கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
779 topics in this forum
-
தாத்தாவின் நம்பிக்கை - - - - - - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தாத்தா இந்த முறையும் சொன்னார் பல தையும் போய் பாவம் தாத்தா பார்த்திருந்தார் பல தடவை காணியும் போலீசும் வரும் என்று காத்திருந்தார் சில தடவை திரும்பவும் யாரோ தீர்வு பற்றி கதைத்ததால் தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று காத்திருக்கிறார் இந்தத் தடவையும் தாத்தா.
-
- 0 replies
- 682 views
-
-
தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.
-
- 0 replies
- 839 views
-
-
-
- 0 replies
- 401 views
-
-
காந்தியும் கனவுகளும் காந்தியை ஒரு நாள் கனவில் கண்டேன் எப்படி இருக்கிறது இந்தியா என்றார் நீங்கள் நேசித்த மூன்று குரங்குகள் போல் இல்லை என்றேன் சாதி மதம் என்று சண்டைகள் இல்லையா என்றார் நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் தாத்தா கர்ஜனங்கள் உங்கள் பிள்ளைகள் என்று கடைசி வரை ஒத்துக்க மாட்டானாம் காவிக்குள் புகுந்து இருக்கும் சாமிமார் பிறந்த இடம் போய் பார்த்தீர்களா தாத்தா பத்தி எரிந்தது தாத்தா ஒரு நாள் பாடுபட்டு நீங்கள் கட்டிய ஐக்கியம் செத்து விழுந்தது மானிடம் தாத்தா பாவர் மசூதியை போய் பாருங்கள் ராமர் பிள்ளைகள் உங்கள் சத்திய சோதனையை அந்த புனித மண்ணில் புதைத்து விட்டனர் நேரம் இருந்தால் …
-
- 0 replies
- 439 views
-
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் …
-
- 2 replies
- 777 views
-
-
பொங்கல் வாழ்த்து 2020. இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம் திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?; தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்; கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே ஆடத் தருமம் நிலை தாழ்ந்த …
-
- 2 replies
- 964 views
-
-
நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம் எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன் வஞ்சனை செய்வோர் பற்றியும் வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும் எஞ்சி இருக்கும் காலம் வரை என் தமிழ் தந்த திமிரோடு எழுதுவேன் பேசுவேன் நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன் என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும் நான் எழுதுவேன் நான் பேசுவேன்.
-
- 0 replies
- 462 views
-
-
-
- 2 replies
- 777 views
-
-
எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். . நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் …
-
- 1 reply
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் …
-
- 4 replies
- 2.7k views
-
-
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * …
-
- 2 replies
- 1.9k views
-
-
வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்
-
- 8 replies
- 1.1k views
-
-
பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…
-
- 11 replies
- 2.4k views
-
-
இருபது இருபது இளையவரே வருக வருக.. இன்பம் தந்து துன்பம் தொலைத்து இனிதாய் வருக வருக. இனி ஒரு காலை இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து இனி குளிர் கண்டு இன்புற்றே நிற்க வருக வருக. இனிப் பல்லினமும் இன்பமாய்ப் பெருகி இச்சை கொள் பச்சை தந்து இவள் பூமகள் இனிதே வாழ வருக வருக. இழிசெயலாய் நெகிழிகள் பெருகி இனி இந்த தேசம் இருக்காது எனும் நிலை தொலைத்து இவ்வையகம் வாழ்வாங்கு வாழ இலைகுழை தான் போல் உக்கும் வகைகள் இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. இல்லை எனி நல்லார் இந்த நிலை இன்றி இங்கு இல்லை எங்கும் இருப்போர் நல்லோர…
-
- 4 replies
- 1.6k views
-
-
அம்மாவின் அன்பு சாப்பிட்டியா மகனே மழை பெய்கிறது குடை பிடித்து போ மகனே ஏன் இருமிக்கொண்டு இருக்கிறாய் டாக்டரை போய் பாரு மகனே இரவாகிப்போய் விட்டது பார்த்து போ மகனே ஏன் மகனே இப்படி இளைத்து போய் விட்டாய் வேலை வேலை என்று எந்த நேரமும் திரியாதே மகனே நேரம் இருக்கும் போது அம்மாவை வந்து பார்த்து விட்டு போ மகனே உடம்பை கவனமாக பாரு மகனே உனக்காக கொச்சம் உனக்கு பிடித்த உழுந்துத் தோசை சுட்டிருக்கேன் வந்து சாப்பிட்டு போறியா மகனே இத்தனை கேள்விகளையும் இத்தனை அன்பையும் இத்தனை பாசத்தையும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஜீவன் அம்மா தான்.
-
- 2 replies
- 662 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.
-
- 0 replies
- 1.4k views
-
-
கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…
-
- 3 replies
- 1.5k views
-
-
வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது. வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன. எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது எதுவரைக்கும் தான் முடியும்? எழும்போது உலகம் தெளியும். வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன. வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது. உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள் கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன. முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன. மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன. செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள் நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது. எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன. சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது. ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட …
-
- 15 replies
- 2.7k views
-
-
பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )
-
- 0 replies
- 1.2k views
-
-
என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!
-
- 4 replies
- 1.5k views
-
-
பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரையும் துறந்து, உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, மக்கள் வாழ்வுக்காக மனஉ…
-
- 0 replies
- 891 views
-