவும் குடிசன மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே குடிசன மதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்சனா வித்யாரத்ன இந்த விபரங்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் ; 2006 ஆம் ஆண்டு 7.9 சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வாண்டில் முதற்காலாண்டில் 6.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாய தொழிற்துறை இ…
-
- 0 replies
- 896 views
-
-
நடுவீதியில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிக்கும் காட்களின் அடங்கிய ஒளிநாடா, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற இடம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் வெளியாகவில்லை எனினும், வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. Tamilmirror Online || இது படமல்ல நிஜம் (வீடியோ இணைப்பு)
-
- 6 replies
- 797 views
-
-
அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் என்ற கிராமத்தில் திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளது எல்லோரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியது. இலங்கையில் நடைபெற்ற இத் திருமணம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார். திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் …
-
- 0 replies
- 551 views
-
-
சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார். …
-
- 16 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 375 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
இந்திய நடிகை சன்னி லியோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார். சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (a) https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9/175-361006 பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள…
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529
-
- 19 replies
- 1.8k views
-
-
வெளிநாட்டில் தமது பிள்ளைகளுடன் 70 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பின் இலங்கை திரும்பவிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடு திரும்பாமல் கனடாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ள நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியதும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர், அவசரமாக கனடா சென்றதாகவும், அங்கு அவர் ஒருவார காலம் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் திட்டங்களை கனடாவில…
-
- 0 replies
- 187 views
-
-
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரும் வெளிநாட்டு நபர்கள் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதியை வழங்குவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும், விரைவாகவும் திறமையாகவும் தங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள விரு…
-
-
- 63 replies
- 9.1k views
- 1 follower
-
-
இலங்கை வான்பரப்பில் அடையாளம் காணப்படாத உயிரினம் – கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடைய…
-
- 1 reply
- 381 views
-
-
தற்போது `இன்டர்நெட்' நட்பு, காதல், கல்யாணம் என எதற்கெல்லாமோ பயன்பட தொடங்கி விட்டது. `இன்டர்நெட்' மூலம் நட்பாக பேசிக்கொள்ளும் பலர் பின்னர் காதலித்து திருமணம் வரை செல்கிறார்கள். `இன்டர்நெட்' காதல் மூலம் பலர் இணைந்தாலும், பலர் மோசடியில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என்றே கூற வேண்டும். இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்த பெண் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதில் நடிகை அசின் படத்தை அனுப்பி காதலனை ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் இன்டர்நெட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் சிக்கியவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் தனது பெயரை அர்ச்சனா என அறிமுகம் செய்தார். முதலில் நண்பர்களாக பேசத்தொடங்கிய அவர்கள் பின்…
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள். FacebookTwitterPinterestEmailGmailViber இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும். அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள் இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர் http://newuthayan.com/story/43776.html
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது! யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இதன்போது, கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த…
-
- 0 replies
- 463 views
-