Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி! மின்னம்பலம் அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.இதையடுத்து சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி…

  2. பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதுடெல்லி: புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் ச…

  3. திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர திடீர் உத்தரவு! சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் …

  4. “தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுத…

  5. தேர்தல் ஆணையத்தில் 17-ம் தேதி விசாரணை: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? - தொண்டர்கள் ஆதரவை திரட்டும் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்கான முயற்சியில் அதிமுக வின் இரு அணிகளும் தீவிரமாகி உள்ளன. அதிமுகவின் பொதுச்செய லாளராக சசிகலா தேர்வு செய் யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த னர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்…

  6. பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த விவசாயி ஒருவர், பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று செய்கை செய்து வருகிறார். டெல்லியில் 36-வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேற…

  7. சாதி கட்சிகளின் நாடகங்கள் இப்படிதான் அரங்கேறுகின்றன. https://www.facebook.com/photo.php?v=413257952124593

  8. செந்தில்குமரன்: உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரை தமிழர் பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SENTHIL KUMARAN நீங்கள் பார்க்கும் இந்தப் படம்தான் இந்த ஆண்டின் (2022) மிகச்சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை பெற்றுக் கொடுத்த தொகுப்பின் ஒரு படம். விருதைப் பெற்றுக் கொடுத்தது இந்தப் படம் என்றால், பெற்றுக் கொண்டவர், ஒரு மதுரைத் தமிழன். சொல்லப்போனால், இந்த விருதைப் பெறும் முதல் தென்னிந்தியரும் இவர்தான். பட மூலாதாரம்,SENTHIL KUMARAN ப…

  9. ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தில்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென்று நேற்று வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக தமிழ்நாடு இல…

  10. தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை …

    • 1 reply
    • 480 views
  11. தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் - 1. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகளின் தொகுப்பையும், விபரங்களையும் விரிவாக பார்க்கலாம். 1. ஒகேனக்கல் அருவி: இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. தர்மபுரி இருந்து 47 கி.மீ., ஓசூரில் இருந்து 88 கி.மீ., சேலத்தில் இருந்து 85 கி.மீ., பெங்களூரில் இருந்து 146 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ., மைசூரில் இருந்த…

  12. கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக காங்கிரஸ் அரசு? பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெத…

  13. ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்! ஐ.என்.எஸ் சென்னை ( INS Chennai) போர்க்கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தப் போர்க்கப்பல் 7500 டன் எடை மற்றும் 164 டன் நீளம் கொண்டது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் இது. கடலின் மேற்பரப்பு, கடலின் அடிப் பரப்பு, ஆகாயம் என மூன்று நிலைகளில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட இன்னும் பல பெருமைகளை அ.தி.மு.க-வின் மூலம் அடையப்போகிறது ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல். இந்தப் போர்க்கப்பலைப் பார்வையிடுவதற்காகத்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன…

  14. திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம் கோபாலகிருஷ்ண காந்திமுன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image caption1967 வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு நடந்த முதல் தேர்தலாக 1967ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்தது. மிக முக்கியமான ஒரு தேர்தலும்கூட. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. சுதந்திரா கட்சி, 8.7 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மொத்தமிருந்…

  15.  இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும் இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் ஜூலை மாதம், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவ…

  16. அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு! * * * * * மதிப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு நல்வணக்கம்! தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையில் பொதுமக்களான எங்கள் கருத்தையும் கேட்க முன்வந்தமைக்கு முதலில் என் இனிய நன்றி! நம் கல்விக் கொள்கையில் கட்டாயம் இடம்பெற்றாக வேண்டியதாக நான் கருதும் ஒன்றே ஒன்றை மட்டும் இக்கடிதத்தின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் தாய்மொழி வழிக் கல்வி! அறிஞர் பெருமக்களும் கல்வியியல் ஆய்வுகளும் …

  17. 05 JAN, 2025 | 03:53 PM இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்தியகுழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்க…

  18. சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்' (வீடியோ இணைப்பு) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், 'படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன' என அதிர வைக்கிறது 'பைபாஸ்' திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் …

  19. கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’! 22 Nov 2025, 2:00 AM கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர…

  20. 22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு…

  21. தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…

  22. எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க…

  23. நாளை முழு ஊரடங்கு: சிந்தாதிரிப்பேட்டை- காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் மீன் மார்க்கெட்டுகளில் திரள்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க சமூக இடைவெளி இல்லாமல் திரண்ட பொது மக்கள். சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகி…

  24. வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்... காட்டிக்கொடுத்தது அமைச்சரா? ‘‘அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி... ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப்புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார். ஒட்டுமொத்தமாக ஆர்.கே. நகர் தினகரன் வசம் வந்துவிட்டது. சி.ஆர்.சரஸ்வதி, தம்பிதுரை மீது தக்காளி வீசியவர்கள், தினகரன் போனபோது ஆரத்தி எடுத்த…

  25. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவனுக்கு, குற்றம் நடந்தபோது 17 வயது என்ற காரணத்தால், அவனுக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்துள்ளது போதுமானது அல்ல என்று அம்மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் சகோதரர், குற்றவாளி மீது நீதிமன்றம் மிகவும் கனிவாக நடந்துகொண்டுள்ளதாகவும், இந்த தண்டனை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார். "எனது சகோதரி இறந்ததை நான் பார்த்தேன். சிறுவன் என குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளிதான் எனது சகோதரியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டான். அவள் தினமும் ஆயிரம் முறை செத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.