தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்! கஜா புயலை விட கொடுமையான, கொடூரமான செயலைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள்... அந்த செய்திதான் இது!! கஜா... பட்டுக்கோட்டை பக்கமாக போகும்போது தந்துவிட்டுபோன அழிவு கொஞ்சம் நஞ்சமல்ல. நடுராத்திரி... அப்படி ஒரு பேய்க்காத்து.. ஊரே தூக்கிட்டு போற மாதிரி காற்று சுழட்டி அடித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. அணைக்காடு கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கிறாள் அந்த சிறுமி. திடீரென்று வயசுக்கு வந்துட்டாள். அதனால் வீட்டு பெரிசுகள் எல்லாம் சேர்ந்து தீட்டு என்று காரணம் சொல்லி, அந்த சிறுமியை தனியாக உட்கார வைத்து விட்டார்கள். உட்கார வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கி…
-
- 2 replies
- 929 views
-
-
ஒரு பஸ் டிரைவரின் தூக்கத்தின் விலை ரூ. 400 கோடி! கொல்கத்தா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது பஸ் மோதியதில் ரூ. 400 கோடி மதிப்புள்ள விமானம் சேதம் அடைந்தது. இன்று காலை 5.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை விமானத்தில் ஏற்றி இறக்க அழைத்து செல்லப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தை ஓட்டி வந்த, மொயின் அலி என்ற ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் அசாம் மாநிலம் சில்ச்சாருக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் இடதுபுற இறக்கை மீது மோதி விட்டதாக தெரிகிறது. இதில் விமானத்தின் என்ஜின் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மொயின் அலி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெர…
-
- 0 replies
- 928 views
-
-
சகாயம் IAS-ஐ வைத்து RSS போடும் பெரும் திட்டம்
-
- 0 replies
- 928 views
-
-
மிஸ்டர் கழுகு: கொள்ளைக் கூட்டணி... கொந்தளிக்கும் ஐ.ஜி! “புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார். “தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர், “18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிக்கக் கூடாது என்பதில்தான் தினகரன் தரப்பு குற…
-
- 0 replies
- 928 views
-
-
பட மூலாதாரம், BOOPATHY கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 30 ஜூன் 2025 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.] ''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!'' திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை. அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆத…
-
-
- 13 replies
- 928 views
- 1 follower
-
-
தலைமை ஏற்க வாருங்கள்..! சசிகலாவிடம் வலியுறுத்திய மூத்த நிர்வாகிகள் ''அதிமுக தலைமையை ஏற்க வாருங்கள்'' என்று அதிமுக மூத்த நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட…
-
- 9 replies
- 928 views
-
-
போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் சசிகலா?! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. கடந்த 5-ம் தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதி மற்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கட்சியை வழிநடத்தும் அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்பாரா திருப்பமாக கட்சியின் சீனியர் தலைவர்கள், சசிகலா பொது செயல…
-
- 1 reply
- 928 views
-
-
கடும் விலை வீழ்ச்சியால் வேதனை... தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. புரட்டாசியில், ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரை விற்பனையான நிலையில், அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இந்த மாத துவக்கத்தில் அதன் விலை மேலும் குறைந்து ஐந்து ரூபாய் வரை விற்பனையானது. இன்று கிலோ ஒரு ரூபாய் என்ற அளவில் குறைந்ததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுரி பாலக்கோட்டில் உள்ள தக்காளி சந்தை மிகவும் முக்கியமான சந்தை ஆகும். அப்பகுதியை சுற்றி உள்ள ஊர்களில் பயிரிடப்படும் தக்காளி பெரும்பாலும் இந்த சந்திக்குத் தான் விற்பனைக்கு வரும். விவசாயிகளிடம் இருந்து …
-
- 0 replies
- 926 views
-
-
ஸ்டெர்லைட் படுகொலைகள்: ஒரு புலி, ஹிட்லர் மற்றும் ராஜபக்ஷே ஆர். அபிலாஷ் தூத்துக்குடி படுகொலைகளின் அதிர்ச்சி விலகாத நிலையில் ஒரு நண்பரிடம் தொடர்ச்சியற்று பலவிசயங்களைப் பற்றி பேசி புலம்பியபடி இருந்தேன். நண்பர் என்னிடம் சட்டெனக் கேட்டார், “மெரினாவில்ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளின் போது போராளிகளை இந்த அதிமுக அரசு நடத்தியதற்கும்இதற்குமான தொடர்பை கவனித்தாயா?”. கவனித்தேன், நியூஸ் 18 டிவி விவாதத்தின் போது ஆரூர்ஷாநவாஸும் அதைக் குறிப்பிட்டார். நான் சொன்னேன், “இரண்டு சம்பவங்களிலும் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஒருவிதத்தில்வேதனையடைய செய்தது, இதை தவிர்த்திருக்கலாமே எனும் எண்ணம். அரசுக்கு இதனால் நேரடியாய் பயன்இல்லையே, இருந்தும் ஏன் செய்கிறது எனும் ஐய…
-
- 0 replies
- 926 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் நடிகர் விஜய் உள்பட தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேஆர் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110196/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 926 views
-
-
ராஜராஜ சோழனின் பிறந்தநாளை 1000 ஆண்டுகளாக தமிழ்நாடு கொண்டாடுவதன் பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க. பதவி, பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் வாழும் காலத்திலும் மறைந்த காலத்திலும் பிரம்மாண்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என்பது ஒரு சிலருக்கே அமைகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது மறைந்து ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் பிறந்த நாள் கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜ ராஜசோழனுக்கு மட்டுமே. அப்படி அவர் என்ன செய்தார்? எதற்காக இந்த ‘சதய விழா’ ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகின்றது? சாமானியர் முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் வரை அரசு விழாவாகவே அறிவித்து தொடர்ந்து கொண்டாடி …
-
- 2 replies
- 926 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: பச்சைக்கொடி... கறுப்புக்கொடி... பரபரக்கும் காவிரிக் கொடி! எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த கழுகார், அதைவிட வேகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையில் தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான நிலையில் உள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு உள்ளது. இந்தச் சூழலில், ‘சென்னை அருகே திருவிடந்தையில் மத்தியப் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் டிஃபென்ஸ் எக்ஸ்போவுக்கு வரும் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம்’ என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த அறிவிப்பு, தமிழகத்தின் இன்றைய இக்கட்டான சூழல்…
-
- 0 replies
- 925 views
-
-
சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்…
-
- 0 replies
- 925 views
-
-
மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்…
-
- 5 replies
- 925 views
-
-
மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்! மின்னம்பலம்2021-12-11 டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட யு ட்யூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழக பாட நூல் அறிவுரைக் குழு உறுப்பினரும், திராவிட தமிழர் பேரவை தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியன் இவ்விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) ஒரு விளக்கம் அளித்துள்ளார். “இந்திய முப்படைகளின் தளபத…
-
- 13 replies
- 925 views
- 1 follower
-
-
மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈட…
-
-
- 8 replies
- 925 views
-
-
‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார். …
-
- 4 replies
- 924 views
-
-
இதுவும்தாண்டா போலீஸ்! #கர்நாடக காருக்கு பல மைல் பாதுகாப்பு! கேரளாவைச் சேர்ந்த ஜோயல் பிந்து என்பவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஓணம் விடுமுறை கழிந்து, நேற்று மதுரை வழியாக பெங்களூர் செல்ல பயணித்துக் கொண்டிருந்தவர் மதுரை பைபாஸில் போலீஸால் நிறுத்தப்படுகிறார். அதன்பின் நடந்தவை அவரது மொழியிலேயே: ”இன்று நடந்ததை நான் என்றும் எப்போதும் மறக்க முடியாது. தமிழக காவல்துறை செய்த ஒரு செயல் அந்த அளவுக்கு என்னையும் என் குடும்பத்தாரையும் மனதைத் தொட்ட நிகழ்வாக அமைந்துவிட்டது. பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதில் தமிழக காவல்துறையின் தீரமும், அர்ப்பணிப்பும், நேர்மையும் எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஓணம் …
-
- 4 replies
- 924 views
-
-
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விழுப்புரம் அருகே இரண்டாண்டுகள் முன்பு ஒரு கும்பலால் தாக்கி கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சக்திவேல். புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக கடந்த சில மாதங்களில் நடந்த வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் சாதி ரீதியான வன்கொடுமைகள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சி…
-
- 0 replies
- 924 views
- 1 follower
-
-
தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கு…
-
- 5 replies
- 923 views
- 1 follower
-
-
மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா தன்னுடைய ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் படித்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1080 மதிப்பெண்கள் எடுத்தார். மிகவும் ஏழ்மையான சூழலில் தான் பொறியியல் கல்லூரில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட செல்வி தினுசியவிற்கு தமிழ் உணர்வாளர்கள் உதவி செய்ய முன்வந்தனர் . இரு வாரங்களுக்கு முன் அகரம் அறக்கட்டளையில் மேல் படிப்பிற்காக முறையிட சென்னை வந்த போது நாமும் நம் நண்பர்களும் இவரையும் இன்னும் பிற முகாம் மாணவர்களையும் அகரம் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று வந்தோம் . அகரம் நிறுவனமும் அடுத்த ஒரு வாரத்தில் அகதிகள் முகாமை சென்று பார்வையிட்டு அவர்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள் . இந்நி…
-
- 11 replies
- 923 views
-
-
தெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்ல.. வெறுப்பை கக்கும் ராதாரவி!! தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும்பங்கு வகிப்பது தெலுங்கு இனம் தான். தேனி, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் தான் போட்டி போடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் வென்றிருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை வளர்ந்திருக்காது. நாங்கள் திராவிடம் என்கிறோம். நீங்கள் எங்களை வேறு இனம் என்று கூறுகிறீர்கள். நான் …
-
- 0 replies
- 923 views
-
-
பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாரதியார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன். பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூல…
-
- 8 replies
- 923 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... "மீத்தேன் வாயு" எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில…
-
- 0 replies
- 923 views
-
-