Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ”சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை Mani Singh SUpdated: Saturday, March 1, 2025, 19:36 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை நடிகை வாபஸ் பெற்றார். எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா…

      • Haha
    • 4 replies
    • 614 views
  2. 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன – அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ.சி.எம்.ஆரின் ஆணைப்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேபிட் பரிசோதனை கருவிகளை வாங்கியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உலகமே போட்டி போட்டு ரேபிட் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வாங்க முயற்சித்த நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. அந்த கருவிகளை எங்கு, யாரிடம் வாங்கலாம் என்பதை ஐ.ச…

    • 4 replies
    • 629 views
  3. சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் துரைராஜ் குணசேகரன்ராகேஷ் பெ சென்னையில் கனமழை ( ராகேஷ் பெ ) சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரி திறந்துவிடப்பட்டால், சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இன்றளவும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு அத்தகையது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் …

  4. 2008இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினர்: பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை 57 Views 2008இல் விடுதலைப் புலகளுக்கு ஆதரவாக பேசியதாக பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, ஈரோடு நீதிமன்றில் இன்று காலை இடம்பெற்றது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 டிசம்பர் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு. சீமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோ…

  5. தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் நீடித்துவரும் தீஸ்தா நதி நீர் பிரச்சனை தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால், மாநில முதலமைச்சரான மமதா ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட முடியாது. ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அண்டை நாடு தொடர்பாக பிரச்சனை இருக்கும்போது பயணம் மேற்கொண்டால், அந்தப் பணயம் பிரச்சனையை தெளிவாகப் புரிந்த…

  6. சென்னை கிழக்குகடற்கரை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த நாசரின் மகன் உள்ளிட்ட சிலர் பயணித்த கார் எதிரே வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பொலிஸார் கூறுகையில்: “விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 3 பேர் சம்பவ…

  7. சென்னை போலீஸ் ஸ்டேஷனில் ஈழத் தமிழர் அடித்து கொலை- நீதி விசாரணைக்கு உத்தரவிட வேல்முருகன் கோரிக்கை!! சென்னை: சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறே…

  8. ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் – ரஜினி இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன்போது இலங்கை மக்களை எவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றுவார்கள் எனக் கேள்வியெழுப்பிய ரஜினி, அவர்களுக்காக, தான் என்றும் குரல் கொடுப்பேன் என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஈழ-அகதிகளுக்கு-இரட்டை-கு/

  9. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 73 Views முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர். 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சி…

  10. பிரியாணிக்கடை ஊழியர்களிடம் பாக்ஸிங்... தி.மு.க. நிர்வாகி யுவராஜ் பின்னணி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடையில் ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க நிர்வாகி யுவராஜ் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிரியாணிக்கடையில், கடந்த 29-ம் தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்து ஊழியர்கள், மேலாளர், உரிமையாளர் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது, தாக்குதல் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடம் கொடுத்தனர். அந்த வீடியோ வெளியானதும், சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் ஆகியோ…

  11. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 12:07 PM ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த நிலையில் கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகம் வெளியானது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சேஷன் குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தில் இது குறித்து டி.என்.சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது ”1991-ம் ஆண்டு…

  12. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில், தினகரன் வெற்றி பெற வேண்டிய …

  13. தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!! சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள…

  14. சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம். இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அ…

  15. மஹிந்த ராஜபக்ச இன்று மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் சென்னை திருப்தி ஆலய அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைத…

  16. கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான இன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்…

  17. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…

  18. பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை! KalaiDec 24, 2022 11:27AM பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்…

  19.  பேரறிவாளன் மீது தாக்குதல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் காயமடைந்த அவர், காயமடைந்ததால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சிறையில் இருக்கின்ற, ஆயுள்தண்டனை கைதியான ராஜேஷ் என்பவர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/181749/ப-ரற-வ-ளன-ம-த-த-க-க-தல-#sthash.gZPu9yvQ.dpuf

  20. நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் சற்று நேரத்தில் விடுவிப்பு? சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டதாகவும், இது தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என…

  21. ‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார். …

  22. ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி எம்.பி.,யை, பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதால், காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு, தி.மு.க., அறிவித்த நிதியை அளிக்க முடியாமல் தவிக்கிறது.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, அனைத்துத் தரப்பி னரும் உதவ வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார். நேரில் வழங்க...:இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செப்., 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,க்கள், இத்தொகையை, பிரதமரிடம் நேரில் வழங்குவர்,'' என, கூறியிருந்தார்.இதற்கான காசோலையை, தி.மு.க., த…

  23. பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1 பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்... இவர்களுடன் இன்னொரு வி.ஐ.பி இருக்கிறார். அவர்தான், சந்திரகாந்த். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இவர்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் ராமலிங்கத்தின் மகன்தான் இந்த சந்திரகாந்த். பெருந்துறை சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் பெண் எடுத்தவகையில் ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென வருமானவரித் துறையினர் பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் ராமலிங்கத்தை மையமாக வைத்து ரெய்டு நடத்தினர். பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், 5.40 கோடி ரூபாய் புதிய …

  24. சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். டெல்லியில் 40வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்க…

  25. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் விழா தமிழீழம், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு உடைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க மட்டுமே அனுமதியளிக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.