மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
கடற்கரும்புலிகள் மேஜர் இளமகன் , மேஜர் அன்பு , மேஜர் சந்திரா , மேஜர் வினோதா , மேஜர் வலம்புரி , கப்டன் சித்தா , கப்டன் அருளரசன் , கப்டன் சுதாகர் ஆகிய கடற்கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. மனமே !… மறந்து விடாதே…. 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc7728.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீர…
-
- 10 replies
- 1.9k views
-
-
சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளு…
-
-
- 5 replies
- 1.1k views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதி லெப் கேணல் வீரமணி அவர்களின் 7 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 24-05-13 சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு. சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால…
-
-
- 20 replies
- 4.1k views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவர…
-
-
- 15 replies
- 2.1k views
-
-
கேணல் ரமணன் வீரவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம்இ நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க …
-
- 14 replies
- 3.6k views
-
-
வணக்கம் உறவுகளே. மே 18ந்திகதி அவலத்தின் ஆரம்பநாள். அதை நினைவு கூர்ந்து நாளை அமைதியாக இருப்போம். அவர் சார்ந்த பாடல்களைக்கேட்போம். அமைதி வணக்கம் செலுத்துவோம். http://www.youtube.com/watch?v=-fea4DaYd9A
-
-
- 20 replies
- 1.4k views
-
-
பிரிகேடியர் சொர்ணம் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை. எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன். அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. போராளி போராளி புலிபடையின் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில்…
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலை…
-
- 9 replies
- 1.2k views
-
-
மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படை களுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர…
-
- 2 replies
- 654 views
-
-
விழியில் சொரியும் அருவிகள் எம்மை விட்டு பிரிந்தன குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் திருமலையில் வெடியாய வெடித்தனர் தம்பி கதிரவன் எங்கே ?…. தணிகைமாறனும் எங்கே ?… மதுசாவும் எங்கே ?… தங்கை சாந்தா நீ எங்கே ?… தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் … விழியில் சொரியும் அருவிகள் … ” உயிரிராயுதம் தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “ ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 04 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! வ…
-
- 4 replies
- 886 views
-
-
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசற…
-
- 11 replies
- 1.2k views
-
-
2009 வருடம் இதே மாதம் 04 தேதி கண்ணீராலும் செந்நீராலும் ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள் உலகின் நயவக்ஞ்சகத்தாலும் சிங்களனின் கோழைத்தனத்தாலும் ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை பறிகொடுத்து துயரில் தொலைந்தோம் அன்று தொலைந்த நாம் இன்றுவரை மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம் தமிழின வரலாற்றை... தமிழின வீரங்களை... கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை நினைவேற்றி வணங்குகின்றோம். ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள் இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.
-
- 17 replies
- 3.2k views
-
-
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் …
-
- 12 replies
- 1.9k views
-
-
22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி முல்லைத்தீவு கடற்கர…
-
- 4 replies
- 889 views
-
-
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம் https://www.fac…
-
- 5 replies
- 2.3k views
-
-
20.02,2009 அன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான் படைத் தளம் மீதும் வான்புலிகளின் கரும்புலித் தாக்குதல் இதில் வீர காவியமான கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் இவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
-
- 13 replies
- 3.3k views
-
-
தோல்வியில் மீளுவோம் ************************ நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர் மட்டுமே…
-
- 3 replies
- 860 views
-
-
1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வி…
-
- 16 replies
- 4.3k views
-
-
தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்துஎட்டு ஆண்டுகள் ஆகிறது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழ…
-
- 15 replies
- 2.2k views
-
-
வீரவேங்கை - ராஜ்மோகன் வீரச்சாவு - 20 தை 1984
-
- 5 replies
- 743 views
-
-
“ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன” “அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான். போராடினான்” “போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது” “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” “நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக நான் அவனை நேசித்தேன்.” “எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது” “அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது” “அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு…
-
- 8 replies
- 948 views
-
-
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...! www.facebook.com/karumpulimaveerarkal கரும்புலிகள் உயிராயுதம்
-
-
- 4 replies
- 1.8k views
-
-
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார். “என்னம்மா செய்யுது என்ன, சாப்ப…
-
-
- 15 replies
- 1.5k views
-