மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
2009 வருடம் இதே மாதம் 04 தேதி கண்ணீராலும் செந்நீராலும் ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள் உலகின் நயவக்ஞ்சகத்தாலும் சிங்களனின் கோழைத்தனத்தாலும் ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை பறிகொடுத்து துயரில் தொலைந்தோம் அன்று தொலைந்த நாம் இன்றுவரை மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம் தமிழின வரலாற்றை... தமிழின வீரங்களை... கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை நினைவேற்றி வணங்குகின்றோம். ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள் இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.
-
- 17 replies
- 3.2k views
-
-
22.09.1998 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் அருணா(அருணன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், 22.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் புத்தொளி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்ம மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் ஒளிப்படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 17 replies
- 3.1k views
-
-
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பி…
-
- 6 replies
- 3k views
-
-
மாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளது.ததொடர்ந்தும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது. இன்நிலையினை உணர்ந்த மக்கள் எந்தெந்தக்காலகட்டத்திலெல்லாம் தமிழீழம் என்ற உணர்வோடு மக்கள் புரட்சியின் உச்சத்திற்கு வருகின்றார்களோ அந்தந்த காலகட்டத்திலெல்லாம் சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தின் வீச்சை தணித்து பலவீனமான போராட்டமாக மாற்ற முனைந்தார்கள் இதர்க்கு சரியான தெளிவில்லாத தமிழர்களும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்தார்கள் இதனால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்தான் எமது போராட்ட பாதையில் நிரம்பி வழிகின்றது. இந்த கவலையை தியாகதீபம் அன்றே வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் இந…
-
- 17 replies
- 3k views
-
-
அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்க…
-
- 14 replies
- 3k views
-
-
15.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் விடுதலை அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 19 replies
- 2.9k views
-
-
ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுச…
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் இக்கரும்புலிகள் பற்றிய குறிப்பு உயிராயுதங்களிலிருந்து...
-
- 9 replies
- 2.9k views
-
-
சுப்பரமணியம் வடிவேல் வவுனியா தாயின் மடியில் - 12.7.1975 மண்ணின் மடியில் - 24.5.2006 சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயி…
-
- 20 replies
- 2.9k views
-
-
தமிழீழம் - இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல.வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும் ‘நம்மடது’ தான் – தமிழீழம் ஒன்று தான்! வாளேந்திய சிங்கம்’ தானேந்திடும் வாளால் துண்டாக்கிப்போட்ட பின்பு, கூட்டாகிச் ‘சங்கம்’ அமைக்க – இது சோவியத் சாம்ராஜ்ஜியமும் அல்ல; துகள்க்ளாக்கிப் பிளவுபடுத்தி சீரழித்துச் சிதைத்துவி…
-
- 13 replies
- 2.9k views
-
-
போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகி…
-
- 10 replies
- 2.9k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் இரண்டாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்ப…
-
-
- 18 replies
- 2.8k views
-
-
கார்த்திகை 2017 மாவீரர் வாரம் ஆரம்பம் எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே இந்த வாரம் மாவீரர்களை நினைந்து அவர்களை மனதிலிருத்தி பாடல்களைக்கேட்போம்
-
-
- 8 replies
- 2.8k views
-
-
19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்(19.09.2010) கீழேயுள்ள படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
-
- 10 replies
- 2.8k views
-
-
லெப்.கேணல் நீலன் (பிறந்தநாளில் உயிர் தந்த மாவீரன்) பெப்ரவரி 8, 2014 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வெற்றிகளின் பின்னால்…. ” உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக…
-
- 1 reply
- 2.8k views
-
-
நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : / காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்! http://youtu.be/wxMW1ZRPL98
-
- 10 replies
- 2.7k views
-
-
கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!! என்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார். அந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும். இப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள். அந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்... இதனை கூறியவர் 1985 …
-
-
- 2 replies
- 2.7k views
-
-
இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது.. உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்.... எல்லா இழப்போடும் இதுவுமொரு பேரிழப்பே யார் இட்ட சாபம் இது..? வீரவணக்கம் அண்ணா.. http://www.youtube.com/watch?v=hwq83qE93_w
-
-
- 20 replies
- 2.7k views
-
-
நாளை கரும்புலிகள் நாள் , தகர்க்க முடியாத எதிரியின் இரும்புக் கோட்டைகளைத் தமதுயிரை ஆயுதமாக்கித் தகர்த்து எறிந்த வீர மறவர்களின் நாள். 1987 ஜீலை ஐந்தாம் நாள் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவக் காம்ப் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்றக் இனால் மோதியதன் மூலம் புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அந்த இமாலய சாதனையைச் செய்தவன் துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் எனப்படும் கப்டன் மில்லர் ஆவார். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார் மில்லர். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் இரா…
-
-
- 15 replies
- 2.7k views
-
-
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர். தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
-
- 19 replies
- 2.6k views
-
-
தாயக விடுதலைக்காக தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்களை தனித்தனியாக இணைக்கத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக 1982 முதல் 1986 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விபரங்களைப் பார்க்க http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist
-
- 19 replies
- 2.6k views
-
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்...கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிக…
-
- 6 replies
- 2.6k views
-
-
16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “அபித” கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணியினால் சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிற…
-
- 20 replies
- 2.6k views
-
-
யாழ். வலிகாமத்தில் 30.10.1995 அன்று சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து வழிமூடிய இந்த வீரவேங்கைளிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 2.6k views
-