Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொடரும் தவிப்பு. (உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது) - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல... நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி…

  2. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாய் இருந்த போதும் காலாதிகாலமாக தமிழ் பல மொழிகளிடம் இருந்து சொற்களை வாங்கி தன்னை வளப்படுத்தியே வந்திருக்கிறது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் பண்டைத் தமிழரின் பரந்த மனோநிலையும் இதற்கு ஒரு காரணம். வடமொழி முதல், மலாய், டச்சு, போர்த்துகீசு, ஆங்கிலம் என பல மொழிகளிடம் இருந்து சொற்களை சுவீகரித்து அவற்றை “திசைச் சொற்கள்” என இலக்கணப்படுத்தியும் வைத்துள்ளது தமிழ். ஆனால் இந்த போக்குவரத்து ஒன்றும் ஒரு வழிப்பாதை அல்ல. ஏனைய மொழிகளும் தமிழிடம் பல சொற்களை இரவல் வாங்கியுள்ளன என்பது மறுக்கவியலாத உண்மை. சொற்களை மட்டுமல்ல, இன்று மலாய், பாசா இந்தோனேசியா என இரு சிறு மொழிகளாய் பிரிந்து கிடக்கும் மலாய் மொழி, ஒரு காலத்தில் தமிழ் பல்லவ எழுத்துருக்…

    • 7 replies
    • 3.5k views
  3. கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் -முனைவர். மா. தியாகராசன். முன்னுரை சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது. சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவ…

  4. எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது. இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பி.எஸ்.ராமையா இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய…

    • 2 replies
    • 3.5k views
  5. நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு முன்னுரை. தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும். தோழி தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர். தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்ற…

    • 0 replies
    • 3.5k views
  6. தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழ…

  7. எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.! தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? "19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை …

  8. முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம் (“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்”) உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே. மாரீசன் …

  9. ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்?

  10. இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை நன்றியுடன் போற்றும் தினமாகும். இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ் பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல்…

  11. தமிழ்விடு தூது தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. 3.1.1 நூல் கூறும் பொருள்கள் தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல். பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல். …

  12. வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன். படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்) 3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு 4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன். 5) குஞ்சாகப் பொர…

    • 9 replies
    • 3.3k views
  13. Started by akootha,

    பழந்தமிழ் இலக்கியத்தில் எனக்குப் புரியாதவள் ‘தாய்க் கிழவி’. பிரபந்தங்களில் கணிகை ஆடல் அழகியாக இளவயதினளாகச் சித்தரிக்கப்படுவாள். அவளுடைய தாய், கிழவியாக, க்ரூபியாக இருப்பாள். பாட்டுடைத் தலைவனுடைய மனத்தைக் கவர்ந்து கைப் பொருளை இழக்க வைக்க அவள் தான் கணிகைக்கு வழி சொல்லித் தருவாள். பொருள் எல்லாம் போனபிறகு அவனை வீட்டை விட்டு இறக்கிவிட முன்முயற்சி எடுப்பவளும் இந்தத் ‘தாய்க் கிழவி’யே. வர்ணனைகளை வைத்துப் பார்த்தால் கணிகைக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும். அவளுக்கு அம்மா ‘தாய்க் கிழவி’. தாராளமாக சிக்ஸ்டி ப்ளஸ் வயசு சொல்லலாம். ஆக தாய்க்கும் மகளுக்கும் வயசு வித்தியாசம் நால்பத்தஞ்சு. அப்போ, 45 வயதிலா பிள்ளை பெற்றுக் கொண்டாள்? இந்த ‘சிந்தனை’யின் நீட்சி, பழந்தமிழ் இலக்கியத்த…

  14. முதிர்கள்ளி முரிமுள்ளி முதல்வாகை முதல்ஈகை முட்காரைவேல் வெதிர்நெல்லி விடத்தேறு வெட்பாலை இவையெல்லாம் இரணிய வதைப் பரணியில் கூறப்படும் பாலை நிலத்து மரங்கள். இதில் வாகை என்ற மரம் தமிழர்களின் களிப்பை உணர்த்துவதாகும். சங்க காலத்தில் போரில் வெற்றிப் பெற்றால் மன்னரும் வீரரும் வாகைப் பூவை சூடி வெற்றிக் களிப்பை கொண்டாடுவார்கள் என இலக்கியங்களில் காணப்படுகிறது. இன்றும் "வெற்றி வாகை சூடினான்" என்று பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். வெற்றிப் பெற்றவர்கள் வாகைப் பூவை சூடுவதாலே இந்தப் பெயர் வந்தது. இது பாலை நிலத்திற்குரிய பூவாகும். இது விடுதலைப் புலிகளின் காலத்தில் தேசிய மரமாகவும் கொண்டாப்பட்டது. மேலும் இது வெட்சி, கரந்தை, தும்பை, வாகை என புறத்திணைகளில் ஒரு வகையாகும். இதில் …

  15. 1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" *** இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும் குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள் பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன், …

  16. மறைக்கப்பட்ட வரலாறுகள் மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்.... உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புத…

    • 1 reply
    • 3.3k views
  17. தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…

  18. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி படைப்புகள் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0193.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 1 /பூகம்பம் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0194.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 2 /காஞ்சி முற்றுகை http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0195.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 3 /பிக்ஷுவின் காதல் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0201.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 4 /சிதைந்த கனவு ------------------------------------------------------------------------------------------------------------ http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0214.pdf பார்த்திபன் கனவு /பாகம் - 1-2 h…

  19. 'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' : வேந்தன் சரவணன் on 01-07-2009 06:23 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம். 'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே' ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு…

  20. கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்

  21. Started by pryanka,

    தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…

  22. "உயர் வள்ளுவம்".பற்றிய இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.

  23. அபிராமி பட்டர் விழாவை ஒட்டி பிரசூரிக்கபடுகிறது..09.02.2013. அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஒரு இந்து மத துறவி ஆவார். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது. சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் த…

  24. இணையத்தில் மனம் போன போக்கில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும்போது சட்டென்று பாரதிதாசனின் இந்த கவிதை தென்பட்டது. ஏற்கனவே படித்த ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடலெங்கும் ஒரு பரவசம்... இந்தப் பரவசம் உங்களையும் தழுவட்டும்... இந்தப் பாடலை வாசித்தும் பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்தது. பெண்கள் நீலவண்ண பாவாடை அணிந்து வெண்ணிற சட்டை அணிந்து வருவார்கள். இந்த உவமை சரியா வரும்தானே "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை" நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்…

  25. Started by nunavilan,

    ஆத்திசூடி 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14.…

    • 5 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.