கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
774 topics in this forum
-
எமது உடலின் சதைகளை மட்டும் உண்டு விட்டு எங்களின் எலும்புகளை எறிந்து விட்டு மதம் என்ற போர்வைக்குள் போய் ஒளிந்து கொள்கின்றன ஆண் ஆதிக்கம் என்னும் மனித மிருகங்கள் அன்பே சிவம் என்று அறியாதவர் ஆயிரம் முறை ஆண்டவனை தொழுது என்ன பயன் .
-
- 1 reply
- 992 views
-
-
உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . புயலால் விழுந்தவரை மழை எறி மிதிக்கிறதே அயலும் தொலையும் ஆறு குளம் சேறாக தரை வீழ்ந்த மீனாய் என் தமிழ்சுற்றம் துடிக்கிறதே. ஊர்கூடி கடா வெட்டி உறவாடும் பேரூர்கள் சிறாருக்கும் பாலின்றி துணியின்றித் தவிக்கிறதே மாழையும் குளிர் காற்றும் வாளாய் சுழல்கிறதே உலகுக்குகே சோறு தந்த ஊர் பசித்துக் கிடக்கிறதே வங்கக் கடல் நடு நடுங்க மரீனாவைக் கடந்த புயல் எங்கென்று வாடிவாசல்சீமை ஏங்கி ஏங்கி அழுகிறதே
-
- 1 reply
- 1.3k views
-
-
"சந்தேகம்" "சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்" "எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள் எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள் எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள் எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்" "சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள் சில தனி நபருடைய குணாதிசயங்கள் சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்" "தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல் தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல் தருண…
-
- 1 reply
- 257 views
-
-
உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-
-
- 1 reply
- 1.3k views
-
-
கன்னத்தில் முத்தமிட்டு ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு 'மணி' பார்த்த மணியருக்கு கல்கிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஈழத்திட்டின் வன்னிக் கோடியின் அனுராதபுரம் கரைதட்டி இருக்கு. அண்மைக் காலத்தே புலிக் கொடி ஒன்று உயிராயுதமாய் அனுராதபுரம் புகுந்து நிஜக் கதை படைத்த போது தூசி மண்டிக்கிடந்த தமிழகத் திரைக் கண்கள்.. கல்கிக் கிழவனின் கற்பனையில் வந்த பொன்னியின் செல்வனால் வன்னிச் செல்வன் முன் திறந்து கிடக்குது..!! மகிந்தனை வீழ்த்திய மகிமையை பேசுது சோழ வாரிசுகள்... அனுராதபுரமோ தமிழனை வீழ்த்திய மகிந்தவின் கதை பேசி சிங்கள வீரம் காட்டுது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
- 1 reply
- 1k views
-
-
ஈழம் - அகமும் புறமும் புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 1. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலு…
-
- 1 reply
- 1.4k views
-
-
புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது. . தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன். . 2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துப…
-
- 1 reply
- 805 views
-
-
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] "தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே! மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் பேசும் மொழியைக் கலக்காமல் கதைப்போம்! கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!" "நிலைத்த புகழை அது பரப்பட்டும் பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே! சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் முழுமையான முறைப் படி வளரட்டும்! வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 479 views
-
-
"அன்பே ஆருயிரே" "அன்பே ஆருயிரே அழகான மயிலே கன்னம் இரண்டும் சிவந்தது எனோ? சின்ன இடை ஆசையத் தூண்டுதே அன்ன நடையில் அருகில் வாராயோ? இன்பக் கடலே என்னைத் தழுவாயோ?" "காதலே காவியம் படைக்கும் உறவே மோதலைத் தவிர்த்து புன்னகை பூக்காயோ? ஆதரவாய் என்றும் நான் இருப்பேனே இதயத்தில் வலியை ஏன் தருகிறாய்? சாதல் வருமுன் என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 597 views
-
-
-
- 1 reply
- 963 views
-
-
BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 . 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உய…
-
- 1 reply
- 1.1k views
-
-
"முப்பெருந் தேவியர்" "மூன்று வடிவில் முப்பெருந் தேவியர் நன்று சிந்தித்தால் மூவரும் ஒருவரே! ஊன்றிக் கவனித்தால் விளக்கம் புரியும் தோன்றிய மூவரின் வரலாறும் தெரியுமே!" "கல்வி இருந்தால் நாகரிகம் வளரும் கருத்துக்கள் தெளிந்தால் தீர்மானம் சரியாகும்! செல்வம் இன்றேல் வறுமை சூழும் இல்லற வாழ்வும் முறிந்து போகும்!" "வீரம் இல்லா சமூகம் அழியும் கரங்கள் இணைந்தால் வாழ்வு இனிக்கும்! அறம் காக்க மூன்றும் வேண்டும் பரம்பொருளாய் உருப் பெற்றதும் இதற்கே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 533 views
-
-
கொரன.. கொரன.. கொரனா கொரன..கொரன..கொரனா நீயும் ஒரு காதல் வைரஸ் தானா நீ ஒட்டிக்கொள்ளும் காதலன் நானா.. நுண் உலகின் ரதி நீ தானா.. உன்னை அணைத்துக் கொள்ளும் மன்மதனும் நானா கொரன கொரன கொரனா தும்மல் வந்ததும் வருது உன் காதல் தானா காய்ச்சல் வருவதும் சிக்னல் தானா கூட இருமித் தள்ளுவதும் கீதம் தானா.. கொரன.. கொரன.. கொரனா சுவாசப்பையெனும் பூங்காவில் ஊர்கோலம் தானா வில்லங்கமான உடல்கள் என்றால் ஊடல் தானா மரண ஓலம் பரிசும் தானா உடல் வில்லன்கள் வந்தால் காதல் முறிவு தானா உன் காதலின் சாவில் என் வாழ்வும் தானா. கொரன கொரன கொரனா உன் காதலின் தூது கழுவாத க…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெறுப்பினால் எதையும் வெல்ல முடியாது அன்பினால் மட்டுமே அது முடியும். Hatred does not cease through hatred at any time. Hatred ceases through love. This is an unalterable law.” – Buddha —————————————————————————————————————— மண்ணைத் தின்னும் ஆசையோடு-பா.உதயன் இலங்கையில் இப்போ வட கிழக்கில் பேரினவாதம் என்ற பெரும் பேய் மதம் என்ற பெயரில் மண்ணை தின்று கொண்டிருக்கிறது அமைதியாய் அரச மரத்தடியில் இருந்த புத்தரை அங்கும் இங்குமாய் அந்தப் பேய் அவர் அமைதியை குலைத்து இழுத்துத் திரிகிறது பாவம் புத்தர் என்ன செய்வதென்று தெரியமால் இன்னும் அமைதியாகவே இருக்கிறார் அரச மர நிழலோரமாய் அமைதியையும் அன்பையு…
-
- 1 reply
- 842 views
-
-
நாளை ஒரு காலம் வரும்-பா.உதயன் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் காலை வரும் பொழுதுகளில் கவித் துளியாய் மழை தெறிக்கும் நாளை வரும் விடுதலைக்காய் குயில் கூவி எமை எழுப்பிவைக்கும் வானமெங்கும் நிலவு வரும் எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும் கனவொருநாள் எழுந்து வரும் கார்திகையில் பூ மலரும் எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும் தெருக்கள் எல்லாம் பறவை பாடும் நாளை வரும் காலம் என்று நம்பிக்கையின் ஒளி தெரியும். நாளை ஒரு காலம் வரும் மாற்றம் ஒன்றே ம…
-
- 1 reply
- 419 views
-
-
தடுப்பூசி வரும் வரை..... தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே..... கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு.... கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே.... கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு... கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் யாழ்ப்பாணம் " கவிதைகள் தொடரும் "
-
- 1 reply
- 845 views
-
-
( "96" திரைப்படம் பார்த்த ஓர் தூக்கமற்ற பின்னிரவு நேரத்தின் ஆழ்மனது அசைவுகள்....) "96" ------ தூறல் நேர மண் மணத்துடன் சாரல் காற்று மெய் நனைக்கையில்... புலுனிக் குஞ்சுகளின் சலசலப்புடன் முன்பனி கால சிலுசிலுப்புடன்... இயற்கை ஈன்றாள் "96"... ஓயாத ஒரு சுழல் காற்றுடன் பாதி நண்பர் கரை கடக்க... நாமிருந்தோம் திறந்த வெளி சிறையினிலே... மின்மினிகளுடன் போட்டியிடும் மண்நெய் விளக்குகள்... அடர்ந்த இரவு நாட்களில் தூரத்து நாயொலி உசுப்பியது "அட்றினலை"... நிலவு எரிந்த நாட்களில் சுட்டது நிலவொளி... அதுவொரு சாவும் சாவு சார்ந்த நிலமும்... ஆறாம்ம்ம் திணை... ஆயிரம் இருந்தது அகநானூறும…
-
- 1 reply
- 986 views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / First poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" "ஈடணம் விரும்பா சாதாரண மகனே …
-
- 1 reply
- 401 views
-
-
"என் உயிரோட்டமும் நீதானே" "மின்னல் இடை கண்ணைக் குத்த அன்ன நடை நெஞ்சை வருத்த கன்னி இவள் அருகில் வந்தாள் சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!" "அன்பே ஆருயிரே அழகு தேவதையே இன்பம் கொட்டும் வண்ணக் கிளியே துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே என் உயிரோட்டமும் நீதானே இன்று!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 455 views
-
-
இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட…
-
-
- 1 reply
- 132 views
-
-
வேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள் நிழலாகுமெனவும் என் பதின்ம வயசுகளில் கனவுகூடக் கண்டதில்…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-