மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/ஈகியர்/0 கருத்து யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் சிங்கள அரச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழீழ விடுத்தலுக்கு ஆதரவாக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தமிழினத் தியாகி அப்துல் ரவூப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம். நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..! Last updated May 14, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையி…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னடம்பன் பகுதியில் நிலை கொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலில் 12 போராளிகளும், கரிப்பட்ட முற…
-
- 5 replies
- 1.2k views
-
-
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... !! வீரப்பிறப்பு: 14.11.1967 வீரச்சாவு: 02.04.1987 இயற்பெயர்: ஞானசேகரம் லக்ஸ்மீகரன் இயக்கப் பெயர்: வீரவேங்கை பாலச்சந்தர் 1967 கார்த்திகைமாதம் 14 ம் திகதி தாய்மண்ணில் உதித்திட்ட உங்களுக்கு தாய்தந்தை சூடியபெயர் லக்ஸ்மீகரன் நீங்கள் வளர்ந்ததோ ஒருபுறம் சோலையாலும் மறுபுறம் கடலாலும் சூழ்ந்த பிரதேசமான வெற்றிலைகேணியில், பால்போன்று வெள்ளை நிறம் கொண்ட எங்கள் சொந்தமண்ணில் நீங்கள் என் கை விரல் பிடித்து எனக்கு எழுதி பழக்கியத்தை என்னால் இன்று மறக்க முடியவில்லை ஆனால் இன்று தனிமையில் பேப்பரில் பேனா பிடிந்து எழுத விட்டுவிட்டீர்களே! உங்களைப்பற்றி மிக சிறு வயதில் இருந்தே எல்லா துறைகளிலும் திறமையாக செயல் ஆற்றி வந்தீர்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
வெள்ளி, 7 அக்டோபர், 2011 06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவண…
-
- 12 replies
- 1.2k views
-
-
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர். இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73மி.மீட்டர்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதிவேகமான பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி - ஆயுதங்களுக்கு பொறுப்பாளன், முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன், மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி இருபத்திஏழு வருடங்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
கற்பிட்டிக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் நளாயினி உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் யாழ்ப்பாணத்தில் காவியமான கப்டன் மயூரனினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க்கப்பலை மூழ்கடித்து கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி - ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி - முள்ளியான், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி) (கந்தசாமி ரவிநாயகம் - கோயில்போரதீவு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்) (குகதாசன் பிரணவன் - நல்லூர…
-
- 10 replies
- 1.2k views
-
-
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ். கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட தளபதி ரமேஸ் (துரைராஜசிங்கம் தம்பிராஜா) 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
மறக்காமல் சொல்லுவோம்-பரமபுத்திரன்… September 24, 2019 போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் நடந்த விடுதலைப்போராட்டம்தான் எம்மை இந்த வெறுப்புக்கு ஆளாக்கியது என்று எல்லோரும் சுலபமாக சொல்லிடுவர். ஆனால் போரும் போராட்டமும் மனித வாழ்கையில் மட்டுமல்ல புவியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் பொதுவானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையுடன் போராடினால்தான் எம்மை நிலைப்படுத்தமுடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. உணவு, பாதுகாப்பு, வாழிடம், சந்ததி நிலைப்படுத்தல் என எல்லாவற்றுக்கும் போராடியே ஆகவேண்டும். இருப்பின…
-
- 0 replies
- 1.2k views
-
-
29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் - பாண்டிருப்பு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் - தம்பிலுவில், அம்பாறை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசி…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
கரும்புலிகள் சிறப்பிதழ் நன்றியோடு தேசக்காற்று....! தேசக்காற்று இணையத்தில் சென்று மாவீரர்களின் விபரங்கள் நினைவுகள் பகிர்வுகள் யாவற்றையும் பார்க்கலாம். இதுவரையில் வெளிவராத பல்வேறு வகையான தேசத்தின் நினைவுகள் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றின் பாதையில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான ஒரேயொரு இணையத்தளம்....! http://thesakkaatu.com/doc1767.html கரும்புலி நாள் சிறப்பிதழ் ----------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் …
-
- 6 replies
- 1.2k views
-
-
‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுத…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கையின்போது 14.07.1991 அன்று வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 15 மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.07.1991 அன்று ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கை விடுதலைப் புலிகளால் தொடங்கப்பட்டது. இந் நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரின் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது. கடற்படைக் கலங்களிலிருந்தும் தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் முன்னகர்ந்த படையினருக்கு எதிராக திரமுடன் களமாடி 15 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர…
-
- 10 replies
- 1.2k views
-
-
பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி) (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல்…
-
- 10 replies
- 1.2k views
-
-
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! லெப்கேணல் மணிவண்ணன் அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது.…
-
- 1 reply
- 1.2k views
-
-
18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 4ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் 15ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இ…
-
- 5 replies
- 1.2k views
-
-
வீரவணக்கம் 01/08/1997 தனது உணர்வுதழும்பும் குரலால் போராளிகளின் உள்ளத்தில் மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டவன். சிட்டுவின் பாடலை எல்லாப் போராளிகளின் வாய்களும் முணுமுணுக்கும் அளவுக்கு அவனின் குரல் இடம்பிடித்திருந்தது. அவனுக்கு நிகர் அவனேதான் அவனுடைய பாடல்களுக்குப் பின்னர்தான் எந்தப் பாடலும், எந்தக் குரலும். எங்கள் மூத்த தளபதி கேணல் கிட்டண்ணைக்காக அவன் பாடிய பாடலான... தளராத துணிவோடு களமாடினாய்-இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய், எனும் பாடல் தலைவரின் கண்களைக் கசியவைத்திருந்தது. சிட்டு நீ என்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பாய். நினைவுகளுடன்... ஓமந்தையில் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் இனத்தின் வீரத்தை வரலாற்றில் பதிந்த நாள் விடுதலைக்கு உயிர் கொடுத்து உரமாகிப்போன உத்தமர்களின் நாள் அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக அலையென எழுந்த ஆத்மாத்த வீரர்களின் நினைவு நாள் தாயக மண்ணை தாயாக கருதி அவள் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தங்களை ஆகுதி ஆக்கிய எங்கள் மறவர்களின் நாள் தாயக மண்ணில் மீண்டும் பெரும் விருட்சமாக எழுந்திட விதையாகிப்போன எங்கள் கண்மணிகளின் நாள் வரிப்புலியாகி விடுதலை வேண்டி வீரத்தின் சாதனைகளை தலைவன் வழியில் நிலைநாட்டிய வீரப்புதல்வர்களின் நாள் உங்களிற்காக குனிந்த எம் தலைகள் மீண்டும் தாயக பயணம் நோக்கி நிமிர்கின்றன தாயக விடுதலைக்கு எங்களால் முடிந்த வரை உழை…
-
- 2 replies
- 1.2k views
-
-
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசற…
-
- 11 replies
- 1.2k views
-
-
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு - தமிழ்விக்கிபீடியா கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம். இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2] மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தா…
-
- 10 replies
- 1.2k views
-