நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். Posted by: on Sep 5, 2011 ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத…
-
- 24 replies
- 2.7k views
-
-
பல மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும் காளான் மிகுந்த வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE) உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையில் நிலை பெற்ற பிறகு இவை மறந்து போனாலும் தனது அழகின் தரம் பற்றியும் தனக்கு, கிடைக்காத வாழ்க்கைத் துணையின் அழகு பற்றியும் எல்லோருக்கும் ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கும். எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன. இள வயதில் …
-
- 1 reply
- 2.7k views
-
-
ICU - intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விசேடித்த பாதுகாப்புக்கள் கொண்ட மற்றும் உயிர் பிடிப்பு மற்றும் உடல் கண்காணிப்பு சாதனங்கள் கொண்ட அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம். உண்மையில் அது அவசியம் தானா..??! அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று. நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம். குறிப்பாக.. தீவிர விபத்தால் இரத்த இழப்பு.. சத்திரசிகிச்சை.. இதயப் பாதிப்பு.. மூளை செயலிழத்தல்.…
-
- 11 replies
- 2.7k views
-
-
இவற்றைத்தானே உட்கொள்கிறீர்கள்...? திடீர் பரிசோதனையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்! வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இட…
-
- 17 replies
- 2.7k views
-
-
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தா…
-
- 1 reply
- 2.6k views
-
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.6k views
-
-
மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகங்கள் ஆகும். உலக சிறுநீரக தினமான இன்று அதனை பாதுகாப்பது எப்படி, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் தொடங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரும். சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மா…
-
- 0 replies
- 2.6k views
-
-
அதலை என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இது தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதலைச்செடிகள் பொதுவாக இயல்பில் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயற்காடுகளில் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்து விழுந்த…
-
- 1 reply
- 2.6k views
-
-
வணக்கம், கடந்த சில நாட்களாக மனதுக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. Barbeque செய்வதால் இறைச்சி போன்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பு சூட்டில் உருகிக் குறைந்து விடுமா? அண்மையில் Scarborough வில் உள்ள என்னுடைய நணபர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தாங்கள் Barbeque போடுவதால் என்னையும் விருந்துக்கு அழைத்து இருந்தனர். சரி, நான் தான் இலவசமாக Pynol கிடைத்தாலே அருந்தும் ஜென்மம் என்பதால் சந்தோசமாக போனேன். அங்கு அவர்கள் நிறைய Pork chops உம் Lamb chops உம் வைத்து இருந்தனர். இவை இரண்டும் அதிக கொழுப்புள்ள மோசனாம இறைச்சிகள். என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் உடலில் cholesterol அளவு அதிகம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்து இருந்தமை எனக்குத் தெரியும் என்பதால் "என்னடா உங்கள் இருவ…
-
- 22 replies
- 2.6k views
-
-
கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு. நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்ப…
-
- 3 replies
- 2.6k views
-
-
வாழையின் மகத்துவம்! இந்திய தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான். வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழக்காலத்தில் போற்றி வந்துள்ளனர். மங்கள நிகழ்ச்சியென்றால் வாழைக்குத்தான் அதிக பங்கு.வாழையின் அனைத்து பாகங்களுமே மனித ஆரோக்கியத்தை முன்னிருத்தியிருக்கின்றன. இடி தாங்கியாகவும் வாழையே விளங்குகிறது. வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன…
-
- 0 replies
- 2.6k views
-
-
பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொ…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
ஆண்களின் விந்தணுக்கள் குறைவது நீடித்தால் மனித இனமே அழிந்து போகும்: புதிய ஆய்வு தகவல் படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆய்வுகளின் முடிவுகளுக்கு பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடையும் ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும், மனித இனப்பெருக்கம் (மனிதர்களில் இனப்பெருக்க செயல்முறை) குறித்த இந்த அறி…
-
- 3 replies
- 2.6k views
-
-
அன்புக்கும் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் எமது நிலாமதியக்காவுக்கு சிறு சத்திரசிகிச்சை. அவர் நலமடைய பிரார்த்திப்போம் உறவுகளே..... நிலாமதிப்பாட்டி நலமாகி நீடூழி வாழ எனது குடும்பம் சார்பில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவரை வேண்டுகின்றேன்...
-
- 45 replies
- 2.6k views
-
-
நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி! தினமும் காலையில் ஈரமான புல்வெளியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் நாம் நடப்பது என்பது எல்லோர் வாழ்விலும் ஏற்படும் ஒரு அனுபவமாகும். இந்த `நடக்கும்' தியானத்தை நாம் தினமும் செய்து வந்தாலே போதும். நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம். நடப்பது என்ற செயல் ஒரு உடற்பயிற்சி தொடர்புடைய செயல் ஆதலால் நம்முடைய தினசரி பழக்கங்களுடன் இதையும் நாம் சுலபமாக நுழைத்து விடமுடியும். தினமும் சில மைல்கள் நடக்க வேண்டுமா? கீழ்வரும் ஒரு 10 வழிகளை கடைபிடியுங்கள் : முதலில் அனுமதி பெறுங்கள் : நீங்கள் இதுவரை உடற்பயிற்சியோ அல்லது நடப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்யாதவராகவோ இருந்தால், …
-
- 1 reply
- 2.6k views
-
-
அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது. வாழைக்காய் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும். மாங்காய் மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும். மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும். பாகற்காய் பாக…
-
- 0 replies
- 2.6k views
-
-
கையிலேயே இருக்கு மருந்து! - ஆர்.கே.தெரசா 1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும். 2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம். 3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும். 4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும். 5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியு…
-
- 11 replies
- 2.6k views
-
-
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பத்மாசனம்: பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்…
-
- 0 replies
- 2.6k views
-
-
இதை நீங்க வாசிக்கும் நேரம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஒரு மனிதர் இறுதி மூச்சை இறுக்கிப் பிடித்து வைக்க முடியாமல் இறந்துகொண்டு இருக்கலாம்.... என்று தொடக்கி எழுதத் தான் வேண்டி இருக்கிறது, கண்ணுக்கு தெரியாத மிக மிக புத்திசாலியான, எந்த எதிர்ப்பு வக்சினும் ,அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகளுக்கும் சொல்வழி கேட்காத இபோலா வைரஸ், ஆரம்ப சுகாதார வசதிகளுக்கு அல்லாடும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒவ்வொரு நாளும் பல உயிர்களைக் கொல்லும் இந்த வைரஸ் ஒரு உலகளாவிய ஆபத்து ,எப்படியோ அது இன்னும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டாததால் அதன் நேரடி பாதிப்பு எங்களுக்கு விளங்கவில்லை. எப்போதும் போலவே இபோலா வைரஸ் பற்றி அதிகம் வெளியே தெரியாத கொஞ்சம் குழப்பமான விசயங்களைச் சொல்லுறேன்.. இபோலா …
-
- 0 replies
- 2.6k views
-
-
காலை கவனிப்பதுண்டா? காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே: உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை. *** புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்…
-
- 4 replies
- 2.6k views
-
-
தண்ணீரின் அவசியம் மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம். உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திச…
-
- 5 replies
- 2.6k views
-
-
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும்..* -------------------------------------------------------------------------------- பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது. அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு. குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான ப…
-
- 10 replies
- 2.6k views
-
-
காதுகளை நாமாக சுத்தம் செய்யக் கூடாது! காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார். நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய முடியுமா? பதில்: மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம். எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்படவேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும். காது கேளாமை என்பது …
-
- 3 replies
- 2.6k views
-