கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
மனதுக்கும்…..உதடுகளுக்கும் , தொடுசல் அறுந்து நாளாகி விட்டது! வேடம் போடுவதில், நாடக நடிகர்களையும்…., மிஞ்சியாகி விட்டது! மாடு மாதிரி உழைச்ச, களைப்புப் போக, உல்லாசப் பயணம் போனால்…, அந்தக் கடற்கரை….., ஊர்க் கடற்கரையிடம்…, பிச்சை வாங்க வேண்டும்…, போலத் தெரிகின்றது! வசதியில்லாததுகள், வறுமையில் வாழ்பவர்கள்…, விற்கின்ற பொருட்களை…, அறாத விலை பேசி வாங்குவதில்…, ஒரு திருப்தி…! உறுத்துகின்ற மனதுக்கு.., நாங்களும் வாங்கா விட்டால்…, அதுகள் பட்டினி தான்…, என்று ஒரு சமாதானம்! வங்கியட்டைகளின் கனதி…., வீட்டுக்கடனின் பரிமாணம், கட்ட வேண்டிய சிட்டைகளின…
-
- 11 replies
- 2.1k views
-
-
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்
-
- 0 replies
- 929 views
-
-
முதுமையாகிலனோ ——— அப்போ வாய் பொத்தியபடி என் கதை கேட்டவர்களிடம் இப்போ நான் வாய் பொத்தியபடி அவர்கள் கதை கேட்டுக்கொண்டு காலாவதியான பொருள்களைப்போலவே காத்திருக்கிறேன் தூக்கி எறியும் காலம் ஒன்றுக்காக. பா .உதயகுமார் /OSLO
-
- 0 replies
- 1.1k views
-
-
கோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
வாழ்வு என்றும் வசந்தங்களே மல்லிகை பூ வாசனையும் வசந்தத்தின் புன்சிரிப்பும் உன் கண் வரைந்த சித்திரமும் கால் கொலுசு சந்தங்களும் இன்னும் என்னை விட்டு போகவில்லை கால்நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே நான் படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே உன் கன்னத்தின் குழிகளிலே என் கவிதைகளை புதைத்தவளே காலம் ஒன்று இருந்தால் கல்அறையிலும் வாழ்வு செய்வோம் அதன் வழியால் செல்பவன் எவனாக இருந்தாலும் எழுதிவிட்டு செல்லட்டும் எம் கல்லறையின் நடுவினிலே வாழும் வரை காதல் செய்த வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் காதல் கிளி இரண்டு கண் மூடி தூங்குதென்றும் …
-
- 2 replies
- 1.5k views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
நீ மௌனமாய் இருப்பதில்.... புரிகிறது என் காதலுக்கு.... மலரஞ்சலி வைத்தது.... நீ..........!!! காதலுக்கு உரமே...... கனிவான பேச்சு...... காயப்படுத்திய உனக்கு..... அதெல்லாம் எப்படி...... புரியும்........? நீ பார்த்தநாள்...! மரணம் தாண்டி வாழ்ந்த நாள்..... இனி............... இறந்தாலும்....... உயிர்ப்பேன் .......... உன் கண்ணை விட கொடிய விஷம் எதுவும் இல்லை ....! @ இப்படிக்கு உன்..... கவிப்புயல் இனியவன்
-
- 4 replies
- 1.2k views
-
-
கோடுகள் ஒன்பதின் வைகாசி வைகாசியில் அவனொருவன் பெற்றது ஒளி ஒளி அணைந்ததும் அதே வைகாசி - எங்கள் வீடுகளில் இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து மூன்றாம் மாப் புளிப்பது தோசையின் நலம் நாடி அணைத்த உலை - மீண்டும் கொதிக்க விறகை தள்ளும் நண்பா – நன்றி இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் இரு கோடுகள் சமன் செய் பாதைகள் பல கோடொன்றை சற்றே நீட்டினால் எல்லோரும் நலமே மறு கோட்டின் நுனியை சற்றே தட்டினாலும் முடிவு ஒன்றே இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கண்ணிற்குள் நின்றவள் கருத்தினில் திரிந்தவள் தூக்கத்திலும் துணையவள் வார்த்தைகளின் வரமவள் கற்பனையின் தாயவள் இன்னொரு பெண்ணினை அணைக்கையிலும் அகலாது நின்றவள்... காமத்திலே பேசாது சிரிப்பாள் சோகத்திலே நான் ஊறங்க மடி தருவாள்! சொற்கள் இல்லை என்னிடம் திருடிச் சென்றவளே நீ எவ்விடம்? பொருள் தேடி நான் போகையிலே இருள் எல்லாம் எனக்குள் கொட்டி அருள் இன்றிப் போனாயடி... இறைக்காத கிணறு போல் பிறக்காத பிள்ளையை எண்ணிக் கலங்கும் தாயைப் போல் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேனடி... தாயே தமிழே என் தளர்வெல்லாம் போக்கும் கவிதாயினியே இனி என்று வருவாய் என்னிடம்...?
-
- 0 replies
- 1.6k views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது. . நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
பலவருடங்களின்பின்னர் மீண்டும் ஒரு மார்கழி மாதத்தில் ஒஸ்லோ வந்திருக்கிறேன். கொட்டும் பனியும் கடும் குளிரும் என்னை முடக்கிபோட கங்கனம் கட்டியபடி. 1990 ஆண்டு டிசம்பர் மாதமும் இப்படித்தான் இருந்தது. அப்ப நான் நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமான நோறாட் அமைப்பில் பகுதிநேர ஆலோசகராகப் பணியாற்றினேன். நிறைமாதமாக இருந்த மனைவிக்கும் இரண்டு வயசுப் பயனான என் மகனுக்கும் இன்னும் விசா கிடைக்கவில்லை என்கிற கவலை மனசில். அந்த சமயத்தில் எழுதிய கவிதை. இக்கவிதையை எனது நண்பர் பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் நோர்வீஜிஜ மொழி ஆக்கம் செய்தார். கவிதை நோராட் சஞ்சிகையில் வெளிவந்தது. குடிவரவு அலுவலக்த்தில் புதிதாக பதவிக்கு வந்திருந்த செல்வி.நினிரொப் அவர்களை இக்கவிதை கவர்ந்தது. அவர் நோர்வீஜிய மொழியாக்கம் செய்ய…
-
- 2 replies
- 5.3k views
-
-
இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப…
-
- 14 replies
- 7k views
-
-
13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றா…
-
- 0 replies
- 2.5k views
-
-
என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
-
- 12 replies
- 4.1k views
-
-
தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம் நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக மனம் வெதும்பித் தணிகிறது சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில் கோபம் கொப்பளிக்கிறது விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று உலகத் தவறெலாம் சுரண்டியெடு - அதைத் தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி கூடவே இரு தளிர் கொண்டு போ - உன் துயர் சேர்த்துகரைத்து ஊற்று அது அவற்றின் விதியென்று பறை ! விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !
-
- 2 replies
- 3.4k views
-
-
இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின் சாபங்கள் செவி மடுத்தேன். உங்கள் கவியையுமா கோத்தா சிறையெடுத்தான்? நானும் சபிக்கின்றேன் எங்கள் கவியை சிறையிட்ட பாதகன்மேல் இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன். ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம் எனெனில் நீ தேசபக்தன்” என்ற உன் தோழமையை எண்ணிக் கரைகின்றேன் தோழமையே உனது மொழி தோழமையே உனது வழி தோழமையே உன் கவிதை தோழமையே தத்துவமாய் எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே வேடமில்ல நட்ப்பின் வேந்தனே ஊதுகிறேன் சங்கு உனைத் தின்ற கோழைக்கு.
-
- 3 replies
- 1.5k views
-
-
எல்லைகள் தாண்டி கருந்தேகம் ஒன்று கரங்கள் அறுந்து கால்கள் ஒடிந்து தழும்புகள் நிறைந்து கனவில் வந்து கதை பேசிச் சென்றது. வடக்கே என் வீட்டுக் கோடியில் ஆக்கிரமிப்பு எதிரியோடு தான் இட்ட சண்டையில் கரம் ஒன்று அறுந்தது.. கிழக்கே என் சொந்தங்களின் வளவில் தான் இட்ட சண்டையில் கால் ஒன்று ஒடிந்தது.. கந்தகத் துகள் துப்பி உடல்கருகிக் கரும்புலியானதன் அடையாளம் கருந்தேகம் என்று சொன்னது.. முள்ளிவாய்க்கால் தனில் உயிர் சுவாசம் தேடிய இறுதி மூச்சு வேளையில் வெள்ளைப் பொஸ்பரசில் உலக வல்லரசுகள் ஒன்றாய் வீசிய குண்டுகளில் அவன் முகமே தழும்புகளால் ந…
-
- 2 replies
- 1.5k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . புயலால் விழுந்தவரை மழை எறி மிதிக்கிறதே அயலும் தொலையும் ஆறு குளம் சேறாக தரை வீழ்ந்த மீனாய் என் தமிழ்சுற்றம் துடிக்கிறதே. ஊர்கூடி கடா வெட்டி உறவாடும் பேரூர்கள் சிறாருக்கும் பாலின்றி துணியின்றித் தவிக்கிறதே மாழையும் குளிர் காற்றும் வாளாய் சுழல்கிறதே உலகுக்குகே சோறு தந்த ஊர் பசித்துக் கிடக்கிறதே வங்கக் கடல் நடு நடுங்க மரீனாவைக் கடந்த புயல் எங்கென்று வாடிவாசல்சீமை ஏங்கி ஏங்கி அழுகிறதே
-
- 1 reply
- 1.3k views
-
-
எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், மலையகத் தமிழ், தமிழ்நாட்டு தமிழ், மற்றும் முஸ்லிம் மாவீரர்களது நினைவாக . வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒ…
-
- 3 replies
- 1.7k views
-
-
எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ!? - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது?? பார்வை பட்டாளே தாக்குதே!! **** என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் !! **** விழியழகோ !! உன் விழிபேசும் மொழியழகோ !! விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை!! **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி ? **** என்னை விழுங்க காத்திருக்கும் விழியே !! பார்வைப் பொய்கையில் மூழ்கி…
-
- 0 replies
- 1.3k views
-
-
முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே!! உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்...! கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??
-
- 4 replies
- 1.8k views
-
-
நெ - போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் (பெயர் - வினை.. பெயர் - பெயர்.. வினை - வினை.. பெயர் எச்சம் - பெயர்.. வினை எச்சம் - வினை.. வினை எச்சம் - பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும்) ஒரு கவிதை. அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ - போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. (முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.) நீங்களும் கவிதைகளை வார்க்கலாம்... தொடக்கம்.. கவிதை -1 யாழ்... தொடக்கம்... ( இசையின் தொடக்கம்) கவிதை 2.. சொல்... மழை.. (கவிதை)
-
- 176 replies
- 17k views
-
-
உடைப்பு மழைக்காடு வறண்டதென்று வரி புனையும் வண்ணம் சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு? எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும் கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்? பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்? வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும் வனையப்படாத வினையூக்கி எது? நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?
-
- 26 replies
- 6.1k views
-
-
நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…
-
- 0 replies
- 1.7k views
-