தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
பிரகாஸ்ராஜை கொல்ல திட்டம்? கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ் உட்பட மேலும் 35 பேரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஸ் பெங்களுரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கேல் என்ற நபரிடமிருந்து டயறியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த டயரி மூலம் பிரகாஸ்ராஜ் உட்பட 35 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. இதற்காக இந்து மதத்துடன் தீவிர ஆர்வம் கொண்டுள்ள 50 பேரை பயன்படுத்த திட்டமிடப்பட்டமையும் டயரி மூல…
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்…
-
- 1 reply
- 630 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் பாம்பை ஒருவர் அடித்துக் கொன்ற காணொளி சமூக ஊடகத்தில் பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாம்புகளை அடித்துக்கொன்றால் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்ன தண்டனை வழங்கப்படுகின்றன? குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளை எதிர்கொள்ளும்போது அவற்றை அடித்துக்கொல்லாமல் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? பாம்பை அடித்துக் கொல்லும் வீடியோ திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜி. இவர் கோவை ம…
-
- 1 reply
- 480 views
- 1 follower
-
-
மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை படக்குறிப்பு, சாதனைப் பெண் ரூபா. கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார். இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் "மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன. விஜய் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அதே போன்ற எதிர்பார்ப்புக்கு இடையே இசை வெளியீட்டு விழாவில் விஜய் …
-
- 1 reply
- 733 views
-
-
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். Can't believe this #namuthukumar is no more ...He's written more than 200 songs in my films A huge loss May god give strength to his family இசையமைப்பாள…
-
- 1 reply
- 735 views
-
-
தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள் அறிவிப்பு! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Tamilnadu-Government.jpg தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது இதன்படி, தமிழகத்தின் புதிய ஒன்பது மாவட்டங்களிலும் 45 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் …
-
- 1 reply
- 482 views
-
-
வணக்கம் ! லயோலா திரி ஏற்றி தொடங்கி வைத்து, இப்போது தமிழகம் முழுதும் காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் ஈழப் போராட்டத்தைப் பற்றின முன்னுரை எவருக்கும் தேவையில்லை. அதனால் நான் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். தொலைகாட்சியின் வாயிலாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். அந்தப்போரட்டத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்கிறேன். வெள்ளிகிழமை (15/3/13) காலை 11 மணியளவில், அலுவலகம் கிளம்பும் முன்பாக சற்றென்று ஒரு விடயம் எனக்குப்பட்டது. ஞாயிறன்று மே - 17 இயக்கம் ,மற்றும் மாணவர் அமைப்பு மெரினா கடற்கரையில் நடத்தவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கு வலு…
-
- 1 reply
- 629 views
-
-
'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்! தோழர். நேற்று துவங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. 'தோழர் எனச்சொல்லி உங்களிடம் யாராவது பேசினால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்' என போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னது தான் இந்த வார்த்தை வைரலாக காரணம். சைலேந்திரபாபு இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சைலேந்திரபாபு இதை சொல்லவில்லை. இதைச் சொன்னவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, கோவை வஉசி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 7-வது நாளான கடந்த 23-ம் தேதி அதிகாலை போராடிய மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வ…
-
- 1 reply
- 646 views
-
-
பாஜக மாநிலச் செயலாளராக இருந்து வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜூலை 19ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி சேலம் வந்துள்ளார். ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். அத்வானி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் நகரம் முழுவதும் காக்கிகளின் முற்றுகையில் சிக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே உள்ளன. ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இதுவரை சிக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நேரிட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று மதியம் சேலம் வந்த அத்வானி, …
-
- 1 reply
- 656 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அக்கட்சியின் பொருளாளராக இருந்த நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பொறுப்பேற்றார். சில நாள்களில், சசிகலா குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் முதல்வர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமாசெய்தார். அவருக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளராக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். அப்போது, 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் இல்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, எடப்பாடி ப…
-
- 1 reply
- 742 views
-
-
கருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் – மு.க.ஸ்டாலின் கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வா…
-
- 1 reply
- 455 views
-
-
"அம்மா கொவிட் -19" வீட்டு பராமரிப்பு திட்டம், நாளை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கொவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கின்றார். இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முககவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டும் இத்திட்…
-
- 1 reply
- 715 views
-
-
தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…
-
- 1 reply
- 587 views
-
-
ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உயில் இருக்கிறதா? இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ய…
-
- 1 reply
- 597 views
-
-
வெற்றியா அல்லது வீரச்சாவா? வா. மணிகண்டன் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊர் வழியாக ஒரு நடைப்பயணம் நடைபெற்றது. தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி சில போராளிகள் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அது தாய்த்தமிழ் பள்ளி கட்டுவதற்கான நிதி வசூல் என்று நினைக்கிறேன். ‘வீட்டிற்கு ஒரு செங்கல்’ என்கிற கோஷத்துடன் தங்களின் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்கள். தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கும் குடும்பங்கள் இந்தப் பள்ளி துவங்குவதற்காக ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்களின் வேண்டுகோள்களில் ஒன்று. தோழர் தியாகுதான் நடைப்பயணத்திற்கு தலைமை தாங்கினார். பிரச்சாரக் குழுவில் வந்தவர்களுக்கு அன்றைய தினத்தின் மதிய உணவு எங்கள் ஊரில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நான் ட்ரவுசர் போட்டுத் தி…
-
- 1 reply
- 458 views
-
-
அதிர்ச்சியளிக்கும் வேளாண் பல்கலையின் தேர்வு முடிவு : சீமான் வலியுறுத்தல்! மின்னம்பலம்2021-12-09T07:30:01+5:30 வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியவர்களில் 90% பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்திய மாணவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் எழுதிய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின…
-
- 1 reply
- 333 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறிய, குமரி மீனவர்கள் போராட்டம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே குமரி மாவட்ட மீனவர் போராட்டத்திற்கும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க கோரி, குழித்துறை பகுதியில் மீனவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பல கிராம மீனவர்களும் குழித்துறை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று கலெக்டர் சஜ்ஜன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்."தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மரத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 541 views
-
-
காவிரி என்பது வெறும் நீரல்ல! காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள். வயிற்றுக்கு மட்டுமே சோறிட்…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது…. சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 92 போலிக் கடவுச்சீட்டுக்கள் மற்றும் கடவுச்சீட்டுத் தயாரிக்கும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மத்திய குற்றப்பிரிவின், போலிக் கடவுச்சீட்டு தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடியைச் சேர்ந்த வீரகுமார்(47) அவரது தம்பி எழும்பூரில் வசிக்கும் பாலு (எ) பாலசுப்ரமணியன்(45) கடையில் வே…
-
- 1 reply
- 572 views
-
-
10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிரு…
-
- 1 reply
- 909 views
-
-
ஆசியாவில் கொரோனாஅலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை 21 May, 2025 | 10:47 AM சென்னை: ஆசியாவில் மீண்டும் புதியகொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில்கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழகத்தில் 34 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
‘தமிழ்நாட்டிலேயே புலிகளுக்குப் பயிற்சி’ “ஜூலை 1983 தமிழர் எதிர்ப்புக் கலவரங்களின் பின்னர், தமிழ் நாட்டுக்கு தமிழ் அகதிகள் வருகையும் தமிழ் நாட்டு அரசாங்கத்துக்குத் தெரியக்கூடியதாக அதன் அனுசரணையுடன் தமிழ் கிளர்ச்சியாளர்கள் பயிற்றுவித்தலும் தொடங்கியது. இந்த வகையில், தமிழ் நாட்டின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல என புதுடெல்லி உணர்ந்த வேளையில்தான், 1984இல் இந்திய தேசிய புலனாய்வு முகவரங்கள், அவர்களின் பயிற்சித் திட்டங்களைத் தொடங்கின” என, “ஒப்பரேஷன் பவான்: IPKF உடன் விமானப்படையின் வகிபாகம்” எனும் தனது நூலில், முன்னாள் விமானப்படை தளபதி பாரத் குமார் கூறியுள்ளார் என, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ…
-
- 1 reply
- 642 views
-
-
ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார் ஜெயா. வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக… ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா. 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்…
-
- 1 reply
- 351 views
-
-
‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். "இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். 'அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன?' என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் …
-
- 1 reply
- 429 views
-