தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தற்போது காணலாம்.... சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி.பி. ரோடு (CB road) பகுதியில் உள்ள “ஓஸ்வால் கார்டன்” (oswal garden) அடுக்குமாடி குடியிருப்பில் அனிதா சுரானா என்பவரும் அவரது மருமகள் பிரீத்தியும் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவு தட்டப்படவே,பிரீத்தி சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நெட்டித் தள்ளிவிட்டு 2…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. பதிவு: ஏப்ரல் 03, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75…
-
- 2 replies
- 598 views
-
-
திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…
-
- 2 replies
- 472 views
-
-
தேமுதிக பொதுக்குழுவில் பார்த்தசாரதி: விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசத்தால் பரபரப்பு! பெரம்பலூரில் நடந்து வரும் தேமுதிக பொதுக்குழுவில், கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசமாக பேசி வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது. தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 26 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகள், செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. காலை 10.45 மணிக்கு மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்…
-
- 2 replies
- 659 views
-
-
“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு! தலைவர்களே இல்லாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி …
-
- 2 replies
- 569 views
-
-
சென்னை ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி! சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்கு பெரும் பங்காற்றுவது ஆட்டோக்கள்(Auto s) என்றால் அது மிகையாகாது. தமிழகம் முழுவதும் ஓடும் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்களில், சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வந்தனர். இக்கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதிக…
-
- 2 replies
- 1.3k views
-
-
தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்: ட்விட்டரில் விஜயகாந்த் தில்! சென்னை:'தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று ட்விட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜயகாந்த் தனது ஃபாலோயர்ஸூடன் உரையாடினார்.தமிழகம் முழுக்க தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல கட்டமாக வாக்குச் சேகரித்து வரும் விஜயகாந்த், முதல்முறையாக ட்விட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களில் விஜயகாந்த் மட்டுமே ட்விட்டர் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதற்கெ…
-
- 2 replies
- 637 views
-
-
கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர் சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடு…
-
- 2 replies
- 963 views
-
-
பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை. இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது. தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது. ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்…
-
- 2 replies
- 526 views
-
-
"எங்களை தனிமைப்படுத்த சதி நடக்கிறது" ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இந்திய அரசு பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இவர்கள் சம உரிமை பெற இந்தியா முழு முயற்சி எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்து போக செய்து விட்டது என்பது தவறானது. இது உண்மையல்ல. இந்தியா முழு முயற்சி எடுத்து தீர்மானத்தை நிறைவேற்ற உதவி செய்தது. மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். இந்த உணர்வுகளை பிரதமரிடம் அழுத்தமாக தெரிவிப்போ…
-
- 2 replies
- 645 views
-
-
சிவபெருமான் போலீஸை அனுப்பினார், பொறுக்கிகள் அலறி ஓடிவிட்டனர்: மீண்டும் சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி சிவபெருமான் போலீஸை அனுப்பினார், பொறுக்கிகளை அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராடி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம…
-
- 2 replies
- 514 views
-
-
பட மூலாதாரம்,THALAPATHY VIJAY MAKKAL IYAKKHAM கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளது, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12…
-
- 2 replies
- 795 views
- 1 follower
-
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபடப்போவதாக பிரபல கராத்தே வீரர் ஹூசைனி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் வேன்டுதலை தொடங்கினார். இதற்காக எட்டு அடி உயரம், ஆறு…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேய்பிறை செவ்வாய்கிழமையில் கடலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சீமான். சென்னை: சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மே 16ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை 22ம் தேதி தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் முகூர்த்த தினமான நேற்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமகவின் அன்புமணி ஆகிய மூன்று முதல்வர் வேட்பாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சட்டசபைத் தேர்தலில் நாம் த…
-
- 2 replies
- 807 views
-
-
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!-சீமான் சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என்று அவர் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் சாரம்சம்: ‘உலக வரலாறு என்பதே சில தனி மனிதர்களின் வரலாறுதான்’ என்கிறார் இரசியப்புரட்சியாளர் லெனின். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழர் என்கிற தேசிய இனத்தின் வரலாறு என்பது ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மறத்தின்வழி நின்ற…
-
- 2 replies
- 744 views
-
-
`சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன்!' - 12 மணியைக் கடந்த உடன் வாழ்த்து சொன்ன கமல்! தனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விஸ்வரூபம் 2 வேலையாக அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணி நேரத்துக்கு முன் பிறந்தது 12-ம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். கமல், ரஜினிக்கு ஆங்கிலத்திலும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 982 views
-
-
சென்னை விமான நிலையம்:' 54 ' நாட்அவுட்! சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது. தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும் இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால் கண்ணா…
-
- 2 replies
- 661 views
-
-
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது. #Carrom #CarromWorldCup Producer: ShanmughaPriya Shoot & Edit: Ranjith இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
ராகுல் ஏன் வந்தார்? ஜெயலலிதா-அப்போலோ-அரசியல்! ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை... எத்தனை... திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்... ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம். மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா? டெல்லியில் இருந்து, தனி விமானத்…
-
- 2 replies
- 750 views
-
-
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்…
-
-
- 2 replies
- 286 views
- 1 follower
-
-
போகாத கூட்டணி இல்லை... மதிமுக அங்கம் வகித்த கூட்டணிகள் – அன்று முதல் இன்று வரை! சென்னை: மதிமுக கட்சியானது தான் அங்கம் வகித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று விலகியுள்ள நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவால் துவங்கப்பட்டது முதல் இன்றுவரை பல்வேறு கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகிய வைகோ 1994 ஆம் ஆண்டில், மதிமுகவை ஆரம்பித்தார். போகாத கூட்டணி இல்லை... மதிமுக அங்கம் வகித்த கூட்டணிகள் – அன்று முதல் இன்று வரை! அந்தச் சூட்டோடு சூடாக, 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற 11ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டது. ஆனால், கிட்டதட்ட…
-
- 2 replies
- 698 views
-
-
ராம மோகன ராவின் ராஜ்யங்கள்! ஆளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர் ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வரையில் துரத்தியது. அதன் கிளைமாக்ஸ்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனை. ‘தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை இது’ என்ற ரிக்கார்டை மட்டும் பதிக்கவில்லை. ஆளும் கட்சியின் காக்கிகளைக்கூட நம்பாமல் துணை ராணுவத்தைக் கொண்டு நடத்தப்பட்டது என்கிற சாதனையும் படைத்தது. அதுமட்டுமா? தலைமைச் செயலக…
-
- 2 replies
- 835 views
-
-
ஆந்திரமும் தெலுங்கானமும் இணைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவை மீண்டும் ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் நல்கியுள்ளது. இந்தியா 125 கோடி மக்கள் வாழும் மிகப் பெரியதொரு தேசமாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சக்தியாக உருமாறி இருக்கின்றது. ஆன போதும் இந்தியா இன்னமும் கல்வி, உள்கட்டுமானம், சுகாதாரம், மருத்துவம், சுற்றுச்சூழல் போன்ற விடயங்களில் பாரிய முன்னேற்றத்தை எட்ட வேண்டியும் இருக்கின்றது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையே அதன் அதீத மக்கள் தொகைப் பெருக்கம் தான். இவ்வாறான அதிகளவு மக்கள் தொகையை கொண்ட ஒரு தேசத்தில், சாமன்ய இந்திய குடிமகனுக்கும், அரசு…
-
- 2 replies
- 1.6k views
-
-
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து! கஜா புயலினால் பேரழிவை எதிர்நோக்கியிருந்த தமிழகம் தொடர்ந்தும் கடும் காற்று மற்றும் மழையினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததுடன், இந்த நிலை மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையும் அதிகபட்சமாக 60 கிலோமீற்றர் வரையும் காற்று வீசக்கூடும் என்பதால்…
-
- 2 replies
- 957 views
-
-
உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த சிறுமி! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலின் இவர் 11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர். அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Ba…
-
- 2 replies
- 981 views
-