நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
எடைக் குறைப்பும் தூக்கமும்: "மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்." "தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்." "அதிகத் தூக்கம் நல்லதல்ல" பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள். உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்ப…
-
- 0 replies
- 924 views
-
-
மூளை வளர என்ன சாப்பிடலாம்? ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அ…
-
- 1 reply
- 924 views
-
-
சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு உடற்பயிற்சி தேவை? நீங்கள் ஓர் ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்பினால், உடல் செயல்பாடு மற்றும் இருதய நோய்க்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஊக்கமளிக்கும் புதிய ஆய்வின்படி, அதிக உடற்பயிற்சி மிகவும் சிறந்தது என ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. அரிதாக நகரும் நபர்களைக் காட்டிலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அது கண்டறிந்துள்ளது. இந்த உடற்பயிற்சியில் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஜாகிங் அல்லது வாரத்திற்கு பல மணிநேரங்கள் நடைபயிற்சி தேவைப்படுகிறதா என்பதைப் பார்ப்போம். 90,000-க்கும் அதிகமான பெரியவர்களிடமிருந்து உடற்பயிற்சி குறித்த ப…
-
- 0 replies
- 924 views
-
-
"மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற இலங்கை இந்திய பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன், வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார். 'வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’த…
-
- 5 replies
- 922 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒருவேளை உங்களால் தூங்க முடியாமல் இருக்கலாம், அல்லது நடு இரவில் எழ நேர்ந்து, அதன் பிறகு உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை (இன்சோம்னியா). ஆனால், சிலருக்கு இது ஒரு குறுகிய காலப் பிரச்னையாகத் தொடங்கி, பின்னர் தீவிரமான ஒன்றாக மாறலாம். நமக்கு ஏன் தூக்கமின்மை ஏற்படுகிறது? எப்பொழுது உதவியை நாட வேண்டும்? வயது முதிர்வு, இரவில் சிறுநீர் கழித்தல், மெனோபாஸ் (பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடுவது) அல்லது இரவு…
-
- 1 reply
- 922 views
- 1 follower
-
-
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவும் புதிய முறை - முயன்று பாருங்கள்! [Friday, 2013-06-14 12:51:55] தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஃபாஸ்ட் டயட் அல்லது 5:2 எ…
-
- 5 replies
- 920 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லா…
-
- 1 reply
- 920 views
-
-
செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது. காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர். இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யல…
-
- 5 replies
- 920 views
-
-
புற்றுநோய் பாதிப்பில் ஒரே ஸ்டேஜில் இருந்த 18 பேர் இச்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்ற நோய்களைப் போல அல்லாமல் புற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். நோயின் பாதிப்பைவிட, புற்று செல்கள் பரவாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியவையாக இருக்கும். உடம்பின் பல பகுதிகளிலும் பரவும் புற்றுசெல்களை முழுமையாகத் தடுப்பதற்கான மருந்துகளும் இன்னும் சோதனையிலேயே உள்ளன. இந்நிலையில், வரலாற்றில் முதன் முறையாக புற்றுநோய்க்கான சோதனை மருந்து வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Breast cancer Pixabay நியூயார்க…
-
- 3 replies
- 920 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ அறிவியலின் தொழில்நுட்பம் உலக அளவில் என்னதான் வளர்ந்து வந்தாலும், புற்றுநோயை மட்டும் நவீன மருத்துவத்தால் இன்றும் முழுமையாக வெல்ல முடியவில்லை. மார்பக புற்றநோய், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கு அன்றாடம் மனித உயிர்கள் இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் போதாதென்று, மனித உயிரைக் காவு வாங்கும் பட்டியலில் தொண்டை புற்றுநோயும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் இந்த…
-
- 6 replies
- 920 views
- 1 follower
-
-
தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஹொஸ்பிட்டல் மருத்துவமனையில், பற்சிகிச்சை முதல் மிகுந்த சிக்கல் வாய்ந்த இருதய, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் உன்னத தரத்தில் வழங்கப்பட்டுவருகிறது. இங்கு, உயிராபத்து விளைவிக்கக் கூடிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கென்றே 800 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்திலேயே முதன்முறையாக பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan) பரிசோதனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கே.எம்.சி.எச். இம்மருத்துவமனையின் தரத்தை முன்வைத்து, தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக கே.எம்.சி.எச். தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மருத்து…
-
- 0 replies
- 919 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஜலதோஷத்தை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளனவா? உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? பூண்டு ஜலதோஷத்திற்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த விஷயங்கள் உண்மையா என்பதைப் பார்ப்போம். பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா? "பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், …
-
-
- 10 replies
- 918 views
- 1 follower
-
-
கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள். அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம். அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம். அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல.…
-
- 13 replies
- 917 views
-
-
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்? இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம். முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும். உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால், முதலாம் மாதத…
-
- 3 replies
- 917 views
-
-
இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சி ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப…
-
- 3 replies
- 917 views
-
-
ஆஸ்டன் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வொன்றின் முடிவு, இருதய நோய் உள்ளவர்களை குஷிப்படுத்தும் செய்தியாக வெளியாகியிருக்கிறது. பொதுவாக பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடம்பில் கொழுப்புச்சத்து சேரும் என்று இருதய நோயாளிகள் மிரட்டப்பட்டு வந்தனர். அதையும் இப்போதைய கண்டுபிடிப்பு அகற்றியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு கை பாதாம்பருப்பு உண்டுவந்தால் அவர்களுடைய ரத்தக்குழாய்கள் ஆரோக்கியம் அடையும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்திய ஆயுர்வேத வைத்தியம் கூறி வந்ததை இந்த கண்டுபிடிப்பு நியாயப்படுத்தியுள்ளது. பாதாம்பருப்பை உண் பதால் ரத்தவோட்டத்தில் உள்ள உயிர்வளியேற்ற (ஆக்ஸிஜன்) எதிர் பொருள்கள் அதிகரிக்கின்றன. இதன் பலனாக ரத்த அழுத்தம் குறைவதுடன், ரத்த ஓட்டமும் சீரடையும் என்று …
-
- 2 replies
- 916 views
-
-
உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது. By ஃபேஸ்புக் பார்வை - March 6, 2019 1 வரலாற்றில் பாடம் படிப்போம் ! சமீபத்தில் கிளினிக்கில் 8 வயதே இருக்கும் ஒரு சிறுமிக்கு பேலியோ பரிந்துரை கொடுத்தேன். காரணம், அந்தச் சிறுமியின் எடை – 82 கிலோ. …
-
- 4 replies
- 916 views
- 1 follower
-
-
உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN …
-
- 2 replies
- 915 views
-
-
தொப்பையை குறைக்க வழி - 3 எப்ப டெலிவரின்னு கிண்டல் பண்றாங்களா? இதோ தொப்பையை குறைக்க வழி... * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோர…
-
- 1 reply
- 915 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறட்டை பழக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், சனீத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 15 மார்ச் 2024, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை பாதிக்கும், இதில் உடல் உறவு உட்பட தாம்பத்யம் தொடர்பான விஷயமும் அடக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "என் கணவர் சத்தமாக குறட்டை விடுவதைப் பற்றி நான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி கேலி செய்தேன், ஆனால் மனதளவில் …
-
-
- 5 replies
- 914 views
- 1 follower
-
-
விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம், ஆய்வு கூறுகிறது கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகல், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதானவர்களாக வளரும் வரை கண்காணித்த இந்த ஆய்வு இந்த இரு பழக்கங்களையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒவ்வாமை வருவது சற்று அதிகமாகக் காணப்படுவதாகவும், அந்தப் பழக்கங்களில் குறைந்தது ஒன்றையாவது வைத்திருந்தவார்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவாகவும் இருந்ததாகக் கூறியது. இரண்டு பழக்கங்களையும் வைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படா…
-
- 0 replies
- 913 views
-
-
செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள்
-
- 1 reply
- 912 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்று பல ஆண்டுகளாக வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். இதற்கு பதில், நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. JAMA மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய மருத்துவ ஆய்வு இதனை கண்டுபிடித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 912 views
-
-
கொழுப்பை கரைக்கும் “காளான்” [ மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது. காளானின் மகத்துவங்கள் காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.…
-
- 4 replies
- 912 views
-
-
விந்து முந்துதல் இயற்கையே |Permature ejaculation is normal | Aathichoodi விந்து.. முந்துதல், இயற்கையே... அதனை ஒரு பிரச்சினையாக பார்க்க தேவைக்கு இல்லை.. மருத்துவர் விவரிக்கிறார், முழுவதும் காணுங்கள்..
-
- 0 replies
- 912 views
-