பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "அழகின் சிரிப்பு" 1. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன். பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளா…
-
- 2 replies
- 2.2k views
-
-
காலங்கள் மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை, கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் என இருவகைப்படுத்தலாம். கொடுப்பவர்களை, புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள் மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள். என இருவகைப்படுத்தலாம். வாங்குபவர்களையும், வேறு வழியில்லாமல் வாங்குபவர்கள் வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள் என இருவகைப்படுத்தலாம். வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்.. இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக போவார். இவர் ஒரு ஏமாளி, இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம். இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும். பேகன் என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தா…
-
- 6 replies
- 2.2k views
-
-
மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். படிப்பறிவும…
-
- 5 replies
- 2.2k views
-
-
பண்டையத் தமிழ் நாடும், தமிழ் ஈழமும். செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி:- # செம்மொழி இர…
-
- 5 replies
- 2.1k views
-
-
கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் தமிழுக்குத் தந்தார். வியாசர் மகாபாரதத்தை வழங்கினார். மனுதர்ம சாத்திரத்தை மனுவேதான் படைத்தார். சந்தேகமேயில்லை! ஆனால்… யாரும் பெண்ணை எழுதவில்லை. உண்மையில் அவள் பேசிய வார்த்தையை எழுதவில்லை. கம்பரின் ராமன்: சீதை! நீ இவ்வளவு நாளா ராவணனோடை இருந்தனியெல்லோ… நீ எப்பிடிக் கற்போடை இருந்திருக்க முடியுமெண்டு ஒரு வண்ணான் கேக்கிறான். நான் இந்தக் குடிமக்களுக்கெல்லாம் அரசன். நீ பத்தினிதான் எண்டு அவையளுக்கு நான் நிரூபிக்காட்டில் நாளைக்கு என்னை நாயெண்டும் மதிக்கமாட்டாங்கள். நீ குறைநினைக்காமல் கொஞ்ச நாளைக்குக் காட்டிலை போய் இரு. கம்பரின் சீதை:நீங்கள் சொல்லி நான் எண்டைக்காவது மாட்டனெண்டு சொல்லியிருக்கிறனா……
-
- 11 replies
- 2.1k views
-
-
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது. ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்க…
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழர்களுக்கு மானக்கேடானதுமான பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். தமிழனைஆரியன் அடக்கி யாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் கடவுளின் கொலைகாரத்தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டியதே இக்கட்டுரை) தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும். நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன் ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன் ஆகையால் தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான். ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதை தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா? கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமி…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழரின் இழந்த பெருமைகளையும், அதை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும்ஆராயும் ஒரு அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரை. Prashanth Munuswamy தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர். பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற…
-
- 0 replies
- 2.1k views
-
-
அழிந்துப் போன பண்டைய தமிழரின் இசைக் கருவி தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும்.குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும்.அதை ம…
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ்-தமிழர்கள் மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post.html மொழி உச்சரிப்பு வித்தியாசம் நாட்டு எல்லைகளுக்குளே இருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்ல வேறு மொழிகளில் இருப்பது கண்கூடு. .. இங்கே இங்கிலாந்ததில் கூட வடக்கு பக்கம் இருக்கிற லிவப்பூல் பகுதியில் இருக்கிற ஆங்கிலம் கதைப்பவருக்கும் தென் கிழக்கு பகுதியிலுள்ளவர்க்கும் வித்தியாசம் இருக்கும்.கொலண்டை பார்த்தீங்களாயின். லிம்பேர்க், பிறிஸ்லாண்ட் , வடக்கு கொலண்ட் பகுதியில் இருக்கிறவர்களுக்கும் இடையிலே பெரும் வித்தியாசம் இருக்கும் சிலவேளை புரியவே மாட்டாதாம்.. ஜெர்மனியில் முன்சன்,நோட்றன் வெஸ்ட்பாளின் பெர்லின் போன்ற இடங்களில் பேசுகிறவர்களுக்கும் உச்சரிப்பில் வித்தியாசமாக இருக்கும். ஈழத்தில் பிரதேச வேறு பாட்டால் உச்சரிப்பும் …
-
- 9 replies
- 2.1k views
-
-
இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது. கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள் கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்…
-
- 3 replies
- 2.1k views
-
-
யார் இந்தக் களப்பிரர் பாகம் 06 உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற…
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.ted.com/talks/lang/ta/rajesh_rao_computing_a_rosetta_stone_for_the_indus_script.html குறுக்கெழுத்துப் புதிர்களுக்கெல்லாம் தாய்ப்புதிர் போன்ற, 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துசமவெளியின் வரிவடிவத்தைப் புரிந்துகொள்ளும் பணியினால் ஈர்க்கப்படுள்ளார் ராஜேஷ் ராவ். டெட் 2011 கருத்தரங்கில், சிந்து சமவெளி நாகரிகத்தைப் புரிந்து கொள்வதற்கு முதற்படியாக, அதன் மொழியை எவ்வாறு அவர் கணினி தொழில் நுட்பத்தின் துணைகொண்டு அறிய முயல்கிறார் என்பதனை விளக்குகிறார். ராஜேஷ் ராவ்: சிந்துசமவெளி நாகரிகத்தின் வரிவடிவத்திற்கான ரோஸட்டா கல்.
-
- 10 replies
- 2.1k views
-
-
இன ஆண்டுகள்: ---------------------------- மலையாளிகள் கொல்லம் ஆண்டு : 1196 வங்கர், ஒடியர் ஆண்டு : 1428 தெலுங்கர்,கன்னடர்,மராட்டியர் சகா ஆண்டு: 1943 ஆரியர் விக்ரம ஆண்டு: 2078 மத யாண்டுகள்: ---------------------------- புத்தர் ஆண்டு: 2565 மகாவீரர் ஆண்டு: 2547 கிருஸ்த்து ஆண்டு: 2021 இஸ்லாம் ஹிஜ்ரி ஆண்டு: 1442 பழம்பெரும் இன யாண்டுகள்: -------------------------------------------------- யூத ஆண்டு: 5781 சீன ஆண்டு: 4719 தமிழர் கலியாண்டு: 5123 அனைவருக்கும் இனிய 5123வது சூரிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!!! …
-
- 1 reply
- 2.1k views
-
-
பையன்கள் பாசை பள்ளிக்கூடக் காலத்துப் பையன்கள் பாசை... உணர்வுகளைக் கையாள உதயமான படைப்பு கோபத்தின் உச்சியில் ஒற்றை வார்த்தை சொன்னால் கோபத்தின் பெரும்பாதி பனியாக்கும் மருந்து நாட்டார் பாடலின் தனித்துவம் போல பையன்கள் பாசைக்கு ஆராய்ச்சி இல்லை செவிவழி வாழ்ந்த அற்புத இலக்கியம் புலம்பெயரும் நிகழ்வால் அழிந்திடும் அவலம் காட்டுமலர்களின் கிறங்கவைக்கும் அழகு பெருந்தெருப் பயணிகள் அறியாத புதையல் மிகைப்பாட்டு இலக்கியங்கள் கோலோச்சும் வரைக்கும் பையன்கள் பாசைக்கும் தீண்டாமை இருக்கும். புலத்திலிருந்து நிலம் பார்க்கச் செல்வோர் படித்த பள்ளிக்கும் சுற்றுலா செல்வர் குறித்த சுவர்களை கண்களாற் துளாவி பொறித்த பாசையைப் பார்த்திடத் துடிப்பர் பையன்கள் பா…
-
- 6 replies
- 2.1k views
-
-
பத்தாண்டுகள் பறந்தோடிவிட்ட நிலையில் இறுதிப்போரின் ஒரு முக்கிய சாட்சியாக இருக்கும் வைத்தியர் வரதராஜா அவர்களின் ‘A Note from No Fire Zone’ என்ற நூல் வெளிவந்துள்ளது. வைத்தியரின் கதையினை அவர் வாயிலாகக் கேட்டு Kass Ghayouri என்ற தென்னாபிரிக்க்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் எழுதியுள்ளார். அவரைப் பற்றி அறியும் நோக்கில் இணையத்தினை அணுகினால், பல விருதுகள் வென்ற ஒரு பிரபலமான எழுத்தாளர் என்று அறிய முடிந்தது. அதிகமான புத்தக வெளியீட்டு விழாக்கள் சில பத்து மக்களின் முன்னேயே நிகழ்வதாக இருக்கின்ற நிலையில் புத்தக வெளியீட்டு விழா எனும் போதிலும் அரங்கில் நிறைய மக்கள்கூடியிருந்தது மகிழ்வாயிருந்தது. புத்தக வெளியீடு, திரைப்படம் இரண்டையும் முன்னெடுத்திருந்த வெண்சங்கு…
-
- 6 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.? யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும், யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார…
-
- 4 replies
- 2.1k views
-
-
சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?- சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு ) சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர் தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தேசியத்தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்…
-
- 9 replies
- 2.1k views
-
-
-
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர்திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உர…
-
- 3 replies
- 2k views
-
-
இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் கும…
-
- 1 reply
- 2k views
-