செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது நெல் வயலில் நாக பாம்பு தீண்டிய நிலையில் அந்தப் பாம்பை தேடிப் பிடித்து தானே தன் வாயால் கடித்து கொன்று விட்டார். அதுமட்டுமன்றி நாகம் தீண்டிய அவரும் மருத்துவ மனையில் இருந்து எந்த உயிர் ஆபத்தும் இன்றி விடுவிக்கப்பட்டும் விட்டார். நாக பாம்பு கடித்தால் அதனைக் கடித்து கொன்றுவிட்டால் பாம்பின் விசம் மனிதனைத் தீண்டாதாம்... என்பது இந்த நேபாளி மனிதரின் கருத்து. அதற்காக மக்கள் இவரின் கருத்தை செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாம்புக் கடி கண்டவர்கள் கீழ் வரும் முதலுதவிகளை செய்து கொண்டு அல்லது பெற்றுக் கொண்டு.. தகுந்த மருத்துவ மனையை நாடுவதே சிறப்பு. பாம்பை தேடிப் பிடித்து கடிக்கப் போய் வீணே மரணத்தை தழுவாதீர்கள்..! guidelines issued…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 9, 2012 AT 22:19 மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.…
-
- 3 replies
- 1.6k views
-
-
சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- எனது மனைவி செல்வ செழிப்பானவள். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை மாறவில்லை. என் மனைவி என்னை…
-
- 3 replies
- 741 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்…
-
- 3 replies
- 958 views
-
-
அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்…
-
- 3 replies
- 505 views
-
-
சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…
-
- 3 replies
- 970 views
-
-
காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf
-
- 3 replies
- 669 views
-
-
தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
-
- 3 replies
- 857 views
- 2 followers
-
-
புது டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில பிரபல சாமியார் ராம்பால், பபிதா என்ற இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார் என்று அம்மாநில போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் 42 முறை ஆஜர் ஆகச் சொல்லி ஹரியானா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காமல் இருந்த சாமியார் ராம்பாலை , இறுதியாக ஒரு வாரம் போராடி துப்பாக்கிச் சண்டையிட்டு கடந்த மாதம் 20 ஆம் தேதி கைது செய்தனர் போலீஸார். பின்னர் அவரின் ஆஸ்ரமத்தில் இருந்து ஏராளமான ஆவணங்கள்,ஆயுதங்கள்,கர்ப்பம் கண்டறியும் கருவிகள், மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் கைபற்றப்பட்டன. இந்நிலையில், ஹரியானா மாநில போலீசார், ராம்பாலிடம் உதவியாளராக பணியாற்றிய இளம்பெண் பபிதா வைக் கைது செய்து …
-
- 3 replies
- 1.5k views
-
-
மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது. ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது. விமர்சனம் ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிர…
-
- 3 replies
- 350 views
- 1 follower
-
-
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது. நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தாலும் மேற்சொன்ன பலனே அமையும். நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையு டன் வாழ்வார்…
-
- 3 replies
- 4.3k views
-
-
[size=4]எகிப்து நாட்டில், முழுக்க முழுக்க பெண்கள் பணியாற்றும், "டிவி' சேனல், வரும் ரம்ஜான் மாதத்தில், நிகழ்ச்சிகளை துவக்குகிறது. எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் தலைமையிலான குடும்ப ஆட்சி, கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது.[/size] [size=4]தற்போது, அங்கு ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முகமது முர்சி அதிபராகியுள்ளார். முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில், கடுமையாக கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.[/size] [size=4]இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம்…
-
- 3 replies
- 500 views
- 1 follower
-
-
அங்காரா: விமானியின் உளவியல் பிரச்சனை காரணமாக ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து நடந்ததை தொடர்ந்து கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் படி விமானிகளுக்கு துருக்கி விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அந்த விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி "ஜெர்மன்விங்ஸ் விமானி லுபிட்சை அவரது காதலி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட உளவியல் சிக்களால் தான் அவர் விமானத்தை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. எனவே விமானிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் விமானிகளை விரைவில் திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். மேலும் பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ…
-
- 3 replies
- 724 views
-
-
ஊழல் செய்த அரசியல்வாதியை குப்பைத்தொட்டிக்குள் வீசிய பொதுமக்கள்... நம்ம நாட்டில் இப்படி நடக்குமா.??? https://www.facebook.com/tamilkey/videos/1062299690448184/
-
- 3 replies
- 453 views
-
-
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 15 JUL, 2025 | 05:28 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது. 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) ப…
-
- 3 replies
- 242 views
- 1 follower
-
-
திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ் தலைவர் பலி [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 06:15.46 மு.ப GMT ] பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் ஹபீஸ் முகமது சயீத்(Hafeez Mohammed Sayed). கடந்த அக்டோபர் மாதம், தலிபான் இயக்கத்தில் இருந்து விலகிய இவர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார். அதன் பின்னர் அவர் அந்த இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த தகவலை ஐ.எஸ் அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அங்கு கைபர் பழங்குடியினர் பகுதியில் அமைந்துள்ள டைரா(Taira) பள்ளத்தாக்கில், …
-
- 3 replies
- 766 views
-
-
ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் சகோதரரின் நண்பர் பழகுகிறார் என்பதை அறிந்த பெண்ணின் சகோதரர் தடுத்தார். (இருவரும் அராபியர்கள்) அவர் பழகுவதை நிறுத்த மறுத்தார். ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் தனது நண்பனைப்பார்த்து உன் வாழ்வில் மறக்கமுடியாதது போல் உன் முகத்தில் தளும்பு வைப்பேன் என்று எச்சரித்தார். எச்சரித்தது போல் அடுத்த நாள் வீதியில் வைத்து.......... பாருங்கள்.
-
- 3 replies
- 470 views
-
-
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்பர் அல் கடாபி சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார். கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்க்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடாபி இறந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. டெய்லி மெயில் தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் க…
-
- 3 replies
- 763 views
-
-
கத்தார் தலைநகரில் வீதியில் உலாவிய புலியினால் பரபரப்பு 2016-03-11 10:02:29 கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள பரபரப்பான வீதியொன்றில் புலியொன்று நடமாடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நபர் ஒருவரினால் வளர்க்கப்பட்ட இப் புலி தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று வீதியில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது. இப் புலி வீதியில் நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒளிப்பதிவுகள் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்த…
-
- 3 replies
- 432 views
-
-
ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த …
-
- 3 replies
- 472 views
-
-
காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முன…
-
-
- 3 replies
- 459 views
-
-
ஒரு முக்கிய வேண்டுகோள்! முகநூலை எத்தனை பேர் தமிழில் பயன்படுத்துகின்றார்கள்? முகநூலில் மொழிபெயர்ப்புச் செயலிக்கான பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பாருங்கள்!! "By helping translate Facebook, you are helping 56 of your friends who may be using it in தமிழ்." என்ன 56 பேர்தான் தமிழைப் பயன்படுத்துகின்றார்களா??!! குறைந்தது 500,000 தமிழர்களாவது தமிழில் பயன்படுத்தியிருக்க வேண்டும்! தமிழில் பயன்படுத்தவில்லை எனில் அந்தச் சேவை கிட்டாமலே போகலாம். அருள்கூர்ந்து *உடனே* முகநூலில் மேற்பகுதியில், வலப்புறம் உள்ள பொத்தான்களில் சக்கரம் போல் தெரிவதைச் சொடுக்கி Account Settings என்னும் பகுதிக்குப் போய், அங்கு மொழியைத் தமிழ் என்று மாற்றுங்கள்!! தமிழ் தமிழ் என்று பேசினால் போதாது. எளிதாகச் செய்யக்கூட…
-
- 3 replies
- 578 views
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 614 views
-
-
இன்று உலக இட்டலி தினம்.. இட்டலி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது ..! சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. தயார் ஆண்டுதோறும் விதவிதமாக …
-
- 3 replies
- 643 views
-
-
62 வருடங்களாக இணைந்து வாழ்ந்த தம்பதியினர் 20 நிமிட இடைவெளியில் இறந்தனர் 2016-08-11 11:31:27 62 வருடங்களாக தம்பதியினராக வாழ்ந்த வயோதிபர்கள் இருவர், 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 87 வயதான ஜெனட் டி லாஞ் எனும் பெண் நீண்டகாலமாக அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மிசோரி மாநிலத்தின் டகோட்டா நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறன்று 31 ஆம் திகதி மாலை 5.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஜெனட்டின் கணவரான ஹென்றி (85 வயது) அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். …
-
- 3 replies
- 280 views
-