கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * …
-
- 2 replies
- 1.9k views
-
-
”நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே இந்த நட்பும் வாழ்வும்.” * . இல்லறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஆற்றங்கரையில் இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன். . இன்று தெளிந்து போய் புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டு தொட்டுச் செல்கிறது அது நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல. . எனது கன்றுகள் முளைத்தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பது போல. . நேற்றைய துன்பமும் உண்மை. நாளைய பயமோ அதனினும் உண்மை எனினும் இன்றில் மொட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம். . . .
-
- 2 replies
- 1.4k views
-
-
1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்கு…
-
- 4 replies
- 485 views
-
-
இக்கவிதை “நெதர்லாந்து இளமுதிர்சோலை” மண்றத்தின் தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன். என் இனிய யாழ் கள உறவுகளுக்காக.. பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி இழப்புகள்..! அப்பாவின் அறிவை இழந்தோம் அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம் அவர்களுடன் கொஞ்சி குலாவும் அன்பை இழந்தோம்-ஏன் அவர்களை கூடவே இழந்தோம். கோழி கூவலை இழந்தோம். கோவில் மணிச் சத்தம் இழந்தோம். வாய்க்கால் வயல்கள் இழந்தோம். வழமான வாழ்வையே இழந்தோம். காலை விடியலை இழந்தோம், கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம் பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம், பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண் சட்டியில் கு…
-
- 1 reply
- 969 views
-
-
இழப்பும் நினைப்பும் வணக்கம், தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால் தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளி…
-
- 4 replies
- 1.3k views
-
-
இழப்பும் நினைப்பும்… நீலத் திரைக் கடலில் நீராடி வந்த பகலவன்; மஞ்சள் பூசி எழுந்து மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். கோழிகள் குருவிகள் இரை தேட கொண்டைச் சேவல்கள் பின்தொடர ஆடுகளை மாடுகளை வெளியேற்றி அப்பா சென்றார் கோடிப்; பக்கம் இவற்றைப் பார்த்து இரசித்தபடி எனது பணியைத் தொடர்வதற்கு வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன் வேரில் இருந்து பல் தேச்சேன். செம்பில் கொஞ்சம் நீரெடுத்து தெளித்து மெதுவா முகம் கழுவி காய்ந்த சேலை யொன்றினைக் கையிலெடுத்து முகம் துடைத்தேன் அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை ஆவி பறக்க ஆற்றி எடுத்து மூக்குப் பேணியில் முழுதாய் நிரப்பி முற்றத்தில் தந்தார் அப்பாச்சி. முண்டி முண்டிக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கருப்பு வர்ணங்கள் பலவுண்டு அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு என் பெயரோ கருப்பு என்பர் அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு அபசகுனமாய் எண்ணி என்னை வெறுப்போரும் பலருண்டு இருந்தும் நான் கவலை கொண்டதில்லை ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும் ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என என்னை வர்ணித்து பாடியுள்ளான் ஓபாமா என்னும் கருப்பு மனிதன் வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய் அண்றொரு நாள் நான் மிளிர்ந்தேனே அதனால் பேருவகை கொள்கின்றேன் என் பெயராய் இப்படிக்கு கருப்பாக ஈழநிலா
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழம் - அகமும் புறமும் புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 1. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலு…
-
- 1 reply
- 1.4k views
-
-
உக்ரைன் மோதல்..! **************** ஈழம் எரிவதற்கு உன் பங்களிப்பும் அதிகம் இருந்ததாக.. நாமறிவோம். இருந்தும்.. வலி சுமந்த எமக்குத்தான் உயிரின் வலி தெரியும்-உன் அப்பாவி மக்கள் அழிவு எம்மக்களாகவே பார்க்கிறோம். உன்னினம்,உன்மதம் உன்நிறமென்று எட்டிப்போக எம்மால் முடியவில்லை. ஏனெனில்.. உங்களைப் போன்றவர்களால் நாங்களும் அழிக்கப்பட்ட இனம். இரண்டுதரப்பு.. போரென்பதே உங்களின் கணிப்பும் பிடிவாதமும். இங்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிள்ளைகளையிழந்த பெற்றோர் கை கால் இழந்த குஞ்சு குருமான்கள் அப்பா இறந்தது தெரியாமல் உணவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள்-பா.உதயன் உங்கள் போலி முகங்களை எங்களுக்கு காட்டாதீர்கள் உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள் உங்கள் போலி கதைகளை சொல்லாதீர்கள் உங்கள் உண்மைக் கதைகளை சொல்லுங்கள் உங்கள் போலி அன்புகளை காட்டாதீர்கள் உங்கள் உண்மை அன்புகளை காட்டுங்கள் உங்கள் போலி சத்தியங்களை செய்யாதீர்கள் உங்கள் உண்மை சத்தியங்களை செய்யுங்கள் உங்கள் போலி கௌரவங்களுக்காகாவும் புகழுக்காகவும் வாழாதீர்கள் உங்கள் அறம் சார்ந்த வாழ்வோடு பயணியுங்கள் பொது நலன்களோடு பயணியுங்கள் உங்கள் சுய தேவைக்காக நலனுக்காக புகழுக்காக எதையும் பயன் படுத்தாதீர்கள் உங்கள் முதுகில் ஊத்தை வைத்துக் கொண்டு அடுத்தவ…
-
- 1 reply
- 457 views
-
-
உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை- உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை ஒட்டவும் முடியாமல் உயர்த்தவும் முடியாமல் கட்சிக்கு ஒரு கொள்கை இல்லை ஆளுக்கு ஒரு கொள்கை அவர் அவரே தனித் தனியே ஆனால் வீட்டுக் கட்சி என்று மட்டும் பெயராம் வீணாய்த் தான் முடிஞ்சுபோச்சு கதையாம் ஈழம் கேட்டு வந்தவர்கள் எல்லாம் தாளம் மாறிப் பாடுறாங்கள் இப்போ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிக் காச்சல் பூனைக் காச்சல் இன்னும் விட்டுப் போகல்ல புதுசு புதுசாய் கதையை மட்டும் அளந்து தள்ளுறான் ஐயா சம்மந்தர் தம்பி சுமந்திரனோடு தனி வழியாம் அடுத்தவரின் சொல்லு ஒன்றும் கேட்பதில்லையாம் ஆங்கிலமும் சட்டமும் அவர்கள் மட்டும் …
-
- 4 replies
- 514 views
-
-
உடைப்பு மழைக்காடு வறண்டதென்று வரி புனையும் வண்ணம் சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு? எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும் கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்? பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்? வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும் வனையப்படாத வினையூக்கி எது? நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?
-
- 26 replies
- 6.1k views
-
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 900 views
-
-
விழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய் ஆசையோடு அழுத்தினாய் தழுவலிலே தளர்வறிந்தாய் தீண்டியும், நிமிண்டியும் – எனைத் திரள வைத்தாய். உன் விரல்களிடை என் இதழ் குவித்தாய் விதவிதமாய் இரசித்து உன்னுதடழுத்திக் கவ்வினாய் உரசலிலே தீ மூட்டி – எனை உன்மத்தம் கொள்ள வைத்தாய் என் தகிப்பில் தணல் வைத்தாய் உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய் மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன் சுவாசத்துள் சிறைப்பிடித்தாய் தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய் கணம் பிரிய மறுத்தபடி யாசகம் கேட்கிறா…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 580 views
-
-
உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
உயிரில் கலந்த உறவே.....! முழங்கால் மடித்து இருந்து முழங்கையை முன் நீட்டி முழுசாய் பறித்த ரோசாவைத் தர முத்தமொன்று தந்திடுவாள் மறு கரத்திலோர் பரிசும் பார்த்து கட்டியணைத்திடுவாள் கண்மணியும் சேர்ந்து நடக்கையில் விலகி நடந்தவள் விரலோடு விரல் பின்ன உடையோடு உரசுகின்றாள் முடியை கோதிவிட்டு முன்வந்து முறுவலிப்பாள் கண்ணால் பலகதை சொல்லி பல்லால் இதழ் கடித்திடுவாள் அஞ்சும் மலர் அருகிருக்க நெஞ்ச மலர் மலர்ந்திருக்கும் கெஞ்சும் விரல் கொஞ்சம் தயங்க முந்தும் முகம் முத்தாடும் தேனின்றி குவளைமலர் பூத்திருக்க தேனுடன் வந்த வண்டு சுத்திப் பறக்கும் தேன் இல் மலரில் மகரந்தம் சுவைத்…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
2004 ம் ஆண்டின் இயற்கையின் கோரத்தாண்டவம் சுணாமியாக அடித்து எம் உறவுகளை பறிகொடுத்த 16 ஆண்டுகளின் நினவாக..அன்று எனது மனத்துயரத்தை கவிதையாய் எழுதிப் படித்திருந்தேன் அன்றைய ஆறாக் கவலையை இன்றும் உங்களுடன் ..பசுவூர்க்கோபி https://www.youtube.com/user/PasuvoorkGobi
-
- 0 replies
- 821 views
-
-
-
- 3 replies
- 979 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
உயிர் தமிழே நீ வாழ்வாய்! ********************* பட்டாளம் எம்மை சுட்டாலும் குண்டு பட்டாலும் உதிரம் குடித்தாலும் உணவு மறுத்தாலும். பிரித்தாலும் முறைத்தாலும்-சிறை தன்னில் அடைத்தாலும் அறுத்தாலும் தோல் உரித்தாலும் அவயங்கள் எடுத்தாலும். அழித்தாலும்,புதைத்தாலும் அடியோடு வெறுத்தாலும் கருவோடு கலைத்தாலும் கலையெல்லாம் பறித்தாலும். இருக்குமிடம் எரித்தாலும் இடம் மாறியலைந்தாலும் உருக்குலைந்து போனாலும் உயிர் தமிழே நீ வாழ்வாய். இத்தனை வதைகள் வந்தபோதும் செத்து மடியாத செந்தமிழே-உலகம் உயிருடன் இருக்குமட்டும் அழிவு உனக்கும் இல்லையென்பேன். அன்புடன் -…
-
- 0 replies
- 1.5k views
-
-
எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ!? - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது?? பார்வை பட்டாளே தாக்குதே!! **** என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் !! **** விழியழகோ !! உன் விழிபேசும் மொழியழகோ !! விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை!! **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி ? **** என்னை விழுங்க காத்திருக்கும் விழியே !! பார்வைப் பொய்கையில் மூழ்கி…
-
- 0 replies
- 1.3k views
-