பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட தடுபடையான கேடகங்கள் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கேடகங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கடகம்/ கடகு/ கேடகம்/ கேடயம்/ சேடகம்/ வட்டணை - அனைத்து விளிம்புகளும் வளைந்து தொடுமாறு வளைவாக அமைக்கப்பட்ட சிறிய வட்ட வடிவ கேடகம் "கேடகம் வெயில்வீச' - (கம்பரா. கடிமண. 33) "மயிர்ப்புளக சேடகமு மேந்தி" (சூளா. அரசி. 159) "இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்" (கலிங்.413), (யாழ்.அக.) "கடகு" - (சீவக.2218, உரை) "கடகம்" - (திவா.) 2)கடிகை/ கடித்தகம் - மிகுந்த காவலான அரணைத் தரும் கேடகம் "கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் காவல்" (பெருங். உஞ்சை.53:14…
-
- 0 replies
- 4.9k views
- 1 follower
-
-
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான் எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும் சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள வேற்றுமையான் – வேற்றுமைகளால் எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது . யாதும் ஊரே, யாவரும…
-
- 0 replies
- 4.9k views
-
-
கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை. http://images.rgs.org/search_.aspx?eventID=55
-
- 18 replies
- 4.9k views
-
-
சாதிக்கொடுமைகளுக்கும் சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் தமிழின் எதிரிகளுக்கும் எதிராக 18 ம் நூற்றாண்டின் இறுதிகளிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கவிதைச்சாட்டை மூலம் தன் அறச்சீற்றத்தை சுழட்டியவன்...தமிழை சுவாசித்த மீசைக்கவிஞனின் நினைவு நாள் இன்று..என் பால்யகால வகுப்புகளில் பாரதியின் கவிதைகளை என் வகுப்பு ஆசிரியைகள் பாடிக்காட்டி தமிழ்சுவையை ஊட்டியதும் தமிழின் மேல் எனக்கு ஈர்ப்பு வர காரணம்..என்போல் ஆயிரம் ஆயிரம் பேருக்கும் தமிழ் இனிக்க நீயும் ஒருகாரணமாய் இருந்திருக்கலாம்..நாளை நாமில்லாபொழுதொன்றில் நம் தலைமுறையின் தலைமுறையும் உன் பாடல்களை பாடிவளர்வார்கள்.. தலைமுறை தலைமுறையாக தமிழ் வாழும்வரை பாடுவார்கள் அவர்களின் தலைமுறைகளும்..என்ன ஒரு நெருடல் உன்மேல்..பக்கத…
-
- 4 replies
- 4.8k views
-
-
கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும். இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற…
-
- 3 replies
- 4.8k views
-
-
பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்? - சாமிநாதன் - தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல் படம், ஜாவாவில் கப்பல் சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ் நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரிகளின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹியான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தமிழர்களின…
-
- 3 replies
- 4.8k views
-
-
எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு இன்று இணையப்பரப்பில் அலம்பும் கூட்டங்களுக்கு ஒரு கருவாக அமைந்து விட்டது சாதி. அதுவும் ஈழத்தமிழர்களிடையே சாதியம் பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்வெழுதி தள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் என்ன செய்கின்றனர்? முதலில் இந்;த சாதிய பிரச்சினைகள் பற்றி விவாதம் “உணர்வுகள்” என்ற இணையத்தில் ஆரம்பித்தது. என்று நினைக்கிறேன் சாதியம் இல்லை என்று அவர் வாதிட, அது இருக்கிறது என்று இன்னும் சிலர் வாதிட வாதாட்டம் இணையங்களிலும் தொற்றி கொண்டது. கருத்துக்களத்தில் கருத்துக்கள் பல பரவின. இதற்காகவே பலர் பல பிறவிகள் எடுத்து கருத்தை வைத்தனர். அனைவரும் சாதியத்தை அழிக்க பிறப்பெடுத்தவர்கள் என்றால் அது பொய். உண்மையில் சாதியத்தை அழ…
-
- 30 replies
- 4.8k views
-
-
குறள் கூறும் 'அறவாழி அந்தணன்' ஆரியப்பிராமணரா? - குறள் ஆய்வு-3. பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "TIRUKKURAL - An Abridgement of Sastras" என்னும் தமது நூலின் எட்டாவது பக்கத்தின் இறுதியில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்: "There is a Kural which - அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.) It means that unless one takes refuge in the feet of the Antanan, who wields the chakra, it is difficult to get over the birth. Here, it may be interpreted that the lotus feet of Vishnu who…
-
- 3 replies
- 4.7k views
- 1 follower
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று பதிவு ஒன்று ஒளிப்பதிவில் இணைத்துள்ளேன், ஒவ்வொரு தமிழனும் நிச்சியம் பார்க்கவேண்டிய பதிவு. பார்த்துவிட்டு உங்கள் உணர்வுகளை இங்கு எழுதுங்கள் உறவுகளே! ஒளிப்பதிவின் இணைப்பை இங்கே அழுத்தி பெறவும்
-
- 26 replies
- 4.7k views
-
-
பெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை! - குறள் ஆய்வு-7, பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்கா"ரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறள் 'உலக ஆண்களுக்கான பொதுமறை'யா? "'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது! திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி!" என்று படபடத்தார் நண்பர். "என்னாச்சு! காலையிலேயே வள்ளுவரை வம்புக்கு இழுக்கிறாய்!", என்றேன் சிரித்துக்கொண்டே. திருக்குறள் அறிவுக்குப் பொருந்தாத பெண்ணடிம…
-
- 3 replies
- 4.7k views
- 1 follower
-
-
சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை கேள்வி : ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே பதில் :அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர். பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை. வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்…
-
- 2 replies
- 4.7k views
-
-
ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக விஸ்ரூபமெடுக்கக்கூடும். சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன. அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்…
-
- 1 reply
- 4.6k views
-
-
தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல் இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை நோயிலிருந்து காப்பதாக இருக்கட்டும், நவீன போக்குவரத்து வாகனங்களை வடிவமைப்பதாக இருக்கட்டும், எதிரி நாட்டின் மீது சரியாக குறி பார்த்து எய்தும் ஏவுகணைகளை வடிவமைப்பதாக இருக்கட்டும் வானில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்துவதாக இருக்கட்டும் இப்படி எல்லாவற்றிலும் அறிவியல் அறிவின் தேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதையும் தாண்டி ஆகாயத்தில் நகர்ந்துகொண்டேயிருக்கும் ஏவுகணைகளை எப்படி சரியாக குறிபார்த்து அடித்து வீழ்த்துவது என்று இயக்கவியல் அறிவை கணிதச் சமன்பாடுகள் வாயிலாக நமக்கு அறிவியல் சொல்லித்தருகிறது. இந்த இயக்கவியல…
-
- 2 replies
- 4.6k views
-
-
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத…
-
- 0 replies
- 4.6k views
-
-
இலங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியா, இலங்கை முழுவதையும் ஆட்சி புரியத் தொடங்கியதுடன், 1815 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை 'சிலோன்' எனப் பெயரிட்டு ஆண்டது. இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பலர் சிறந்த கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வியை இலங்கையில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலானவர்களே பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மக்கள் அதிகளவான கல்வியறிவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களில் காலத்தில் ஏற்பட்ட கல்வியறிவு காரணமாக 1870 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College…
-
- 0 replies
- 4.6k views
-
-
தாயக விடுதலை கானங்களில் இருந்து: மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.... சுதந்திரம் உயிர் மூச்சென்றே …
-
- 1 reply
- 4.5k views
-
-
இது கதையல்ல கலை - 1 பல வருடங்களாகச் சரித்திரக் கடலில் ஆழ்ந்து, வரலாற்று உண்மைகளென்னும் பல விலை மதிக்க முடியா முத்தெடுக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினருடன் வரலாற்று ஆய்வின் முதல் படியில் காலெடுத்து வைக்க விழையும் வரலாறு.com குழுவினராகிய நாங்கள், இந்த வருடம் ஜூன் - 12,13 தேதிகளில் சென்று, கண்டு களித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை, இணைய வாழ் தமிழ்ப் பெருங்குடியினரிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்த கட்டுரை. முனைவர். கலைக்கோவனின் (தட்ட்ச்சு வசதிக்காக இக்கட்டுரை முழுவதும் இவரை டாக்டர் என்று குறித்திருக்கிறோம்) கிளினிக்கில் பல்லவர்களைப் பற்றிய உரையாடலிலேயே ஜூன் - 12-ம் நாள் முழுதும் கரைந்தது. மகேந்திரரின் மகோன்னதத்தைப் பற்றி டாக்டர…
-
- 4 replies
- 4.5k views
-
-
1. ஆதிகாலப் பாண்டியர்களின் வெள்ளி முத்திரை நாணயங்கள்: சங்க காலத்தில் தமிழகத்தை மூன்று அரச குடியினர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டியர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் தாம் என்ற வரலாற்றை அவர்கள் வெளியிட்ட கர்ஷபணம் (Punch Marked Coins) எனப்படும் வெள்ளி முத்திரைக் காசுகளால் அறிகிறோம். சேரர்களும் சோழர்களும் முத்திரைக் காசுகளை அச்சிட்டு வெளியிடவில்லை. இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அழகான ஒளிப்படங்கள், கோட்டோவியங்களுடன் புத்தகங்களாக வெளியிட்டு சங்ககால வரலாற்றை அறியச் செய்த முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் நாணய ஆய்வுச் சேவைக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் கொண்டுள்ளனர். தமிழக நாணயங்களில் மிகப் பழையவற்றை பல ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் தேடித் தெளிவான படங்களுடன் நூல்கள் எழுதிய தினமலர் ரா. கிருஷ்…
-
- 0 replies
- 4.5k views
-
-
கல்லணை - களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்…
-
- 0 replies
- 4.5k views
-
-
பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் …
-
- 0 replies
- 4.4k views
-
-
பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையா? இவள் நன்றி : தினக்குரல் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பி ஒருவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மட்டுமல்லாமல் திறமையான எழுத்தாளரும் கூட. பல சிறுகதை, கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் அவரைச் சந்தித்த போது அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார். அவருக்கு பிடித்தமான இலக்கியத் துறை பற்றிப் பேசிய போது... இப்போது தனக்கு முன்னரைப் போல் எழுத்தில் ஆர்வம் இல்லை எனவும், திருமணம் ஆனவுடன் ஒரு கவிதை கூட எழுத முடியவில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் நேரம் இல்லை. பிள்ளைகளின் அலுவல்கள் பாடசாலை விடயங்கள்... மின்சார, தண்ணீர், தொலைபேசி `பில்' கட்டச் செல்வது, வங்கி, ச…
-
- 13 replies
- 4.4k views
-
-
வணக்கம் இணையத்தில் தேடும் போது இந்த இணப்பு எனக்கு கிடைத்தது இதை வாசிக்கும் போது சிரிப்பட்தா அழுவதா என்று தெரியவில்லை தேவரம் படப்பெற்ற தலத்துக்கே இந்த கதி என்றால் மற்றயவை அல்லது நாம் எல்லாம் எம்மாத்திரம் :P :P :P இந்த இணைப்பை பார்க்கவும் http://www.nexcorpsl.com/sinhala/P_Koneswaram.htm இலங்கையின் வரலாறாம் http://www.nexcorpsl.com/sinhala/P_NorthAn...st_PGallery.htm அன்புடன் ஈழவன்
-
- 26 replies
- 4.4k views
-
-
திராவிடமா? தமிழ் தேசியமா? சுப.வீ. - பெ.மணியரசன் விவாதம்! தத்துவார்த்த தளத்தில் பெரும் விவாதமாக இருப்பது... திராவிடனா, தமிழனா? எது சரியான அடையாளம் என்பது, பேசித் தீராத பிரச்னை இது! 'திராவிடமா... தமிழ்த் தேசியமா...’ என்ற தலைப்பில் கடந்த 16-ம் தேதி சங்கம்4 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'திராவிடம்’ என்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், 'தமிழன்’ என்றும் வாதங்களை வைத்தார்கள். சிந்தனையைத் தூண்டும் அந்த விவாதத்தின் ஒரு பகுதி... சுப.வீரபாண்டியன்: ''திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல். எப்படியாவது திராவிடத்தை வேரறுத்துவிட வேண்டும் என்று சில தமிழ்த் தேசிய நண்பர்கள் கருதுகிற…
-
- 0 replies
- 4.4k views
-
-
இராஜேந்திர சோழனின் சிறப்புகள் ! இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான். தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்த தானம் பற்றிய விவரத்தை நடு விமானத்தின் கல்மீதும், தான் கொடுத்தவற்றைப் பற்றி சாதாரணமாக எழுதச் செய்ததோடு, தன் மனைவிமார்களும், அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.இராஜராஜன் மூன்று புதல்வ…
-
- 0 replies
- 4.4k views
-
-
அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் "அ" முதல் "ஃ" வரையும் "க" முதல் "ன" வரையும் சொல்லித் தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றனஎன்பது புரிந்தது. சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்து புகுந்துள்ளது? புகுந்தது தவிர்க்க முடியாதது தான் கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்ல…
-
- 16 replies
- 4.4k views
-