தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்.... 26 ஆகஸ்ட் 2016 மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை பொலீசார் திடீரென இன்று கைது செய்தனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்ட…
-
- 1 reply
- 854 views
-
-
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கொடுத்துவிட்டால் கூடங்குளம் அணு மின் நிலையம் மே முதல் வாரத்திலேயே செயல்பட தொடங்கிவிடும் என சென்னையில் உள்ள ரஷிய துணைத் தூதர் நிகோலோய் லிஸ்தபதோவ் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் யூனிட் அமைக்கும் பணிகள் முடிந்து உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் மற்றொரு 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது யூனிட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த முதல் யூனிட்டில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே மின் உற்பத்தியைத் தொடங்க முடியும். …
-
- 1 reply
- 399 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆ…
-
- 1 reply
- 286 views
-
-
மிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை? கழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!” ‘‘தினகரனின் அ…
-
- 1 reply
- 848 views
-
-
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி! நாள்: செப்டம்பர் 24, 2014 பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை நேரம்: மாலை சரியாக 3 மணி பேரணி நிறைவடையும் இடம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை. மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்; 1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே! : 2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்! 3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு! …
-
- 1 reply
- 517 views
-
-
பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்: தமிழிசை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார். அதேபோன்று இன்று காங்கி…
-
- 1 reply
- 682 views
-
-
'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!! அ,தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களுக்கும் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையை ஊடகங்களும் இரண்டொரு நாள் வி…
-
- 1 reply
- 796 views
-
-
யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 26 மார்ச் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன. யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
- 1 reply
- 370 views
- 1 follower
-
-
வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா? imd.gov.in சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம். தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற…
-
- 1 reply
- 398 views
-
-
பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்! மின்னம்பலம் மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “ ‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’ நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம். …
-
- 1 reply
- 565 views
-
-
தமிழகத்தில் 234 தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை; 75 மையங்களில் தொடங்கியது: 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு சென்னை தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மண…
-
- 1 reply
- 289 views
-
-
தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின் காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று கர்நாடகம் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்பதால், மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை பொதுவானது. எனக்கானது அல்ல என்று தென் மண்டல திமுக அமைப்பாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார். பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவர் சந்திப்பதற்கு முன்பு ஒரு பேட்டியின்போது இப்படிக் கூறியுள்ளார் அழகிரி. மதுரை திமுகவில் நடந்து வந்த சலசலப்புகளால் அதிருப்தியுள்ள திமுக தலைமை மதுரை மாவட்ட திமுக குழுவை கூண்டோடு நீக்கியது. புதிய குழுவை அறிவித்தது. மேலும் மு.க.அழகிரியாகவே இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை நீக்கினால் நீக்கத் தயங்க மாட்டேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்த…
-
- 1 reply
- 566 views
-
-
“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா ஐந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள். “பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் நிறுத்தியபோதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு…
-
- 1 reply
- 938 views
-
-
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, நான்கு கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 5) முறைப்படி அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்."மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம்' என்ற பெயரில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை தொடங்கினார். முன்னதாக, அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக வர வேண்டாம் என்று அதிமுகவுக்கும், அதிமுக வரக் கூடாது என்று திமுகவுக்கும் தமிழக மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த 2 திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று மக்கள் எண்ணுகின்றனர். இந்த மாயை…
-
- 1 reply
- 316 views
-
-
புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர் ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து. சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. சுவாதியின் தந்தையும், கொலையை நேரில் பார்த்த சாட்சி யான நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர். அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய நீதிபதி, சிறையில் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு …
-
- 1 reply
- 451 views
-
-
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் சிலைகளின் பாதுகாப்பிற்காகவும்,ஊர்வலத்தை ஒட்டியும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் வரும் 22ம் ந் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் காட்சி அளிக்கிறார். சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த…
-
- 1 reply
- 3.3k views
-
-
சென்னை: மதிமுகவைத் தொடர்ந்து பா.ம.க வும் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார். இதையடுத்து பா.ம.க வும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=359…
-
- 1 reply
- 475 views
-
-
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் | படம்: சிறப்பு ஏற்பாடு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு விவரம்: தேமுதிக - 104 தொகுதிகள் மதிம…
-
- 1 reply
- 645 views
-
-
தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 134 தொகுதிகளில் வென்றது. திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான கடந்த (2011-2015) ஆட்சியில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், இப்போதைய தேர்தலில் தோற்றுப்போயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மையுடன், 6-வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க உள்ளார். தவிர, எம்ஜிஆருக்குப் பிறகு, ஆளுங்கட்சியாக இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார். தேர்தலில் வெற்றிப…
-
- 1 reply
- 521 views
-
-
தமிழக மக்களின் குறைகளை கேட்கும் மத்திய அரசை அமைப்பதே தனது குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் 65 ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் : காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் , பா.ஜ., கட்சிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மின் வெட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை சரி செய்ய மத்தியில் தமிழகத்திற்கு ஆதரவான அரசு தேவை என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் உருவாகும் மாற்றம் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை என கூறிய அவர் கேபி…
-
- 1 reply
- 729 views
-
-
எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால்…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்துவிட்டதாக கூறும் ஆளுநர் ரவி: அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,YOGESH_MORE / GETTY IMAGES படக்குறிப்பு, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை ஆன்மிக நீக்கம் செய்து, அதனை வெறும் வாழ்வியல் நெறி நூலாக மட்டும் சுருக்கிவிட்டார்கள் என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் திருக்குறளின் ஆன்மிக நீக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புக்குக் காரணம் என்றும் கூறினார். …
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ திடீர் மரணம் படக்குறிப்பு, திருமகன் ஈ.வெ.ரா 4 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46). இவர் ஈரோடு கிழக்கு…
-
- 1 reply
- 872 views
- 1 follower
-
-
(facebook)
-
- 1 reply
- 332 views
-