தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
-
`அவர் அப்படித்தான்': ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்! ``காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் இருக்கிறார்" என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார். இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னைப் புறப்பட்டார். முன்னதாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "குரங்கணி மலை நிகழ்வை கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது. வரும் காலத்தில் வனத்துக்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நான் நேரில் சென்று அவர்களுக்கு இடையூ…
-
- 0 replies
- 559 views
-
-
மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். கருணாநிதி கூறும்போது, " ஸ்டாலின் - வைகோ சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.நானும் வைகோவும் பகைவர்கள் அல்ல நீண்ட கால நண்பர்கள். புதிய கூட்டணி உருவானல் திமுக பொதுக் குழு,செயற் குழு கூடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பா.ம.க. தலைவரின் முன்னிலையில…
-
- 13 replies
- 968 views
-
-
தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெ…
-
- 0 replies
- 514 views
-
-
கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன் கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினை…
-
- 0 replies
- 421 views
-
-
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது: திருநாவுக்கரசர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என, தமிழகத்திற்கான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும எண்ணம் உள்ளதாகவும், விரைவில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு பதில் கருத்து கூறிய திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்தார். கமல்ஹாசன் காங்கிரசுடன் இணைஙய விரும்புவதை தான் வரவேற்பதாகவும், ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என்றும் தெரிவித்தார். நடிகரும் மக்கள் நீதி ம…
-
- 0 replies
- 416 views
-
-
பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை! SelvamDec 24, 2023 11:51AM தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் என்பவர் ஓர் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் தத்துவம். பெரியாரை பார்க்காதவர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பேராயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்திலும் பெரியார் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் எனும் தத்துவம் சாதி பிணி நீக்கும் மருத்துவ…
-
- 1 reply
- 462 views
-
-
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள். ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு …
-
- 0 replies
- 1k views
-
-
லோக் ஆயுக்தாவை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன் அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியுள்ளனர்.அதனை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததாவது, “தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்துக் கொண்டுள்ளோம். மாற்றம் எம்மிடம் இருந்து தொடங்கி, நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ஒரு லட்ச ரூபாய் கடன் உள்ளது. இதை புரியாமல் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள். ஆட்சி பொறுப்பில் இருந்த கட்சிகள் திருடிய ப…
-
- 1 reply
- 857 views
-
-
தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்.! கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். புளித்துப்போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வத…
-
- 35 replies
- 5.5k views
- 2 followers
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன? மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெறுகிறது. ஒரு அணை இந்த அளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மட்டுமல்ல; இந்தியாவின…
-
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்! சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனியில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் உலகப் புகழ்பெற்றது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமங்கள்தான் பழனி பஞ்சாமிர்தம் உலகம் முழுக்க பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் இவர்கள் விபூதி, பிரசாதம் உள்ளிட்ட பூஜை சாமான்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் குழுமத்தில் கடந்த வாரம் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர். பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 3 replies
- 754 views
-
-
மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கும் வாய்ப்பு உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உலக பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடற்கரை கோவில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட…
-
- 6 replies
- 1.1k views
-
-
17 FEB, 2025 | 10:19 AM இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பலமுறை விளக்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
தி.மு.க. கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்குவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தி.மு.கவின் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிறிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொன் குமார் என்பவர் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு இடமும் என்.ஆர். தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தலைமையிலான சமூக சமத்துவப் படைக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சிக…
-
- 5 replies
- 810 views
-
-
அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவம…
-
- 0 replies
- 218 views
-
-
கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…
-
- 0 replies
- 459 views
-
-
இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது, வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். …
-
- 2 replies
- 703 views
-
-
மத்திய அரசிலிருந்து விலகும் கருணாநிதியின் நடவடிக்கையானது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போன்றது - ஜெயலலிதா அறிக்கை! [Tuesday, 2013-03-19 15:40:49] தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே,…
-
- 4 replies
- 539 views
-
-
மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம். செய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித…
-
- 0 replies
- 627 views
-
-
திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவீச்சு (படங்கள்) பிரிவு: தமிழ் நாடு திண்டுக்கல்லில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் பேரவை தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை பழி வாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் யூனியன் கரட்டழகன்பட்டி வார்டு கவுன்சிலர் முத்துப்பாண்டி. இவர் முன்பு பசுபதி பாண்டியனின் தேவேந்திர குல வேளாளர் பேரவையில் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பிறகு ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னணி மற்றும் சில தலித் அமைப்புகளில் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தனுஷ்கோடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் கச்சதீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 125 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. http://www.dailythanthi.com/node/270794
-
- 0 replies
- 365 views
-
-
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்ப…
-
- 1 reply
- 416 views
-