கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…
-
- 6 replies
- 2.6k views
-
-
என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்ட…
-
- 10 replies
- 3.5k views
-
-
ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கு…
-
- 14 replies
- 2.2k views
-
-
தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம். நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே அ…
-
- 18 replies
- 2.7k views
-
-
தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்
-
- 0 replies
- 1.7k views
-
-
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.நன்றி ;சுஜாதா -------------சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;-------------தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?கதை: முதலிரவில் கேள்வி-------------- என் கதைகள் தொடருது -------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை
-
- 1 reply
- 1.7k views
-
-
முதலாளித்துவம் ------ பணப்பலம் உள்ளவனும் பணம் படைத்தவனும் பணத்தாசை பிடித்தவனும் ஒன்று சேர்ந்தார்கள் "பிறந்தது பொருளாதாரம்" ^ எழுத்துருவாக்கம் கே இனியவன்
-
- 1 reply
- 1.3k views
-
-
"நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழகிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆயத்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் சரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் . தராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வளவு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அ…
-
- 17 replies
- 3k views
-
-
புனிதமலர் "தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா " கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது . என்னவாக இருக்கும் ? "பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது" அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் . இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால் …
-
- 25 replies
- 4.3k views
-
-
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் . நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் . இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் மற்றவர் முன் முகம் சுளித்ததே இல்லை. எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. உதவி என்று கேட்கத் தேவையே இல்லை. அதை எந்தக் கஷ்டம் வந்தாலும் செய்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். யாருமே அவனை வெறுத்ததேல்லை. சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டும் இப்ப கொஞ்சக்காலம்தான் காசு கையில் தங்குகிறது. சொந்தமாகக் கடை வைத்திருக்கிறான் தான். ஆனாலும் கடன் கேட்பவர்களுக்குக் குடுத்து, பிள்ளைகள் ஆசைப்பட்டது எல்லாம் வங்கிக் கொடுத்து, பிள்ளைகளுக்கு டியூசன் காசும் கட்டவே காசு கரைந்துவிடுகிறது. இத்தனை நாளும் இருந்தது வாடகை வீட்டில் தான். இவனுக்கேற்ற மனைவி பிள்ளைகள். சொந்த வீடு வேண்டும் என்று மனைவி என்றும் கேட்டதே இல்லை. ஆச…
-
- 11 replies
- 1.7k views
-
-
மரணதேவன் பூட்டிய கடைக்கதவை திரும்ப இழுத்துப்பார்த்து விட்டு தெருவில் இறங்க வழக்கக்தை விட இன்று பிந்திவிட்டது என்பதை உணர்ந்தான் மதி .கடை பூட்டும் நேரம் வந்து வரிசையில் நின்ற அந்த நாலு கஸ்டமர்களையும் மனதில் திட்டிக்கொண்டு இரவு பத்து நாற்பது மணி பஸ்சும் போயிருக்கும் . இனி எப்படியும் அடுத்த பஸ் வர பதினோன்றாகும் சப்பேயிற்கு பத்து நிமிட நடைதான் ஆனால் இந்த நேரம் இருட்டில் நடப்பதை விட பஸ்சிற்கு காத்திருப்பது பாதுகாப்பனது என்று எவருமற்ற அந்த பஸ் நிலையத்தில் ஒதுங்குகின்றான் . தினமும் பகலில் எந்தவொரு பய உணர்வும் இல்லாமல் உலா வரும் இந்த இடம் இரவானதும் வேறு ஒரு கோலம் பூண்டுவிடுகின்றது. இன்று பகல் கூட மதிய சாப்பாடு வாங்க கடையை பூட்டிவிட்டு…
-
- 12 replies
- 2.3k views
-
-
1988ஆம் ஆண்டு வீரகேசரியினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை. மீள் பிரசுரம் - 13-12-2015 ஞாயிறு வீரகேசரி வாரவெளியீடு நன்றி வீரகேசரி. மானுடம் தோற்றிடுமோ! அந்த நள்ளிரவில் தூரத்தே வெடிச்சத்தங்கள் கேட்டன. குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அவளுக்கு நெஞ்சுக்குள் சிலீரென்றது. வந்திற்றானுகள் ரவண்டப்புக்கு! இவர இப்ப என்ன செய்யிற! என்ன மாதிரி ஒளிக்கிற! - குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனம் கிடந்து பதறியது. தற்செயலா வந்து இவரையும் கூட்டிற்றுப் போனாஎனக்கும் என்ர புள்ளக் குஞ்சுகளுக்கும் என்ன கெதி! போட்டு அடிச்சுப் போடுவானுகளோ தெரியா? இவர் அதுகளத் தாங்கவும் மாட்டார். - கணவனை …
-
- 5 replies
- 3.9k views
-
-
கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால் சங்கங்களது நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது. சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொட…
-
- 2 replies
- 2.3k views
-
-
பக்கத்து வீட்டு அழகிய அரக்கி. புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில…
-
- 4 replies
- 2.5k views
-
-
அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார். நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார். கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார். பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு. எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும். ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும் …
-
- 5 replies
- 2.5k views
-
-
மழை வரப் போவதுபோல் மேகங்கள் எல்லாம் கருங் குன்றுகளாகி ஒன்றுடனொன்று மோதுவதுபோல் செல்வதும் பின்னர் விலகுவதுமான விண் விளையாட்டைப் பரணி யன்னலினூடே பாத்துக்கொண்டே நின்றான். இப்ப சில வாரங்களாக இப்படித்தான் கடும் புழுக்கம் இவன் மனதிலும் வெளியிலும். என் மனதைப் போலத்தான் மேகங்களுமோ??? இன்னும் முடிவை எடுக்க முடியாது அலைந்துகொண்டு திரிகின்றன. குளிர் காற்று வீசுகிறது. கரு மேகங்களும் தெரிகின்றன. ஆனால் இன்னும் ஒருசிறு மழைத்துளி கூட விழாது ஏன் எல்லோரையும் எதிர்பார்த்தே காத்திருக்க வைக்கின்றது என மனதில் எண்ணிக்கொண்டே, என்னால் கூட ஒரு மாதமாகியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான். ...…
-
- 15 replies
- 6.4k views
-
-
மூன்று வாரங்களுக்கு முன்பாக என் Mobile phone அதிகாலை 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து விட்டது என்று அதிர்வை ஏற்படுத்தியது இந்த நேரத்தில் வரும் குறும்செய்திகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தினை கொடுப்பதில்லை. மரணம் பற்றிய அறிக்கைகளையும், துயரம் அப்பிய செய்திகளையுமே தாங்கி வருவன அவை. கிலேசம் மிக்க தருணங்களை தருவன அவை. நித்திரையில் இருந்தாலும் பூனை நடந்தாலே அதன் சத்தத்தில் முழிச்சு எழுபவன் நான். பொதுவாக IT யில் தொழில் செய்பவர்களுக்கு ஆழமான நித்திரை என்பது ஒரு கனவு. எனக்கு அது அநேகமாக வாய்ப்பதில்லை. குறுஞ்செய்தியை வாசிக்கின்றேன். எனக்கு மிகவும் நெருக்கமான மாமா - அம்மாவின் தம்பி - யின் மரணச் செய்தியை தாங்கி அது வந்திருந்தது. அக்கா அனுப்பி இருந்தா. அவரை மா…
-
- 22 replies
- 5.1k views
-
-
இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான் இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு நோக்கு நிலையில் நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிர…
-
- 8 replies
- 3.2k views
-
-
கட்டாக்காலி காலம் ஆரம்பித்திருந்தால் வயலில் கால்நடைகள் நின்றன. மதகில் கனகாலம் கடந்து நாதன் உட்கார்ந்திருந்தான். நாதனிற்கு இளமைக்காலம் இலகுவாய் இருக்கவில்லை. பள்ளி புரியவில்லை. பெறுபேறுகள் கடிவாளம் இடவுமில்லை பாதைகாட்டவுமில்லை. பதின்மத்தில் நாதன் இயக்கத்தில் சேர்ந்தான். சிலகாலம் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்திலும் நாதன் உயரவில்லை. துண்டு குடுத்து முறைப்படி விலகி வெளிநாடு சென்றான். முப்பது வருடம் கடந்து இன்று மதகில் இருக்கிறான். திட்டமிட்ட செயற்பாடு எதுவும் எப்போதும் நாதனிடம் இருந்திராத போதும், எதேச்சையாய் ஒருமித்த காரணிகள் அனுகூலங்களை நாதனிற்கு உருவாக்கின. பணம் பெருக்குவது நாதனிற்கு மிக இலகுவாகத் தானாக நடந்தது. அது அதுவாகப் பெருகியது. ஊரில் நாதனின் வீடு பெருத்த காணி…
-
- 10 replies
- 5.6k views
-
-
சுன்னாகம் ரயில் நிலையத்தில் வழமைக்கு மாறாக அன்று சன நடமாட்டம் அதிகமாக இருந்தது.வழமையாக பாடசாலை விடுமுறை நாட் களிலும்,கோயில் திருவிழா காலங்களிலும் தான் வழமைக்கு மாறாக சன நடமாட்டம் இருக்கும் ஆனால் இன்று ஏன் இப்படியிருக்கு என்ற வினா எனக்கும் , அப்பாவுக்கும் ஏற்பட்டது "பள்ளிக்கூட விடுதலை விட்டாச்சோ" "இல்லை பப்பா" "ஏன் இவ்வளவு சனமாக இருக்கு,ரெயினில இருக்க இடம் கிடைக்குமோ தெரியவில்லை,இப்படி தெரிதிருந்தால் முதலே கே.கே.எஸ் க்கு போய்யெறியிருக்கலாம்" "நான் முன்னுக்கு ஒடிப்போய் ஏறி இடம் பிடிக்கிறேன் நீங்கள் பின்னுக்கு வாங்கோ" "நீ ஒன்றும் ஒடிப்போய் இடம் பிடிக்கதேவையில்லை ,இடம் இல்லயென்றால் நின்று கொண்டு போகலாம் ஒடிப்போய்யெறி கை காலை முறிச்சுப்போடதை" தந்…
-
- 20 replies
- 4k views
-
-
நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர் விடைபெற்றார்... வழமையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படி உரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே...... அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக பிரமுகர்கள் பிரமாண்டமான முறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில் தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள். பிரமாண்டமான ஒரு மேடையை, புலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர். …
-
- 9 replies
- 3k views
-
-
அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது. ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டி…
-
- 17 replies
- 8.7k views
-
-
மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள். குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்…
-
- 8 replies
- 2.3k views
-
-
புரட் …சீ ( சிறுகதை ) - சாத்திரி ( பிரான்ஸ் ) காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது. “…
-
- 4 replies
- 1.9k views
-