நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. …
-
- 10 replies
- 2.7k views
-
-
இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை மாறி புதுமை அந்த இடத்தை பிடித்துவிட்டது கூடவே நோயும். பழமை நமது உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல் நோக்கில் இருந்தன அதை நாம் மறந்து விட்டோம் அதனால் நோய்கள் நம்மை பின்தொடர விட்டுவிட்டோம் . முன்பு குளிக்கும் முறைகூட அறிவியல் அடிப்படையில் இருந்து நோயில் இருந்து காத்தத்து இன்று குளியலே நோயை உண்டாக்குவதாக இருக்கிறது . இன்றைய வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா போட்டு குளிப்பதால் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணத் தன்மை முழுவதும் நீங்கி எலும்புகள் கலகலத்து போய் நோயில் மரித்து போகிறனர் . இந்நிலை கூடாதென என எண்ணிய நமது பழம் பெரும் சித்த மருத்துவ அறிவர்…
-
- 1 reply
- 12.2k views
-
-
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்து விட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக…
-
- 0 replies
- 668 views
-
-
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அ…
-
- 8 replies
- 2.7k views
-
-
மாரடைப்புக்கு புது காரணம் கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர். மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம். ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி வ…
-
- 9 replies
- 3k views
-
-
சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும் போது சாதாரணமாக கர்ப்பம் பாதிக்கப்படுவதில்லை. கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதியின் போது சர்க்கரைக்காக கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலே கருச்சிதைவுகள் அதிகரிக்கின்றன. சர்க்கரை வியாதியால் கண் பார்வை மங்குதல், சிறுநீரக கோளாறு முதலியன ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்யத் தேவையில்லை. சர்க்கரையால் கர்ப்பச் சன்னியின் முன் நச்சு மூன்று மடங்கிற்கும் மேலாகக் காணப்படுகிறது. அவற்றை உரிய காலத்தில் பக்குவமாக கவனிக்கத் தவறிவிட்டால் இளஞ்சிசு மரண விகிதம் கூடிவிடலாம். சர்க்கரை வியாதியினர் 20 முதல் 30 விழுக்காடு பேருக்கு பனிநீர்ப் பெருக்கம் எற்படுகிறது. இவர்களுக்கு பிள்ளைப் பேறு கடினமாகலாம். அறுவைகள்…
-
- 0 replies
- 552 views
-
-
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம். கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம். கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும். காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மர…
-
- 21 replies
- 3.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் யார்க்ஷையர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சியாரன் -ஜெனிபர் ஹானிங்டன். இவர்கள் குழந்தை பேறுக்காக இரண்டு ஆன்டுகளாக முயற்சித்து வந்தனர். இருவரில் ஜெனிபருக்கு ஹார்மோன் கோளாறு தொடர்பான கர்ப்பப்பை பிரச்னை இருந்தது ( polycystic ovarian syndrome) பரிசோதனையில் தெரிய வந்தது. அவர் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு இதுயொரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர். இருப்பினும் இந்த பிரச்னைக்கு உரிய சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம் என்று ஜெனிஃபருக்கு மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தனர். ஆனால், ஜெனிபரின் கணவர் சியாரனுக்கு இருந்த பிரச்னைக்கு மருத்துவ ரீதியாக பெரிய அளவ…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஃபிலிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க்ருபா பதியால் பதவி, பிபிசி நியூஸ் 28 ஜூலை 2023 சிஃபிலிஸ்(syphilis) என்பது மிகவும் பழமையான, பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட அது, இப்போது அபாயகரமான விகிதத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 1490 களில் சிஃபிலிஸ் அதன் முதல் பதிவிலிருந்து பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றில் "பிரெஞ்சு நோய், நியோபோலிடன் நோய், போலந்து நோய்" என்ற பெயர்களும் அடக்கம். …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
சிக்கன், மட்டனை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், தசைகள் வலுவடையும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதா…
-
- 11 replies
- 3.9k views
-
-
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. தோற்றம் : அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும். அடங்கியுள்ள பொருட்கள் : ஈரப்பதம் _ 73 ச…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆறுமணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்..! வேலைமேல் கவனம் குவிந்து போய் இருக்கும் நேரத்தில் வேறெதுவும் நம் நினைவுக்கு வராது. கண்கள் கணினி திரையின்மீது பதிந்திருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். இமைக்காமல் உற்றுப் பார்த்து, சாப்பாட்டைக்கூட மறந்து, இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் போராடி கொண்டிருப்போம். வேலை முடியட்டும்; மேலாளர் பாராட்டட்டும்; சம்பள உயர்வு கிடைக்கட்டும். ஆனால், உடல்நலம்? நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 22 முதல் 40 வயது வரையிலான அவர்…
-
- 0 replies
- 577 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக…
-
- 0 replies
- 629 views
- 1 follower
-
-
''கிரேக்கத்துல ''கடவுளின் பானம்''னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!''. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். * இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம். * ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும். * திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது! * ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸ’ல் 80 சதவிகிதம் தண்ரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இரு…
-
- 1 reply
- 1.7k views
-
-
புகை பிடித்தலிலிருந்து விடுபட:- For 3months supply in canadian doller $329.00(not accurate ) மூன்று மாதகாலம்.இந்தமருந்துகளை உட்கொண்டு புகைப்பிடிக்க வேண்டும். மூன்று நாட்களின் பின் அரைவாசிக்கு மேல் புகைக்க விருப்பமில்லாது இருக்கும். ஒரு கிழமையின் பின் கொஞ்சம் பொறுத்து பிடிக்கலாம் போலவிருக்கும்.இப்படியே ஒருமாதத்தில் வேறு யாரும் புகைப்பிடிக்கும்போது அந்த மணத்தில் வெறுப்பு வரும்.அப்படியே உங்கள் மணத்திலும் வெறுப்புத்தான்.ஆனாலும் வைத்தியர் கூறியபடி மருந்துகளை பாவித்துமுடிக்க வேண்டும்.அப்போதுதான் நாம் முழுமையாக விடுபடமுடியும்.கனடாவின் பல மாகாண சுகாதார அமைச்சுக்கள் இந்த மருந்தின் பணத்தை அவர்களே செலுத்த முன்வந்திருக்கிறார்கள்.இந்த மருந்தை தடைசெய்ய ப…
-
- 1 reply
- 640 views
-
-
இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். [size=4] [/size] [size=4]உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ…
-
- 0 replies
- 665 views
-
-
மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லா…
-
- 0 replies
- 353 views
-
-
மன அழுத்தம்(stress) :நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன.இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை.கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும்.பாதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும்.அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும்.அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது.இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்க…
-
- 1 reply
- 397 views
-
-
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக ப…
-
- 21 replies
- 10.5k views
-
-
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்ஸில்வர் என்றழைக்கப்படும் உலோகப் பாத்திரங்கள் இந்தியச் சமையலறைகளில் இன்று பெருமளவு இடம் பிடித்திருக்கின்றன. முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்தவை செப்பு, பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள். இவற்றில் பழைய சம்பிரதாயங்களை விடாமல் கைப்பிடிக்கும் குடும்பங்களில் குடிநீரை செப்புப் பாத்திரங்களில் (குடங்கள்) வைத்திருப்பார்கள். அவை சுத்தம் செய்யச் சிறிது உழைப்பு தேவைப்படுபவை. ஆற்றுப் படுகையில் நீர் சேந்தி வர வேண்டிய வேலையைச் சிறுமிகளும், சிறுவர்களும் மேற்கொள்ளுவர். ஆனால் கூட வரும் அம்மாக்களும், அத்தைமாரும், புளியைப் போட்டு அந்தக் குடங்களைத் தேய்த்துக் கழுவிப் பொன் போல மின்ன வைத்த பின்னரே அவற்றில் நீர் சேந்தப்படும். அவை ஏன் செப்புப் பாத்திரங்…
-
- 0 replies
- 2k views
-
-
மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...... ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக…
-
- 13 replies
- 10.9k views
-
-
-
அதிக நேரம் ஆசனத்தில் அமர்ந்திருந்து தொழில்புரிவதானது எமது ஆயுள் குறைவடைவதற்கு காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வளர்ந்தவர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 3 மணித்தியாலங்கள் மாத்திரம் அமர்ந்திருந்தால் அவர்கள் மேலதிகமாக இரண்டு வருடங்கள் வாழ முடியும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி பார்ப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்ப்பதை தினமும் இரண்டு மணித்தியாலங்களாக மாத்திரம் மட்டுப்படுத்துபவர்கள் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் மேலதிகமாக வாழமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையானது அதிக உடற் பருமன், உடற்திடமின்மை ஆகியவற்…
-
- 2 replies
- 453 views
-
-
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0 - 52 இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர். குவாட…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
சுஷீலா சிங் பிபிசி செய்தியாளார் அனில் (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 11-12 வயதாக இருக்கும்போது மிகவும் கோபம் வந்தபோது தனது தாயை அடித்துவிட்டார். அனிலின் இந்த நடத்தையை அவரது தாய் பார்ப்பது இது முதல் முறையல்ல. முன்பும் அவர் கோபத்தில் பொருட்களை எடுத்து வீசுவார், மேலும் தம்பியை தள்ளவோ அல்லது அறையவோ செய்வார். சில நேரங்களில் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் அளவுக்கு அவரது நடத்தை கட்டுமீறியதாக மாறியது. நண்பர்களுடன் சண்டை மற்றும் அடிதடிகள் பற்றிய புகார் பள்ளிக்கூடத்திலிருந்தும் வந்து கொண்டேயிருந்தது. அதே நேரத்தில், அவரது மனநிலையின் மற்றொரு தோற்றமும் காணப்பட்டது. அவர் முழுமையாக …
-
- 0 replies
- 460 views
-