கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு…
-
-
- 7 replies
- 423 views
- 1 follower
-
-
கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன. கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை கு…
-
- 7 replies
- 1.6k views
-
-
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் …
-
-
- 7 replies
- 526 views
-
-
மரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் ம…
-
-
- 7 replies
- 244 views
- 1 follower
-
-
அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, April 23, 2013 அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள். எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு சாவினைத் தழுவ அவன் தனக்கான சந்தர்ப்பத்தை தேர்ந்து வெளிக்கிட்ட போது இலட்சிய…
-
- 7 replies
- 2.2k views
-
-
எங்களை வரிசையாக நிற்க சொன்னார்கள். சேறு பூசிய எங்கள் உடம்பில் இடுப்பிற்கு கீழே மறைப்பதற்கான உள்ளாடையை தவிர எதுவுமே இல்லை. எந்த திசையை நோக்கி நிற்கிறோம் என்று கூட தெரியாமல் கண்கள் கட்டப்பட்டிருந்தன. வெறும் கால்களால் தடவியதில் நாங்கள் ஒரு சேற்று பகுதி நிறைந்த புற்தரையில் நிற்பதை உணர்ந்தேன். எங்களுக்கான வரிசைக்குப் பின்னே பெண்களை கண்கள் கட்டிய நிலையில் வரிசைப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் பரிதவிப்பான குரல்களும் அடுத்த நிலை தெரியாத தவிப்பும் அவர்களின் குரல்களில் ஒலித்தது மட்டும் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது. எங்களை வரிசைபடுத்தியவர்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்காக காத்திருப்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொறுப்பாளனாகவோ அல்லது அவர்களின் தலைவனாக கூட இருக்கல…
-
- 7 replies
- 2.2k views
-
-
நீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங…
-
-
- 7 replies
- 446 views
-
-
செவ்வந்தித் தோட்டம் காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள். குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக் காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது. இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவள் …
-
- 7 replies
- 2.1k views
- 1 follower
-
-
அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., …
-
- 7 replies
- 2.9k views
-
-
என்ர பிரச்சனைக்கெல்லாம்.. ஒரே தீர்வு இந்தக் குதிரையளிட்டத் தான் இருக்குது எண்டு என்ர ‘உள்ளறிவு' அடிக்கடி சொல்லிகொள்ளும்\, மச்சான் ! அவனவன்.. அவனவனிட்டை இருக்கிற திறமையளைப் பாவிச்சு முன்னுக்கு வாறதில ஒரு தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்லை என்ற படி பேப்பரை மிகவும் அவதானமாகப் படித்துக்கொண்டிருந்தான்! நானும் எதுவும் பேசாமல், இந்தக் கவனத்தைப் படிக்கிற காலத்தில காட்டியிருந்தால் இப்ப எங்கேயோ போயிருப்பாயே சூட்டி என எனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்! அதோட மாதாவிட்டையும் ஒரு சின்னப் பந்தயம் வைச்சிருக்கிறன்! எனக்குப் பெரிய தொகை விழுமெண்டு சொன்னால்.. அவவுக்கு அரைவாசி தாறதாச் சொல்லியிருக்கிறன்! சரி.. உனக்கு எப்ப குதிரையில ‘காசு' விழுந்து...எப்ப.. உன்ர குடும்பத்த…
-
- 7 replies
- 2.4k views
-
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வ…
-
-
- 7 replies
- 423 views
- 1 follower
-
-
ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன். பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல் அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும். அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்ற…
-
- 7 replies
- 1.3k views
-
-
கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் …
-
-
- 7 replies
- 883 views
-
-
இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…
-
- 6 replies
- 2.6k views
-
-
கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
-
- 6 replies
- 2k views
-
-
சிலந்தி வலை ---------------------- காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன். சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி …
-
-
- 6 replies
- 567 views
-
-
ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள…
-
-
- 6 replies
- 620 views
-
-
தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் .... துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்... அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வள…
-
- 6 replies
- 2.2k views
-
-
அவள் மனம் போலவே எங்கும் இருண்டுபோய் அடை மழை பெய்துகொண்டிருந்தது. பஸ்ஸில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தபடியால் பூட்டிய கண்ணாடி யன்னல்களின் ஊடே தெறிக்கும்மழை நீர் அவள் முகத்திலும் இடைக்கிடை விழுந்தது. ஆனாலும் அதைத் துடைக்க வேண்டும் என்னும் நினைப்பே அற்று மழை நீரில் இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தியா. ஏன் தான் இந்த உலகில் பிறந்தேனோ என்னும் சலிப்பு மனதில் எழ, எனக்கு வேறு வழியே இல்லை என்னும் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு மாற்று வழி தெரியாது, பெருமூச்சு ஒன்றே வெளிவந்து அவளை அசுவாசப்படுத்தியது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் எனில் ஒன்றை மட்டும் இறுகப் பற்றியபடி ஏன் வாழ்வை நாம் எதிர் கொள்ள வேண்டும். அந்த ஒன்றே யாதுமாகி, எதையும் அலட்சியம் செய…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சண்டியன் சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி. ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள். இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர…
-
- 6 replies
- 2.8k views
-
-
அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள்…
-
- 6 replies
- 1.7k views
-
-
மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள் மனதில் இன்றாவது அரைவாசி தந்தால் நல்லது வாங்கி அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி ....... இவன் என்னடா வேலை முடிய வாடா ஊருக்கு காசு போடணும் என்னிடம் விஸா இல்லை நீதான் போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு ,டி சொல்லு வாறன் எண்டுட்டு எங்க போறான் இவன் என தனக்குள் கடுப்பாகியபடி நகுலன் வீதியை அலுப்பா பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில் என்ன நடக்கு எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஊமைக் கனவுகள் தோழி அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவள் வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது. “அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?" அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது. "ஏன் பவானி என்ன விசயம்? ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?" மௌனமாய்ப் போனவளின் …
-
- 6 replies
- 2.6k views
-
-
இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்…
-
-
- 6 replies
- 404 views
-