நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
வெள்ளைச் சீனியில் நச்சுத் தன்மை! - எப்படித் தயார் செய்கிறார்கள்..? [saturday, 2013-03-23 09:38:35] இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல…
-
- 2 replies
- 676 views
-
-
பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை 24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார். லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார். "ஆரோக்கியமான குழந்த…
-
- 2 replies
- 565 views
-
-
கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…
-
- 2 replies
- 1.6k views
-
-
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப் போல தினம் ஒரு கரட் உண்பவர்களின் உடலும் தகதகவென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு கரட் அழைக்கப்படுகிறது. காய்கறிகள் அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே, காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும். எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது இது ஒரு கிழங்கு வகையாகும். மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டு…
-
- 2 replies
- 738 views
-
-
http://img.vikatan.com/news/2016/08/20/images/பற்கள் 2.jpg டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். 'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம…
-
- 2 replies
- 451 views
-
-
ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில முன் நிபந்தனைகளும் இதில் இருக்கின்றன. அது சிக்கலானதாகவும், மூட நம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவையாகவும் இருக்கலாம். பொதுவாக காணப்படும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் வற்றை இங்கே தொகுத்துள்ளோம். சைவ உணவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது இரும்புச் சத்து பற்றி - ரத்தத்தின் முக்கிய பொருள் பற்றி - கவலை தெரிவிக்கப்படுகிறது. சைவ உணவுகளில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், சமநிலையான சத்துகள…
-
- 2 replies
- 660 views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment “நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போன…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 5 ஆகஸ்ட் 2022, 01:04 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் https://www.facebook.com/BBCnewsTamil/videos/தாய்ப்பாலை-சேமிப்பது-எப்படி-பிரெஸ்ட்-ஃபீடிங்-பம்ப்-பயன்படுத்துவது-பாதுகாப்பானதா/1026457934683461 தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது. குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றா…
-
- 2 replies
- 442 views
- 1 follower
-
-
" 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை. அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. காலையில் எழுந்து…
-
- 2 replies
- 449 views
-
-
மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே. இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம். முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் …
-
- 2 replies
- 5.8k views
-
-
சாப்பிடுவதற்கு முன்பும், பாத்ரூம் சென்று வந்த பின்னும் கைகளை நன்றாக கழுவினால் மட்டும் போதாது. கழுவிய பின், கைகளை ஈரமில்லாமல் நன்றாக துடைக்கவும் செய்ய வேண்டும். இல்லையெனில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்போர்ட் பல்கலைக் கழகம் சார்பில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது: கைகளை நன்றாக சுத்தம் செய்யாமல் உணவு சாப்பிடுவது, கழிவறைக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை சரியாக கழுவாமல் வருவது போன்ற சுகாதார குறைபாடுகள் காரணமாக, தொற்றுக் கிருமிகள் வேகமாக பரவி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து முழுவீச்சில் விழிப்புணர்வு பி…
-
- 2 replies
- 517 views
-
-
வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்... சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலி…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…
-
- 2 replies
- 11.6k views
-
-
திருமூலர் திருமந்திரத்தில் இருந்து; நூறு மிளகு அளவு சிறுநீரை அருந்துங்கள். இதற்கு மாறான மருந்து ஒன்றும் இல்லை. இதைத் தெளிந்த உச்சியில் அப்பினால் அதாவது தேய்த்துக் குளித்தால் நரைமயிர் மாறிக் கறுக்கும்.ஒரு கையளவு சிறு நீரோடு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு மிளகு வீதம் அதிகப்படுத்தி நூறு மிளகு வரை உண்ணுக என சில சித்த லைத்திய நூல்கள் கூறுகின்றன. இது ஒரு காய கல்ப முறை. சிறு நீரினால் உடலை மாலிஸ் இதற்குக் குறைந்த பட்சம் 7 நாட்கள் பழையதான சிறுநீர் தேவை. இதை ஓவ்வொரு நாளும் ஒரு பாட்டிலில் பிடித்து ஏழு நாட்களில் ஏழு பாட்டில்களில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பலரையும் பாடாய்படுத்தி வரும் மனஅழுத்தத்தை தீர்ப்பதற்கான வழிகள் [Thursday, 2011-09-29 11:44:06] பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உட…
-
- 2 replies
- 2k views
-
-
மூட்டு வலிக்கு டாடா.. வயதானவர்களுக்கு மட்டும் அல்ல... இன்றைய இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி துரத்தத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் தைலம் தடவுவது, வெந்நீர் ஒத்தடம் ஆகியவையே மூட்டு வலிக்கான சிகிச்சையாக இருந்தது. மருத்துவ வளர்ச்சியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. காரணம், அறுவை சிகிச்சை செய்தாலும், அதன் பயன் 10 முதல் 15 ஆண்டுகள்தான். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் இன்று, காலாகாலத்துக்கும் சிக்கல் இல்லாத தீர்வாக புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் …
-
- 2 replies
- 810 views
-
-
இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள். 10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் …
-
- 2 replies
- 1.5k views
-
-
வணக்கம், ஒரு சிறிய ஆராய்ச்சி.. உங்களுக்கு வாயில் சூட்டுப்பரு வருவதற்கான காரணங்கள் என்ன என்று தெரியுமா? வாய் என்றால் நாக்கு, உள்சொண்டுகள், முரசு.. இப்படி வாயினுள் காணப்படும் பகுதிகளில் காயம் மாதிரி வந்து துன்பம் ஏற்படுதல். பலர் குளிக்காவிட்டால் சூட்டுப்பரு வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள், குளிக்காவிட்டால் சூட்டுப்பரு போடும் என்று சொல்வார்கள். ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், நான் ஆகக்குறைந்தது ஒன்றுவிட்ட ஒரு நாளாவது குளிப்பேன். ஆனால், எனக்கு இருந்திட்டு சூட்டுப்பரு வரும். பல வருடங்களாக நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சூட்டுப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணங்களாக கீழ்வருபவை உள்ளன. ஆளுக்கு ஆள், இதற்கான காரணிகள் வேறுபடலாம்.…
-
- 2 replies
- 5.1k views
-
-
நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன். முகத்தில் வாட்டம்!சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன. பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன். அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது. இன்ன…
-
- 2 replies
- 1.2k views
-
-
மருத்துவ உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது ஸ்மார்ட் பேண்டேஜ்கள். அடிபட்டால் காயத்தின் மீது போட்டு கொள்ளும் Bandage-களில் தான், தற்போது புதிய தொழிநுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. காயத்திற்கு போடப்படும் கட்டுகள் இனி மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்காது. மாறாக ஏற்பட்டிருக்கும் காயத்தை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் இருக்கும். இதனை சாத்தியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது SMART BANDAGE-கள். சீன அறிவியல் அகாடமி மற்றும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் வகையை கண்டறிந்துள்ளன. விஞ்ஞானிகளால் கண்டுப…
-
- 2 replies
- 401 views
-
-
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, …
-
- 2 replies
- 297 views
- 1 follower
-
-
பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,அறிவியல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HBO/WARNER MEDIA/LIANE HENTSCHER படக்குறிப்பு, ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சி பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் - பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் ம…
-
- 2 replies
- 426 views
- 1 follower
-
-
மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா? ஆபத்து [ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 07:16.09 மு.ப GMT ] சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய தோல் மீனின் செதில் போல் இருப்பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்பார்கள். சொரியாசிஸின் வகைகள் சொரியாசிஸ் வல்கெரிஸ்(Psoriasis vulgaris): இது பொதுவாக அதிகளவில் காணப்படும் வகையாகும் . சிவந்த தட்டை வடிவமாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நேர்மாறான தடிப்புத் தோல் அழற்சி(inverse psoriasis): இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளின் கீழே , மார்புகளின் கீழ் இ…
-
- 2 replies
- 6.2k views
-
-
தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு, அவர் தலைக்குப் பயன்படுத்திய சாயமும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றன மீடியாக்கள். 'தலைக்கு அடித்த சாயமே தலைவரை சாச்சிடுச்சே!’ என்று தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். தலைக்கு அடிக்கும் 'டை’ அந்த அளவுக்கு ஆபத்தானதா? தோல் சிகிச்சை நிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமான டாக்டர் மாயா வேதமூர்த்தியும், ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனும் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள். ''அழகு நிலையங்களுக்கு சரும அழகுக்காக செல்பவர்களைவிட, தலைக்குச் சாயம் பூசச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தலைக்குப் பூசும் சாயத்தில் தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைகள் உண்டு. தற்காலிகம்…
-
- 2 replies
- 7.6k views
-