கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
774 topics in this forum
-
-
- 2 replies
- 775 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்றைய மது - ஜெயபாலன் * உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரை பொங்குவது புதிய மது. . அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம…
-
- 2 replies
- 462 views
-
-
"காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் …
-
-
- 2 replies
- 565 views
-
-
கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
- 2 replies
- 713 views
-
-
-
- 2 replies
- 987 views
-
-
”நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே இந்த நட்பும் வாழ்வும்.” * . இல்லறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஆற்றங்கரையில் இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன். . இன்று தெளிந்து போய் புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டு தொட்டுச் செல்கிறது அது நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல. . எனது கன்றுகள் முளைத்தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பது போல. . நேற்றைய துன்பமும் உண்மை. நாளைய பயமோ அதனினும் உண்மை எனினும் இன்றில் மொட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "கு…
-
-
- 2 replies
- 451 views
-
-
மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்✍️
-
- 2 replies
- 485 views
-
-
ஆண் பெண்ணுக்கிடையில்ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. . சதுரங்கம்- வ.ஐ.ச.ஜெயபாலன்..சிருஸ்ட்டி வேட்கையில்ஆனைமலைக் காடுகள் பாடுகிறஅந்தி மாலை.அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்உன்னையே சுற்றுதடி மனசு..இது தீராத காதலடிநீதான் கண்டு கொள்ளவில்லை.அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்யானைபோலஉண்மையில் என் காதலும் பெரியதடி.,காமத்தில் சூரியன்பொன்சிந்த இறங்கி வர.நாணிப் புவிமகள்முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றஉனது நாடகம் அல்லவா இது.,ஆண் பெண்ணுக்கிடையிலஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. .என்னோடு இன்னும் சிலரைபந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்வித்தைக்காரிய…
-
- 2 replies
- 805 views
-
-
மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! ந…
-
- 2 replies
- 679 views
-
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 813 views
-
-
வாழ்வின் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் - LIFE'S POEM - BY JAYAPALAN - Translated by Chelva Kanaganayakam . (Wilting Laughter) . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிழை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . The snake eyes in the river bank the frog entranced by the flying insect; a sniffing mongoose, scurrying; on the deer's green path a human trap spread out; that which is fearless lives; the PALI r…
-
- 2 replies
- 726 views
-
-
"வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 2 replies
- 1.5k views
-
-
எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வா…
-
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …
-
- 2 replies
- 890 views
-
-
என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …
-
- 2 replies
- 797 views
-
-
தூங்கும் போதும் தூங்கி எழும்பும் போதும் எல்லா நேரமும் எப்பவும் இவளுக்கு இவள் மகன் நினைப்புத்தான் ஊர் உறங்கி கிடந்த மாலை ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துப் போனார்கள் அன்று போனவன் போனவன் தான் இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு இன்று இவள் ஊரின் அம்மன் தேர் திருவிழா ஆண்டு தோறும் அந்த கற்பூர சட்டியை தலையில் வைத்தபடி அவனை இடுப்பில் அணைத்தபடி அந்த ஊரே அதிரும்படி அரோகரா சொன்னபடி அந்த அம்மன் தேர் பார்க்க அவனோடு சென்ற அந்த நாட்களின் நினைப்போடு எப்பவும் இவளுக்கு இவன் மகன் நினைப்பு தான் கடைசியாய் இவன் எடுத்த படத்தை காவியபடி தேடித்தேடி அலைந்து தெரு முழுக்கு கூவி திரிந்தும் எவனும் திரும்பி கூ…
-
- 2 replies
- 2k views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950
-
- 2 replies
- 1.2k views
-
-
தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு …
-
- 2 replies
- 428 views
-
-
சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகவிழாவின் ஒரு நாளில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை அங்கு போயிருந்த ஒரு வாசகர் ' என்ன சார், இப்படிச் சோர்ந்து போய் இருக்கிறீர்களே. மெலிந்தும் இருக்கிறீர்கள். உடம்புக்கு ஏதாவது ஆயிட்டுதா...........' என்று அக்கறையுடன் விசாரித்து இருக்கின்றார். அந்த வாசகரின் அக்கறைக்கு சாரு கொடுத்த பதில் நெத்தியடியையும் மிஞ்சியது. அந்தக் கேள்வியால் சாருவிற்கு எக்கச்சக்கமான கோபம் வந்துவிட்டது. இதற்கு ஏன் சாரு இவ்வளவு பதட்டப்பட வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் விளங்கவில்லை என்றவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றார் சாரு.................🤣. ******************************************* இலக்கியச் சிக்கல் -----------------------------…
-
- 2 replies
- 351 views
-
-
தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம் நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக மனம் வெதும்பித் தணிகிறது சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில் கோபம் கொப்பளிக்கிறது விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று உலகத் தவறெலாம் சுரண்டியெடு - அதைத் தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி கூடவே இரு தளிர் கொண்டு போ - உன் துயர் சேர்த்துகரைத்து ஊற்று அது அவற்றின் விதியென்று பறை ! விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !
-
- 2 replies
- 3.4k views
-
-
இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம். . . .
-
- 2 replies
- 1.4k views
-
-
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன் மக்களின் பணத்தை திருடிய கள்ளர் மானம் இழந்தே போவார்கள் உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால் மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள் ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை இனி ஆளும் கதையை முடிப்பார்கள் உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை உடைத்தெறியாமல் போகார்கள் மக்களும் இனி மேல் மாறிட வேண்டும் தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால் எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும் நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும் இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும் இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு இறுதி வரைக்கும் நிலைக்காத…
-
- 2 replies
- 343 views
-
-
-
- 2 replies
- 1k views
-