தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10298 topics in this forum
-
கொரோனா வைரஸினால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு – ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8,002 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் 4,273 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 798 பேருக்கு…
-
- 1 reply
- 416 views
-
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கருணாநிதி கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தி கருணாநிதிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களது கனிவான வார்த்தைகளும், மனோபாவங்களும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு புதிய பொறுப்புணர்வுகளை அளித்துள்ளது. உங்களை போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையும், ஆலோசனைகளும் எனது புதிய பொறுப்புகளை நிறைவேற்ற துணையாக இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12371
-
- 1 reply
- 767 views
-
-
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது! தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்ற…
-
- 1 reply
- 902 views
-
-
தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா? ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், இதுவரை எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி வளர்ச்சி(?) பற்றி பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்ச…
-
- 1 reply
- 623 views
-
-
கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகம்: சில முக்கிய ஆலோசனைகள் ப.இளவழகன் கடந்த மே மாதம் 31ஆம் தேதி, தேசிய மனித உரிமை ஆணையம் பெருந்தொற்றுக் காலத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண, விடுவிக்க, மறுவாழ்வு மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களைச் செய்வதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 2020-ல், இதே போல் ஒரு விரிவான வழிகாட்டுதலை எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருந்தது. தற்போது இரண்டாவது அலையில் ஏற்பட்ட சவால்களையும், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. தடுப்பு (Prevention) ஊராட்சி…
-
- 1 reply
- 620 views
-
-
திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை' அகத்தியலிங்கம் சு.பொஎழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image captionசட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) "ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ? திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது . வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்தல் போன்றவற்றோடு 'காங்கிரஸ் எதிர்ப்பும்' அதன் உள்ளுறை . ஆர் எஸ் எஸ்சின் அரசியல் பிரிவான 'ஜனசங்கம்' /'பாரதிய…
-
- 1 reply
- 637 views
-
-
'சசிகலாவுக்கு எதிரான புகாரில் சமரசம் கிடையாது': டிஐஜி ரூபா உறுதி படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடிஐஜி ரூபா கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா மொட்கில் தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் இன்று டிஐஜி ரூபா கூறுகையில், "பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய…
-
- 1 reply
- 762 views
-
-
கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது? பட மூலாதாரம்,DIPR கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…
-
- 1 reply
- 1.5k views
- 2 followers
-
-
உணவு பாக்கெட்டுகளில் பங்கு கேட்டு அதிமுகவினர் அடாவடி: தீயாக பரவும் வீடியோ- இவர்களை என்ன செய்யலாம்? சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில் மக்களுக்கு அளிக்க தன்னார்வலர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களில் 2 ஆயிரம் பொட்டலங்களை கேட்டு அதிமுக கவுன்சிலரின் கணவர் செய்யும் அடாவடி காட்சி அடங்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் வீடி…
-
- 1 reply
- 744 views
-
-
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும…
-
- 1 reply
- 1k views
-
-
ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி? ரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன? உதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை …
-
- 1 reply
- 687 views
-
-
விருதுநகர்: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் கட்சிகளுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக ம.தி.மு.க. திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. விருதுநகர் மாநாடு மாநாட்டு பந்தலுக்கான பந்தக்கால் நடும்விழா இன்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. அப்போது, நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்பட தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விருதுநகரில் நடக்…
-
- 1 reply
- 438 views
-
-
பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்ச…
-
- 1 reply
- 461 views
-
-
பட மூலாதாரம்,SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது? போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்க…
-
- 1 reply
- 259 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலல…
-
- 1 reply
- 307 views
-
-
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அரசு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா செல்லும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்: '' * ரயில்களின் மூலம் இந்தியாவின் …
-
- 1 reply
- 337 views
-
-
பள்ளி சீருடையில் திருமணம் செய்த மாணவ, மாணவி மீது வழக்கு - வைரலாகும் காணொளி நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP பள்ளி சீருடையில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி மீது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்த மாணவன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். இன்று சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில், இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 401 views
-
-
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது. தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து. கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நடிகர் சேதுராமன் மரணம் - "நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36. இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
டி23 புலி வேட்டை: "காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?" - வலுக்கும் கேள்விகள் ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. `புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்புக்கும் காட்டையொட்டி வாழும் மக்களின் மனநிலைக்கும் இடையே ஏராளமான இடைவெளிகள் உள்ளன' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது…
-
- 1 reply
- 874 views
- 1 follower
-
-
அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு 17 ஆகஸ்ட் 2022, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில…
-
- 1 reply
- 595 views
- 1 follower
-
-
சென்னை, நடிகை குஷ்பு உத்திராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற கருத்தை வெளியிட்டு குஷ்பு முதன் முதலாக சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. அவர் மீது அழுகிய முட்டை, தக்காளிப் பழங்கள் வீசப்பட்டன. கோர்ட்டுகளிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒரு சினிமா படவிழாவில் அவர் பங்கேற்றபோது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன்பு செருப்பு அணிந்தபடி கால்மீது கால்போட்டு அமர்ந்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக கண்டன ஆர்ப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜூன் 2023, 10:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த வியாழனன்று உறுதி செய்துள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய அலுவலகத்தின் (NOAA) நிபுணர்களின் அறிக்கையின்படி , பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் இந்த கால…
-
- 1 reply
- 246 views
- 1 follower
-