யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
41 topics in this forum
-
முள்ளி வலி முள்ளி வாய்க்கால் - இனவாதம் ஆடிய வெறியாட்டம் மனிதம் மடிந்துபோனது. சிறிய வாய்க்கால் செந்நிறமானது முன்தோன்றிய மூத்த குடி -பெயரளவில்மட்டுமே. இலங்கையின் வடதிசையும் பாரதத்தின் தென்திசையும் கலங்கி நின்றது, அடிவருடிகளைத்தவிர. வலி தமிழனுக்கு மட்டுமே தரணிக்கு இல்லை. பல பத்தாண்டுகள் அழுது கிடந்தோம் முள்ளி வாய்க்கால் நாம் கடைசியாய் அழுதது அழுவதுக்கு எம்மிடம் கண்ணீரும் இல்லை வலி மட்டும் நெஞ்சில் உயிருள்ளவரையில் பிஞ்சுக்குழந்தைக்கும் நெஞ்சினில் குண்டு கூடி இருந்தவரே குழி பறித்தனர்- கொலைக்கும்பலுக்கு ஆணை கொடுத்தனர். மீண்டும் ஒரு உணர்வு உருவாக்கா வண்ணம் தாயக கவிஞனையும் காணாமல் செய்தனர் ஆடு நனைந…
-
-
- 7 replies
- 1.6k views
-
-
1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிகலா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்…
-
-
- 7 replies
- 1.5k views
-
-
புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்…
-
-
- 6 replies
- 1.4k views
-
-
உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதி…
-
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்த…
-
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் …
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
இயற்கையுணவே! எமக்கு வலிமை! ************************ கோர்லிக்ஸ்,வீவா, நெஸ்ரோமோல்ட் மைலோ.. இனும் பல.. இத்தியாதி,இத்தியாதி ஆரோக்கிய வாழ்வுக்கு அனைத்துச் சத்தும் நிறைந்ததென்று விளம்பரங்கள் செய்து விற்று பணமள்ளும் வெளிநாட்டு கம்பனிகளே! இதுகளை.. வந்தகொரோனாவுக்கு வாங்கிக்குடியென்று எந்த (சுகாதார) அமைப்பும் இதுவரையும் சொன்னதுண்டா! இஞ்சி,மஞ்சல் மிளகு,சீரகம் உள்ளி,கராம்பென்று இயற்கை உணவுகளே-எம் உடலைக்காக்குமென.. சித்தர்கள் சொன்னதுதான் இன்றும் சிறப்பென்று அறிந்தபின்னும். இதுபோன்ற.. போலிகளை புறம் தள்ளி …
-
-
- 6 replies
- 1.3k views
-
-
டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வ…
-
-
- 4 replies
- 1.2k views
-
-
பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்க…
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்…
-
-
- 12 replies
- 1.2k views
-
-
பேரினவாதத்தின் பிரலாபம் சித்தி கருணானந்தராஜா உலகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில் பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய் நக்குவாரப் பெயர்பெற்று நாடெல்லாம் அலைகின்றோம் சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்? பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம் கரியை வழித்துக் கையில் தருவது போல் ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல…
-
- 4 replies
- 1.2k views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! *********************************** ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம் அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம் மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம். சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும் சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும் எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல் தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும். வேலைக்கு மட்டும் படிக்கின்ற ப…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??! இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்.. இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும். நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள். பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து.. பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்…
-
-
- 6 replies
- 912 views
-
-
கொழும்பிம் புறநகர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் ச…
-
-
- 2 replies
- 768 views
-