கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் …
-
- 4 replies
- 2.7k views
-
-
கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" திரும்பியது வேரறுந்த வாழ்வு! "அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று! அன்றாடங்காய்ச்சிகள் முதல் அன்னைமண் காத்தோர் வரை உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் உதித்திட முன்னரே காவுகொண்டாய்! புத்தனை வணங்கிய பேய்கள் ஓய்ந்தனவென்றிருக்க, புதுப்பேயாய், நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ? தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்) அவர் நடந்த கரையோரம், திரைதொட்ட காலம் மலையேறிட, அவர் கிடக்கக் கரையெங…
-
- 4 replies
- 2k views
- 1 follower
-
-
15.05.2021 36 ஆண்டுகள் போனாலும் குமுதினிப்படுகொலையின் கோரத்தாண்டவத்தை எப்படி எம்மால் மறக்கமுடியும். இதுபற்றிய எனது உணர்வை துக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
"தளிராடும் தூறலில்" "தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில் துளிர்விடும் இன்பக் காதல் நினைவில் ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில் எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்! குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!" "எண்ண முடியா உடல் கவர்ச்சியும் எண்ணம் புரியா மௌனத்தின் அழகும் வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும் மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே! விண்ணில் உன் முகம் தெரிகிறதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 4 replies
- 448 views
-
-
கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட முடியுமா? உற்றவர் கூடி உகுத்துக் கண்ணீர் ஊரின் புறத்தே தூக்கிச்செ…
-
- 4 replies
- 1.2k views
-
-
வரும் “காலத்தை” வரவேற்போம்! **************************** எழுபது ஆண்டுகளாக இருள் மூடிக்கிடந்த எம் தேசத்தில்-ஒரு சிவப்புச் சூரியனின் வெண்மைக் கதிர்களின் வருகையின் வேகம். இது.. பழமைகள் பொசுக்கி புதுமைகளின் பொற்கால விடிவின் ஆரம்பக்காலம். விலை மதிப்பில்லாத உயிகளை விழுங்கிய இராட்சத முதளைகளின் முடிவுக்காலம். மக்களின் உதிரத்தை உறிஞ்சி அவர்களின் வரி பணத்தில் கோட்டை கட்டி கொடி உயர்த்திய கோமான்கள் குடிசை வாழ்வுக்கு திரும்பப் போகும் எதிர் காலம். பழய.. ஆட்சியாளர்களின் வயல்கள் எல்லாம் மறைத்து விதைக்கப்பட்ட தங்க மூட்டைகளு…
-
-
- 4 replies
- 1.1k views
-
-
மாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல…
-
-
- 4 replies
- 542 views
-
-
ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இரு…
-
- 3 replies
- 644 views
-
-
-
- 3 replies
- 867 views
-
-
வெளி நாட்டு சரக்கு தம்பி எங்க விருப்பமான தண்ணி தம்பி மில்லி கொஞ்சம் உள்ள போனால் விட்டமீனு தானே தம்பி வீரம் எல்லாம் ஏறும் தம்பி வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று இந்த வில்லங்கத்தை போட்டு போனா பாட்டு எல்லாம் தானா வரும் பல கூத்து எல்லாம் கூட வரும் அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி ஆயிரம் தத்துவத்தோட அடுக்கு மொழியில் கவிதை வரும் அரசியலும் பேச வரும் நேற்று வரை நல்ல பிள்ளை இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி பிறக்கும் போது இருந்த குணம் இப்போ இல்லையே புதுசா எல்லாம் தலையில் இப்போ மாறிப் போச்சுது வெளி நாட்டு வாழ்கை எல்லோ நாம வெள்ளைக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒர…
-
-
- 3 replies
- 320 views
-
-
மனக்குரங்கு கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு இது இப்படியே இருந்து தொலையட்டும் .
-
- 3 replies
- 1.7k views
-
-
நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால்…
-
-
- 3 replies
- 266 views
-
-
எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், மலையகத் தமிழ், தமிழ்நாட்டு தமிழ், மற்றும் முஸ்லிம் மாவீரர்களது நினைவாக . வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒ…
-
- 3 replies
- 1.7k views
-
-
"கலப்படம்" "தாய்ப் பால் ஒன்றைத் தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும் தாராளமாக இன்று பலபல கலப்படம்" "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்" "பெண் முட்டையுடன் விந்து இணையும் பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் குறிஞ்சிநில முருகன் தமி…
-
-
- 3 replies
- 380 views
-
-
கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …
-
-
- 3 replies
- 591 views
-
-
வாழ ஆசை LUST FOR LIFE * பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால் வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அத…
-
- 3 replies
- 491 views
-
-
இன்று நாம் பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் …
-
-
- 3 replies
- 778 views
-
-
-
- 3 replies
- 944 views
-
-
செஞ்சோலைத் தளிர்களே! ------------------------------ வெள்ளையுடைபூண்டு வென்மனம் சூடிய மாணவர்காள் உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு உயிர் உள்ளவரை உள்ளத்துள் உலவிடும் உங்களை அகமேந்துகின்றோம்! தர்மம் வெல்லுமொரு நாளில் உங்கள் முகங்களை எம் தேசம் தரிசிக்கும் உலகெங்கும் அலைகின்ற தமிழினம் ஒருநாள் தலைநிமிரும் வேளைவரும் உங்கள் படுகொலைக்கு பதில்காணும் காலம்வரும்!
-
- 3 replies
- 762 views
-
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு ஆண்: "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே காலுனக்குப் பொசுக்கலையோ கற்றாழைமுள்ளுக் குத்தலையோ?" பெண்: "திண்ணை திண்ணையாத் தாண்டிப் போறவனே பாசாங்கு வேண்டாம்டா பசப்புவார்த்தை வேண்டாம்டா?" ஆண்: "இடுப்புச் சிறுத்தவளே இறுமாப்புநீ பேசாதேடி சிவத்த பாவாடை சித்தம் கலக்குதடி?" பெண்: "நேற்றுவரை உன்னை வெகுவாக நம்பினேனே அறம் அற்றவனே நானே விலகுகிறேனே?" ஆண்: "சிவத்த புள்ள நெனப்பெல்லாம் ஓமேல கரம்நீட்டி இவனைச் சந்திக்கக் கூப்பிடாயோ?" பெண்: "சந்திலே பொந்திலே மேஞ்சு பார்ப்பவனே உன் ஆசைதீர்க்க என்னை நண்பியேன்றாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 3 replies
- 541 views
-
-
ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை கொன்றிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டின் இடிச் சத்தம் ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை ஓட வைத்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த முன்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன …
-
-
- 3 replies
- 378 views
-
-
பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்
-
- 3 replies
- 1.2k views
-