கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
656 topics in this forum
-
ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள். அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை. 15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம். ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர்…
-
- 15 replies
- 2k views
-
-
அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் த…
-
- 3 replies
- 526 views
-
-
வெரி வெரி குட்டி கிறுக்கல் பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற காரணத்தால் சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து வெளிநாடுகளுக்கு பறந்தான். எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி .. China variant UK variant South Africa variant Indian variant போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி ம…
-
- 9 replies
- 2.1k views
-
-
சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை. நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு. 'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்க…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சண்டியன் சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி. ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள். இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர…
-
- 6 replies
- 2.9k views
-
-
பாகம். 4 பதிவின் தொடர்... எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என…
-
- 16 replies
- 1.9k views
-
-
அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம். மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன. நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இரு…
-
- 39 replies
- 4.4k views
- 1 follower
-
-
மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. ******************************************************************…
-
-
- 76 replies
- 4.5k views
-
-
சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார். " ம்..." நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. 'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
முதற்பாகத்தைப் பார்வையிட.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=130316 ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை! நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெ…
-
- 16 replies
- 1.4k views
-
-
"அஞ்சலி" [உண்மையான தொல்லியல் மற்றும் வரலாற்றை நிலைநாட்டிட ...] கதைகளைக் கேட்டு வளரும் மனிதர்களாகிய நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று பெரும்பாலோனோர் அதிலும் ஆளும் அரசும் அரசு சார்ந்த மக்களும், தங்கள் இருப்பை திடம் ஆக்க ஆசைப்படுகிறார்கள். வரலாறு தமக்குப் பிடித்தாற்போல், தமக்கு புகழ் சேர்ப்பது போல இருக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அது மட்டும் அல்ல, தமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும். எதிர்த்தரப்பு தோற்கவேண்டும். என்றெல்லாம் தமக்குள்ள இன்று வரலாற்றுக்கு வரையறைகள் தாமே விதிக்கிறார்கள். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத உண்மையான வரலாற்றை பொய்…
-
- 0 replies
- 340 views
-
-
எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிக…
-
- 5 replies
- 2.6k views
-
-
காமாட்சி அம்மா, பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த படிக்கட்டில் இருந்தார். பக்கத்து வீட்டு பொபி .. பேரன் சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள் விளையாட ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது நடக்கும் இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர் கேம் என்று ... கூப்பிடுவதும் கேட்காமல் வி ளை யாடுவார்கள். அன்று வழக்கம்போலவே விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி ஏழாகி விட்டது பேரனுக்கு பசி போலும் என்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
"தேயாதே வெண்ணிலவே" முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும். அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவ…
-
- 0 replies
- 165 views
-
-
பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்ல…
-
- 12 replies
- 4.1k views
-
-
"மாயா" செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அரசியல், யுத்தம…
-
-
- 4 replies
- 686 views
-
-
நீலக் கடலின் ஓரத்தில்... கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம். விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை. எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன…
-
- 11 replies
- 2.2k views
-
-
வெளியில் பனி கொட்டுகிறது. பதினைந்து cm வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது. நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள். கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் 10 பாகை குளிரை கண்டிருப்பேன். இங்கெல்லாம் அதை குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன். சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில் கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம். கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம். படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித…
-
- 12 replies
- 3.9k views
-
-
நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ …
-
- 3 replies
- 2.5k views
-
-
தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள். பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை. பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும்…
-
- 15 replies
- 2.9k views
-
-
"மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர். எனக்கு அங்கு நடப்பதில் …
-
- 0 replies
- 368 views
-
-
‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ள…
-
- 22 replies
- 4.4k views
-
-
நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா.....…
-
-
- 7 replies
- 536 views
-
-
70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம் நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து …
-
- 4 replies
- 967 views
-
-
சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவர…
-
- 20 replies
- 2.3k views
-