நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது. என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த…
-
- 27 replies
- 18.6k views
-
-
உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன். முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பத…
-
- 128 replies
- 12.9k views
-
-
எனது நெருங்கிய நண்பனுக்கு கொரோனா , அவனிடம் நான் கேட்டதை அவன் சொன்னதை இதில் எழுதுகிறேன் உறவுகளே தனக்காம் எப்பவும் இல்லாத அளவுக்கு தலை இடியாம் மற்றும் உடம்புகள் எல்லா இடங்களிலும் அதிக வலியாம் , பாவிக்கிற கைபேசி போன் கூட தன்னால் தூக்க முடிய வில்லையாம் , மூச்சு இழுத்து விட கஸ்ரமாக இருந்ததாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவனால் தாங்கி கொள்ளும் சக்தி இருந்த படியால் கொரோனாவில் இருந்து கொஞ்சம் தப்பி விட்டான் , மருத்துவர்களின் ஆலோசனை படி நண்பன் வீட்டை விட்டு வெளியில் போக கூடாதாம் , மருத்துவர்கள் இரண்டு நாளுக்கு ஒருக்கா வந்து பார்த்து உடம்புக்கு ஏதோ தண்ணீர் மாதிரி மருந்தை தடவி போட்டு போகினமாம்…
-
- 49 replies
- 4.8k views
- 1 follower
-
-
ஒரு 2 வருடங்களுக்கு முன்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யும் போது என் உடம்பில் கொழுப்பு கூடியுள்ளதாக மருத்துவர் சொல்லியிருந்தார் ("உங்களுக்கு கொழுப்பு கூட இல்லாட்டித்தான் அதிசயம்" என்று என் மனைவி சொல்லியிருந்தார். அதுவும் *** இல் கொழுப்பு கூட என்று). Cholesterol இல் இருக்கும் triglycerides அதிகரித்துள்ளதாகவும், அது கூடாது என்றும் மருத்துவர் சொல்லியிருந்தார். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் (high blood pressure: BP) இருப்பதால் கொலஸ்ரோல் அதிகரிப்பு என்பது சாவை வெத்தலை பாக்கு சுண்ணாம்பு தடவி புகையிலையும் போட்டு வரவேற்பது மாதிரியான விடயம். கொழுப்பு குறைய மருந்து எழுதித் தருவதாக மருத்துவர் சொன்னபோது வேண்டாம் மருந்து இல்லாமல் குறைக்க முயல்கின்றேன் என்று கூறியிருந்தேன். …
-
- 35 replies
- 3.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லாரா லீவிங்டன் பதவி,பிபிசி 48 நிமிடங்களுக்கு முன்னர் மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் முதுமையினால் நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியும் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்நாள் இரட்டிப்பாகியிருக்கலாம், ஆனால் நம்மில் பலர் வயதாகும்போது நம் அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கண்டு கலங்கியிருப்போம். அதைத் தவிர்ப்பதற்காக, ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. பல நவீன சிகிச்சைகள் வழியாக நமது உடலில்…
-
- 0 replies
- 794 views
- 1 follower
-
-
புதிதாக கண்டறியப்பட்ட நோவல் கொரோனாவைரஸ் (NCoV) என்ற புதிய வகை வைரஸ் நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இன்னொரு நபரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற இந்த வைரஸினால் பீடிக்கப்பட்ட இரண்டாவது நபரை பிரான்ஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்கோவ் (NCoV) வைரஸ் நிமோனியாவையும் சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது…
-
- 0 replies
- 388 views
-
-
-
நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'. என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன். பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததற்கான விருந்துபசாரம் நடந்து கொண்டிருக்கிறது. பியா மொட்டைமாடியில் தீவிரமா எதையோ யோசிச்சுக்கொண்டிருக்கிறா. அஜய் : பியா உள்ள வா பனி கொட்டுது பார். பியா : இல்ல அஜய் நம்ம பிள்ளை எப்பிடி நான் பெத்தெடுக்கப்போறனோ தெரியல. பயமா இருக்கு. மகனைக் குளிக்க வாக்க பாத்ரப்ல தண்ணியைத் திறந்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லா…
-
- 1 reply
- 913 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுக…
-
- 5 replies
- 4.5k views
-
-
என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ] இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும். மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்…
-
- 0 replies
- 837 views
-
-
எபோலா எமன்! தப்புவது எப்படி? இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின் பெயர் ‘எபோலா’. 1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா. இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ‘எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்’ என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏரா…
-
- 0 replies
- 471 views
-
-
சாதாரணமாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வருவதால் நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி. இதை கடைபிடிக்கும் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இதை பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். செரிமானத்திற்கு உதவும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். அல்சர் பிரச்சினை நீங்கும் காலையில் சாப்பிடாமல் அ…
-
- 0 replies
- 369 views
-
-
முதுகுவலி அல்லது இடுப்பு வலி நோய் பொதுவாக இந்த நாட்கள் எதுவும் பரவ சுகாதார சீர்கேடு ஒரு உள்ளன. இது முக்கியமாக அறு பொறி மீண்டும் கடுமையான வலி லேசான கொண்ட ஒரு நிலைமை என முடியும். முதுகு வலி சில நேரங்களில் நீங்கள் கீழே வளைக்கும் அல்லது நிமிர்ந்து நின்று ஒரு பெரிய பிரச்சனை எனக்கு ரொம்ப தாங்க முடியாத ஆகிறது. யாரையும் முதுகுவலி பாதிக்கப்பட்ட முடியும். முதுகுவலி நிகழ்வு பின்னால் முக்கிய காரணிகள் கனமான பொருட்களை திரும்ப-தசை காயம், அடிபட்ட தசைநார்கள், வட்டு குறைபாடு அதிகமாக மற்றும் தூக்கும் பயிற்சி, முதலியன உள்ளன மீண்டும் மனித உடலின் அதிகபட்ச எடை கரடிகள் என்று உடல் பகுதியாக உள்ளது. நீங்கள் எடைகொண்ட ஒரு நபர் இருந்தால் நீங்கள் மீண்டும் மேலும் பலவீனப்பட்டு உணர போகிறோம்.…
-
- 0 replies
- 3.2k views
-
-
எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்?? வணக்கம். எல்லோருக்கும் தமது உடம்பை கவனமாக நோய் நொடி வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆசை இருக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள். இன்னும் சிலர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பார்கள். ஆனால் இந்த இயந்திர உலகில் வாழும் நாம் எவ்வளவு தூரம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.நன்றி. நான் கிழமை நாட்களில் வேலையின் பின்னர் 3 நாட்களாவது உடற்பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செலவளிப்பேன்.சனி, ஞாயிறு அதிகாலையில் யோகா செய்வதுண்டு.
-
- 21 replies
- 4.7k views
-
-
எப்பொழுதும் இளமையாக இருப்பது எப்படி ?
-
- 0 replies
- 400 views
-
-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்க வாய்ப்புள்ளதா என அறிய மருத்துவர்கள் டெத் டெஸ்ட் (Death test ) என்னும் பரிசோதனையை கண்டறிந்துள்ளனர். FILE இச்சோதனையின் போது சோதனையை மேற்கொள்ளும் நபர் உடல்நலத்தோடு இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அவரது உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை சில குறியீடுகளை வைத்து மருத்துவர்கள் கண்டறிகின்றனர். எளிமையான ரத்த பரிசோதனை மூலம் இதனை செய்யும் மருத்துவர்கள் வெளியிடும் இச்சோதனை முடிவுகள் உடலில் இருக்கும் கோளாறுகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தெரிந்துகொண்டு அதுக்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள மிக உதவியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1402/28/114022805…
-
- 5 replies
- 1.3k views
-
-
எப்போது பால் குடிப்பது நல்லது? காலை நேரமா அல்லது இரவு நேரமா?
-
- 0 replies
- 430 views
-
-
மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்கலாம். முடியும். எதையும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒரு நகைச்சுவை இருக்கிறது. அதாவது நீங்கள் வாழ்க்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றிற்குமே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. ழ்க்கையில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்லது நோய்வாய்ப்படுவீர்கள். முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர…
-
- 1 reply
- 1.6k views
-
-
'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். என்னதான் சொல்றார்... அவர் சொல்றதை படிங்க... மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை, 'அல்சீமர்' என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
எமது மூதாதையரின் உணவுப் பழக்கங்களும் வைத்திய முறைகளும் ஒரு மனிதனின் ஆயுட்காலமானது சுமார் 100 ஆண்டுகள் என்பதும், திடகாத்திரத்து டனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் காலம் 60 ஆண்டுகள் என்பதும் அனைவரினதும் கணிப்பீடாகும். எமது மூதாதையர் ஓரளவு வயதினராகும் போதே பெண்களும் வயலிலும் , வீடுகளிலும் கடினமான உழைப்பாளிகளாக இருந்தனர். அதிகாலையிலே எழுந்து தமது வீட்டு வேலைகளை முடித்து மதியத்தில் கணவனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்வர் உணவு பரிமாறியதும் கணவனுக்கு ஒத்தாசையாகச் சில வேலைகளை மேற்கொள்வர். காலை உணவு காலையிலே கணவ…
-
- 1 reply
- 857 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால் எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போ…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
எயிட்ஸ் - 2015: எச்சரிக்கை எதிர்வு கூறல்கள் உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை கதி கலங்கச் செய்து, இன்றுவரை, இலங்கையிலும் உலகிலும் மருத்துவ துறைக்கு சவாலாகவிருக்கின்ற, முதல்நிலை கொடிய தொற்று நோயே எச்.ஐ.வி எயிட்ஸ் ஆகும். எயிட்ஸினால் இறந்தவர்களை நினைவு கூர்தல், எச்.ஐ.வி தொற்றுக்களை தடுத்தல், தொற்றுள்ளவர்களை பரிவோடு பராமரித்தல், தெளிவான பாலியல் கல்வியும், விழிப்புணர்வூட்டலும் என்பவற்றை நோக்காக கொண்டு, 1988முதல், ஒவ்வொரு வருடமும், டிசெம்பர் 1ஆம் திகதி 'உலக எயிட்ஸ் தினம்' அனுஷ்டிக்கப்படுகிறது. எயிட்ஸ் தினமானது, 1988இல் எயிட்ஸ் பற்றிய 'தொடர்பாடல்' என்ற தொனிப் பொருளோடு தொடங்கப்பட்டு, 2011இலிருந்து இன்றுவரை, எச்.ஐ.வி தொற்றுக்களையும் எயிட்ஸ் இறப்புக்…
-
- 0 replies
- 587 views
-
-
எய்ட்ஸுக்கே உதவியா"? [1] அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு முத்தமிழ்ல ஒரு நூறு இழையில அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... ! நானும் ஒரு சில இழைகளில் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும்[!!##**] படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்! 'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?' 'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்! 'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வரல்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த இஸ்லாமிய இழை திசை திரும்பி ஹோமோஸெக்ஷுவாலிடி.. ஓ…
-
- 2 replies
- 1.8k views
-
-
எயிட்ஸ் நோயின் 30 ஆண்டுகள்: ஐநா மாநாடு உலகெங்கும் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தேவைப்படுகின்ற பணத்தேவை குறித்து ஐநாவில் நடந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனதை நினைவு கூறுமுகமாக நடக்கும் இந்த மாநாட்டில் முப்பது நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் அதிபரான குட்லக் ஜொனார்த்தன் அவர்கள் இந்த போராட்டத்துக்கு போதுமான நிதி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். மோதல்களை கூட அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாள முடியும் ஆ…
-
- 0 replies
- 467 views
-