Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை, வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை - திமுகவின் தேர்தல் வாக்குறுதி.! சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் ஈழத் த…

  2. ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இந்திய ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது: “ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி ஆதரிக்கலாம்? டெல்லியில் இன்று மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 4 அல்ல 40 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் மீனவர் பிரச்சினை தீரப்போவதில்லை. சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். தமிழர்களின் தொடர் போராட்டத்தால்தான் மத்திய அரசு இந்த தடையை …

  3. ஈழத் தமிழர் ஐ.நா. விவகாரம்: கோவையில் நாளை பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் 32 Views சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த வேளையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையில் இந்தியா வாக்களிக்காது புறக்கணித்தமையால், பிரதமர் மோடிக்கு எதிராக இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 6 நாடுகள், இலங்கைக்கு எ…

  4. சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த இயக்குநர் சேரன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவெளியில் சேரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். கன்னா பின்னா திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், ஈழத் தமிழர்கள் திருட்டு டிவிடியை தயாரிப்பதாகவும் அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது எனவும் கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரனின் இந்த பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழருக்காக போராடுவது என்பது தமிழர் கடமை. நாம் பிறந்த இந்த சமூகத்துக்காகப் போராடுவது என்பது கடமை. ஒருவரை போராட வருமா…

  5. ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்! November 16, 2019 ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல் இதில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர். இந்நிலையில் இந்த முகாம்களை உடனடியாக மூடிவிட்டு அப்பாவி ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சிறப்பு முகாம்களை முற்று…

  6. சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்மை தரக்குறைவாக பேசிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி போலீசில் புகார் அளித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்த…

  7. பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்து…

  8. ஈழத் தமிழர் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கீடு தேவை; திருமாவளவன் வலியுறுத்து ஈழத் தமிழர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிதம்பரத்துக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்வது தொடர் கதையாகி விடுகிறது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து இதற்கு நிலையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையயனில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறு…

  9. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி போன்று பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான பாதையாக இருந்தபோதும், அவர்களது அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் புறக்கணிக்க கூடியதல்ல. இவ்வாறு பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்தும் பங்களிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்கள்…

  10. ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள் எம்.டி, முத்துக்குமாரசாமி மாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது http://studentsprotest.blogspot.in ஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட…

  11. ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்! ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள்! ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அ…

  12. இலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தகுந்த …

  13. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையே…

  14. ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு: இந்தியாவுக்கு அவமதிப்பு இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு, எனவே அதை அடைவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்…

  15. Nov 5, 2025 - 05:38 PM ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசி…

  16. சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவி…

  17. ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை. தமிழ்நாடு :- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, மே17 உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் வருகின்ற 29ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மே 17 சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித…

  18. ஈழத் தமிழர்கள், இந்திய குடியுரிமையையே விரும்புகின்றனர் ; கருத்து கணிப்பில் தகவல்! திருத்தபட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் அவர்கள் இலங்கைக்கு மீள செல்வதே சிறந்த தீர்வு என கூறிவருகின்றனர். இந்த சூழலில் இலங்கை தமிழர்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கு பிரபல ஊடகமொன்று அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புவதா…

  19. ஈழத்த தமிழர்களுக்கு மாநில சுயாட்சியே தீர்வு - தா.பாண்டியன் விசேட செவ்வி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வை…

  20. ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழுச்சி பெற்ற மாணவர் போராட்டங்களால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு:- 24 மார்ச் 2013 "கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் போராட்ட வடிவங்களில் மாற்றம்" இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், மாநில அரசு விடுமுறைறையை அறிவித்தது. துற்போது நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும் பொறியியல் கல்லூரிகள் திறக்க்படுவதற்கான திகதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்ப…

  21. Franklin Herbert நண்பர் நவரத்னம் பிரசாந்தன் அவர்கள் இலங்கை. பிரச்சனையில் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ந்துப்பார்த்தால் .... கலைஞர் எதிர்ப்பு மனநிலை அவர் மனதிலே வேரூன்றி நிற்பது நன்கு புரிகிறது. இலங்கை பிரச்சனைக்கு திமுக அரசு துணை நின்று புலிகளை ஆதரித்து என்பதை காரணம் காட்டி கலைக்கப்பட்டது.திமுக புலிகளுக்கோ இலங்கை பிரிச்ச்சனைகளுக்கோ தேவையற்ற வாக்குறுதிகள் தந்து புலிகளை ஏமாற்ற்றவில்லை. ஆனால் பேச வேண்டிய இடங்களில் பேசினார்.செய்ய வேண்டியவற்றை செய்தார்.அப்பொழுது அவர் ஆட்ச்சியை கலைக்க மதிய அரசுக்கு ஜெயலலிதா விண்ணப்பித்தார். என்னவென்று.. திமுகவும் கலைஞரும் விடுதலப் புலிகளுக்கு உதவுகிறார்கள் ...புலிகள் நடமாட்டம் தமிழத்தில் அந்த சமயத்தில் அதிகமாக இருந்தது என்று...... அது பொ…

    • 0 replies
    • 826 views
  22. ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைதேவை: தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் 73 Views “ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல்கள…

  23. ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த வைகோவின் கோரிக்கையை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டார். [sunday, 2014-02-09 11:24:58] தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, "அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார். வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது. "இந்தியில் நீங்கள் உரையாற்ற…

  24. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு, தமிழக அரசை ``மாற்றாந்தாய்'' மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இது குறித்து செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:- கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை நிறைவேற்ற முயற்சித்தல் சர்க்கரை ஆலைகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துதல்; குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்யும் டீசல…

    • 0 replies
    • 399 views
  25. Published By: VISHNU 21 JAN, 2025 | 10:42 PM இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. நீண்டகாலமாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக ஓர் ஒற்றைத்தீர்வை யாராலும் முன்வைக்கமுடியாது. மாறாக இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த வாரம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.