Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. Started by மௌனராகம்,

    நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.

  2. "அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?" "அன்பின் வடிவே அழைப்பது புரியாதா பண்பின் இருப்பிடமே பழகியது தெரியாதா அன்ன நடையாளே அருகினில் வருவாயா சின்ன இடையாளே சினம் மறவாயா மண்ணின் வாசனை அள்ளி வீசுபவளே வண்ணப் பூந்தென்றலே தோள் சாயவா?" "உண்மையை உணர்ந்து உள்ளம் தாராயா கன்னக் குழிக்குள் என்னை வீழ்த்தாயா மின்னல் வேகத்தில் தோன்றி மறைபவளே எண்ணம் எல்லாம் என்றும் நீதானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா

  4. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு…

  5. சரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar

    • 0 replies
    • 807 views
  6. என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…

    • 5 replies
    • 806 views
  7. வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா

  8. https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் …

    • 6 replies
    • 805 views
  9. புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது. . தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன். . 2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துப…

    • 1 reply
    • 802 views
  10. ஆண் பெண்ணுக்கிடையில்ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. . சதுரங்கம்- வ.ஐ.ச.ஜெயபாலன்..சிருஸ்ட்டி வேட்கையில்ஆனைமலைக் காடுகள் பாடுகிறஅந்தி மாலை.அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்உன்னையே சுற்றுதடி மனசு..இது தீராத காதலடிநீதான் கண்டு கொள்ளவில்லை.அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்யானைபோலஉண்மையில் என் காதலும் பெரியதடி.,காமத்தில் சூரியன்பொன்சிந்த இறங்கி வர.நாணிப் புவிமகள்முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றஉனது நாடகம் அல்லவா இது.,ஆண் பெண்ணுக்கிடையிலஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. .என்னோடு இன்னும் சிலரைபந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்வித்தைக்காரிய…

    • 2 replies
    • 800 views
  11. "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று....!" "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று ஏற்றதை எடுத்து மக்களுக்கு வழங்கு மற்றதை தவிர்த்து தூக்கி எறிந்து சுற்றத்தை மதித்து நட்பை வளர்த்து குற்றத்தைக் கண்டால் நீதி நிறுத்தி மாற்றத்தை வேண்டி நடந்து செல்!" அறிவு கொண்ட கொள்கை வழியில் அலசி ஆராந்து முடிவு எடுத்து அன்பு பாயும் மக்களையும் சேர்த்து அச்சம் இல்லா சமூகம் அமைத்து அடிமை ஒழித்த வரலாற்றை தனதாக்கி அக்கினிப் பிழம்பாய் எழுந்தால் என்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் …

  13. அன்னையர் தினம்..! ************* பூமாதேவியென பூமியும் பெண்ணே கங்கை யமுனை சிந்து காவேரி ஓடும் ஆறுகளும் பெண்ணே.. உயிரினம் அனைத்தும் உன் மடிதாங்கியே உலகில் உதித்தன. கருவறை தன்னுள் உருவினை தாங்கி உதிரம் கலந்து உடலினைத் தந்து உணர்வையூட்டி உலகினைக்காட்டிய அம்மாதானே அனைத்துக்கும் தெய்வம். அன்னையர் தினத்துக்கு ஒருநாள் போதுமா-எம் ஆயுள் வரையும் அன்னையை மறக்கத்தான் முடியுமா? அன்னையர் தின வாழ்த்துக்களுடன். அன்புடன் -பசுவூர்க்கோபி- 09.05.2021

    • 2 replies
    • 796 views
  14. என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …

    • 2 replies
    • 795 views
  15. சில அடிகளை கடக்க பல நதிகளை தாண்ட வேண்டி இருக்கு பல நதிகளை கடக்க சில அடிகளே போதுமாகவும் இருக்கின்றது சில நதிகளைக் கடக்க பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு பல கடல்களைக் கடக்க ஒரு நதியே போதுமாகவும் இருக்கின்றது சில தருணங்களை கடக்க ஒரு வாழ்வே தேவையாக இருக்கு சில தருணங்களே பல வாழ்க்கை வாழ்ந்த நிறைவை தருகின்றது ஒரு விரல் தொடுகைக்காக பல உறவுகளை இழக்க நேரிடுகிறது பல உறவுகளை தக்க வைக்க சில விரல்களை நிராகரிக்க சொல்லுது வாழ்வு வாய்க்கும் என நினைக்கும் போது வரள்கின்றது வரண்டு சுடுகாடாகும் எனும் போது…

  16. "விழியற்ற தராசு" "விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!" "உறவற்ற குடும்பம் நிம்மதி அடையாது இரவற்ற உலகம் தூக்கம் கொள்ளாது! திறனற்ற செயல் வெற்றி சூட்டாது உரமற்ற பயிர் பலன் தராது!" "ஈரமற்ற உள்ளம் கருணை காட்டாது தரமற்ற செயல் நன்மை ஈட்டாது! நிறைவற்ற நட்பு அன்பைக் கொட்டாது சிறகற்ற பறவை காற்றில் பறக்காது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  17. கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரை‌யை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா

  18. வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம் சென்றதே அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா என காத்திருக்கும் மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும் தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில் நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள் அதை என்றும் கைது செய்திட ஆளில்லை என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை கண்ணெதிர கணவனை காணும் வரை....

  19. அந்தாதிக் கவிதை / “தன்மானம்” "தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும் ஓங்கிய எண்ணம் மனதில் பதியும் பதிந்த பெருமிதம் துணிவு தரும் தருவது எதையும் தெரிந்து எடுப்போம் எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!" "நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும் இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும் சிறக்கும் கருத்து எதிலும் உதவும் உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும் ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. வருக வசந்தமே-பா.உதயன் 🌺 வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியுதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது அழகிய கதிரவன் கண்ணைத் திறக்கிறான் ஆயிரம் பூக்களின் அழகு சிரிக்குது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு மணி ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது கனவுகள் உயிர்த்தொரு காலம் பிறக்குது காலைப் பொழுதொன்று மெல…

    • 0 replies
    • 783 views
  21. மெய்யுடல் தனை மென்மையாகத் தழுவிச் செல்லும் இளந்தென்றலின் அழகான ஒரு தீண்டலில் கலந்திருக்கின்றது கரைப்பதற்கும் கரைந்து கொள்ள இசைவதற்குமான முடிவு! அழகுடல் தனையுடைய அணங்கவளின் ஆரவாரமான நகைப்பொலியினைப் போல சலசலத்து ஓடும் நதியின் ஓட்டத்தில் சிக்குண்டு ஓரிடத்தில் நிலையாமல் தடுமாறி தன்னுரு மாறும் கல்லின் முடிவற்ற தீர்வில் அமைந்திருக்கின்றது நகர்ந்து செல்வதற்கும் நகராமல் நிலை கொண்டு எதிர்த்து நிற்பதற்குமான தெளிவு! பொய்யுடல் தனைப் பொலிவுடன் அலங்கரிக்கும் பூமாலை தனிலிருந்து நுதல் தழுவி முகம் வருடி உடல் தீண்டி காலடியில் கழன்று விழும் பூவிதழின் நிலையற்ற நிலையாமையில் மறைந்திருக்கின்றது பயன்பெறுவதற்கும் பயன்மட்டும் பெறுவதற்குமுண்டான வேறுபாடு! -தமிழ்ந…

  22. ஆகாயத்தில் இருந்த நிலவு ஆடிப்பாட வந்ததாம் ஆடிப்பாடி முடித்தப் பின்னே அசந்து போனதாம் வீதியெல்லாம் புகைக்காற்று திணறி மேலே சென்றதாம் மேகமெல்லாம் அனல்காற்று தொப்பென்று கீழே விழுந்ததாம் மயக்கம் தெளிய நட்சத்திரம் தண்ணீர் கொண்டு வந்ததாம் மதி கொஞ்சம் மதி தெளிந்து விண்ணிற்கு சென்றதாம் புகை நமக்கு பகையென்று மறக்கின்றோம் தானே புகையிலையாலே தினந்தோறும் இறக்கின்றறோம் வீணே நற்பழக்கம் வேண்டும் உடல்நலம் பேணவே நம்பிக்கை பரிசளிக்கும் மகிழ்வுடன் வாழவே சரவிபி ரோசிசந்திரா

  23. ஒரு கல்லுக்கும் உண்டு சுதந்திரம் ஒரு மரத்துக்கும் உண்டு ஒரு வார்த்தையிலும் உண்டு சுதந்திரம் பறவையின் இறக்கையிலும் உண்டு சட்டம் சொல்கிறது விதி என்று... அழிந்து போகும் வரை உடல் இருக்கும் போவதும் வருவதும் என நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறைவது போல இருக்கும் சுதந்திரம் அர்த்தமற்றது... மனம் அது மிகை கொள்ளாது ஓர்நாள் நிலைபெற்ற வழியில் வெடித்து வெளியே நடமாடும் கை விலங்கை உடைத்த பின் அது மாறும்... ஒன்று உள்ளே போகும் அல்லது வெளியே வரும் உலகம் புதிதென நம்பும் எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம் வீசியதில் சிக்கியதில் தொடங்கும் கவனம்... கடந்த காலத்தின் அனுபவம் மனதோடு கலந்து விட்டதால் அது தான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது தடுமாறுகிறது மனம் ஆனால் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.