கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
நீங்கள் கெட்டவரா?நல்லவரா? ************************ அடுத்தவன் வாழ்வைக் கெடுத்தவன் அவனியில் அவனோ பெரியவன் எடுத்தவன் கொள்ளையடித்தவன் உலகினில் அவனோ உயர்ந்தவன். உழுதவன் உணவு படைத்தவன் ஊர்களில் உயிரே அற்றவன் உழைத்தவன் உணவு கொடுத்தவன் உறவுகளால் கால் மிதிபட்டவன். படித்தவன் பட்டங்கள் பெற்றவன் பட்டணியோடு வேலைக்கலைபவன் கால் பிடித்தவன் அரச வால் பிடித்தவன் கஸ்ரமில்லாமலே காசில் மிதப்பவன். கஞ்சா குவித்தவன் கற்பைக் கெடுத்தவன் மந்திரியோடவன் மதுக்கடைப் பெரியவன் லஞ்சம் பெற்றவன் ஊளல் புரிந்தவன் வஞ்சனைக் காரனே வாழ்வில் உயர்ந்தவன் நல்லவன் வாழ்வதேயில்லை-எனினும் நானிலம் போற்…
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
நெ - போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் (பெயர் - வினை.. பெயர் - பெயர்.. வினை - வினை.. பெயர் எச்சம் - பெயர்.. வினை எச்சம் - வினை.. வினை எச்சம் - பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும்) ஒரு கவிதை. அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ - போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. (முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.) நீங்களும் கவிதைகளை வார்க்கலாம்... தொடக்கம்.. கவிதை -1 யாழ்... தொடக்கம்... ( இசையின் தொடக்கம்) கவிதை 2.. சொல்... மழை.. (கவிதை)
-
- 176 replies
- 17k views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது. . நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
கடமையிடமும் கண்ணியத்திடமும் இலட்சியத்திடமும் போராட்டத்திடமும் துணிச்சலிடமும் வெற்றியிடமும் நெருங்கி இரு! கடனிடமும் துரோகத்திடமும் ஏமாற்றத்திடமும் பலவீனத்திடமும் பயத்திடமும் குற்றத்திடமும் விலகி இரு! எளிமையிடமும் தூய்மையிடமும் பொறுமையிடமும் விடாமுயற்சியிடமும் அன்பிடமும் அறிவிடமும் நிஜத்திடமும் நல்லொழுக்கதிடமும் நெருங்கி இரு! பொறாமையிடமும் மூட நம்பிக்கையிடமும் அறியாமையிடமும் தீய ஒழுக்கத்திடமும் கோழைத்தனத்திடமும் கஞ்சத்தனத்திடமும் தற்பெருமையிடமும் பேராசையிடமும் விலகி இரு! உரிமையானவர்களிடமும் உரிமைகளை உணர்வுகளை மதிப்பவர்களிடமும் தேவையான உறவுகளிடமும் தேவையான உணர்வுகளிடமும் நெருங்கி இரு! உரிமை இல்லாதவர்களிடமும் உரிமைகள் உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களிட…
-
- 8 replies
- 1.4k views
-
-
நெருப்பு. எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் ஆலயத்தில் எரிந்தால் தீபம் அடுப்புக்குள் எரிந்தால் சமையல் அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் யாகத்தில் எரிந்தால் அக்நி சிதையில் எரிந்தால் சாம்பல் அடிவயிற்றில் எரிந்தால் பசி ஆகாயத்தில் எரிந்தால் மின்னல் அடர்வனத்தில் எரிந்தால் கோரம் மூச்சில் எரிந்தால் ஏக்கம் சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் விழியில் எரிந்தால் காதல் இடையில் எரிந்தால் காமம் மனசில் எரிந்தால் பாசம் ஈருடலில் எரிந்தால் பரவசம் எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......! …
-
- 7 replies
- 2.6k views
-
-
நீளங் கொண்ட வானத்தில் பறக்கும் நேசங் கொண்ட பறவைகளே என் தேசங் கொண்ட நிலையென்ன திரும்ப வந்தால் கூறுங்கள்! வாசங் கொண்ட மலரங்கே வண்ண இதழ்கள் விரிப்பதில்லை பேசுங்கிளியும் கிள்ளை மொழி பேசாதிருக்கு என்கிறார்கள்! வீசும் தென்றல் உடன் சேர்ந்த மாமரத்து விளையாட்டும் வேப்ப மரத்துக் குயிற்பாட்டும் நேசமுடன் நினைவிருக்கும் நாசம் எல்லை மீறியதாம் நாட்டில் காணா வாழ்வோடு! கூசும் கொலைகள் கொள்ளைகளும் குழவி மேனி கூடக் கலைத்தாடும் நீசம் எல்லை மீறுவதாய் நேரக் கேட்டே மனமும் துடிக்கிறதே! மாசும் கொண்டோர் மனமெல்லாம் மருகிப் பிறழ்வாய் மனத் தாகம் பூசும் முகங் கொள் வேடங்கள் புரிவோர் மலியப் பொருளுண்டோ! காசுக் கடிமையாய் போகும் கயவர் கைக…
-
- 4 replies
- 979 views
-
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 813 views
-
-
14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 730 views
-
-
படக்கவிதை / "மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" "உணர்வுகள் எல்லாம் உள்ளத்தில் பூரிக்க ஆணவம் அற்ற மனத்தைக் கொண்டு ஆணழகன் வருகையை எதிர்ப் பார்த்து மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 895 views
-
-
படம் சொல்லும் வரிகள் (உயிப்பு) **************************** கல்லறையில் மாண்டாலும் கனிதருவோம் கயவர் எமையழித்தாலும் துளிர் விடுவோம். நல்லவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை-இந்த நானிலத்தில் அவர் புகழோ குறைவதில்லை. -பசுவூர்க்கோபி.
-
- 4 replies
- 1.1k views
-
-
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…
-
- 5 replies
- 626 views
-
-
என் அன்பு இதயங்களுக்கு.. பணம் பற்றிய எனது 15 (குறும்)வரிகள்..! ******************************** பணக்கார மனிதனும் ஏழை மனிதனும் உலகத்தில் வாழ்ந்தோம்-இன்று ஒன்றாகவே போகிறோம்-கையில் ஒன்றுமில்லாமல். ************************************** பணமெனும் கடுதாசிக்காகவே காலத்தை வீணடித்தேன் ஏழைபோல் உலகத்தை ரசிக்கமுடியல்லையே என்னால். *************************************** நான் பிறந்த காலம் தொட்டு எல்லாம் அறிந்து விட்டேன் பார்க்காமலே போகப் போகிறேன் சில்றையை விட பெரிய காசுகளை. ***************************************** உழைத்து சாப்பிடும் மற்ற உயிரினம் போல் என்னால் எழும்பமு…
-
- 0 replies
- 1k views
-
-
பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 116 views
-
-
அன்பாக பேசி அருகோடு இருப்பவர் போல் நடிப்பவர் எல்லாம் தங்கள் தேவை முடிந்தவுடன் உன்னை விட்டு விலகிவிடுவார்கள் உண்மைகளை மறைப்பதற்காக பல பொய்களை கூட சொல்லுவார்கள் இருந்தபோதும் பகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பயன் ஏதும் இல்லை வலிகளையும் துன்பங்களையும் பட்ட காயங்களையும் நினைத்து கொண்டு இருந்தால் வாழ்க்கை நகராது உண்மைகளை ஒரு நாள் இவர்கள் அறியும் பொழுது தாங்கள் கொட்டிய குப்பைகளை நினைத்து வருத்தப்படுவார்கள் பார்க்க வேண்டிய சந்தர்பங்களில் ஒரு புன்னகையோடு நகர்ந்து விடுங்கள் .
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 797 views
-
-
நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே …
-
-
- 5 replies
- 681 views
-
-
இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை. *************************** பழைய நீதிக்கதை ------------------------------ ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னார் கலாம் ஐயா பொதுவானவர் எளிமையானவர் நல்லவையே சொன்னார் ஆகவே கனவிற்கு மேல் கனவென்று எல்லோரும் காண்கின்றனர் உத்தியோகம் உயர ஊதியம் இரண்டு மடங்காக வீடு மாளிகையாக வாகனம் வசதியாக பிள்ளைகள் தனியே…
-
- 0 replies
- 377 views
-
-
நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். …
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1k views
-
-
பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும் பாசத்தின் வெளிப்பாடு அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 598 views
-
-
வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 806 views
-
-
பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர…
-
- 4 replies
- 872 views
-