மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளை கரும்புலிகள் நாள் , தகர்க்க முடியாத எதிரியின் இரும்புக் கோட்டைகளைத் தமதுயிரை ஆயுதமாக்கித் தகர்த்து எறிந்த வீர மறவர்களின் நாள். 1987 ஜீலை ஐந்தாம் நாள் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவக் காம்ப் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்றக் இனால் மோதியதன் மூலம் புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அந்த இமாலய சாதனையைச் செய்தவன் துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் எனப்படும் கப்டன் மில்லர் ஆவார். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார் மில்லர். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் இரா…
-
-
- 15 replies
- 2.8k views
-
-
17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/...ical/2011/11/17 தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 1.3k views
-
-
“நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோர…
-
- 0 replies
- 281 views
-
-
21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் - பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் - உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் - நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் - ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் - சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்ட…
-
- 16 replies
- 1.4k views
-
-
2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி நவம்பர் 7, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள், வழித்தடங்கள்/0 கருத்து சுதந்திரத்தைத் தேடி 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன். வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள். மயூரி மாநிறம் நல்ல சொக்கு. பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள். இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணிய…
-
- 1 reply
- 547 views
-
-
அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!! என்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார். அந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும். இப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள். அந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்... இதனை கூறியவர் 1985 …
-
-
- 2 replies
- 2.7k views
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/05/ இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய இவ் வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 11 replies
- 1.7k views
-
-
தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். …
-
- 0 replies
- 193 views
-
-
நினைவழியா நினைவுகள் ! மட்டுநேசன் ம் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பித்தது. பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையான சகல பொலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்குஇலக்காகின . வடக்கில் இராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின. யாழ். கோட்டை முகாமும் அவற்றில் ஒன்று. தொடராக நிகழ்ந்த தாக்குதல்களில் இம்முகாம் மீது 1990. 08. 05 ஆம் நாளன்று நடத்தப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதில் 31 போராளிகள் மாவீரர்களாகினர். ஒரே இயக்கப் பெயரைக் கொண்ட இரு போராளிகள் இத்தாக்குதல் முயற்சியில் பங்குபற்றினர். இந்த இருவரில் ஒருவர் வீரச்சாவடைந்தார். அவரது வித்துடலை மீட்க முடியவில்லை. மற்றவர் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார். தாக்குதலின் முடிவ…
-
- 1 reply
- 1k views
-
-
பார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்த…
-
-
- 13 replies
- 1.7k views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போது…
-
- 1 reply
- 1.2k views
-
-
எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater
-
- 1 reply
- 1.4k views
-
-
மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வி…
-
-
- 15 replies
- 3.4k views
-
-
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 1 || படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 1 என்ற பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…
-
- 7 replies
- 895 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) மற்றும் புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது….. வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் 03.08.1997 அன்று சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 4 replies
- 801 views
-
-
குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 5, 2021 இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்…
-
- 0 replies
- 731 views
-
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித் நெடுமாறன் ஐயா வன்னிக்கு வந்து தமிழகம் திரும்பும்போது அவருக்கு பாதுகாப்புக்காக ஜீவன், சபா, மற்றும் லோரன்ஸ், லலித் மன்னார் சென்று பாதுகாப்பாக விக்ரர் அண்ணாவிடம் நெடுமாறன் ஐயாவை விட்டு விட்டு திரும்பி வந்தபோது வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் கொப்பேகடுவ தலைமையில் பதுங்கி தாக்குதலின் போது. தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
-
-
- 13 replies
- 1.5k views
-
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அரு…
-
-
- 6 replies
- 3.6k views
-
-
-
-
- 38 replies
- 7.2k views
-
-
1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
-
-
- 7 replies
- 1.4k views
-
-
(01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள…
-
- 1 reply
- 302 views
-
-
பிரிகேடியர் தீபன் வேலாயுதபிள்ளை பகீரதகுமார் தமிழீழம் (யாழ் மாவட்டம்) வீரப்பிறப்பு:08.01.1966 வீரச்சாவு :04.04.2009 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின் (வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். http://www.tamilwin.com/photos/full/2009/06/theepan1.jpg" style="margin-left: 1em; color: #000000; margin-right: 1em…
-
- 5 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 349 views
-
-
வெள்ளி, 7 அக்டோபர், 2011 06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவண…
-
- 12 replies
- 1.3k views
-