Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. தினமும் 9 மணிநேரம் தூக்கமா? விரைவில் மரணம் நிச்சயம்- எச்சரிக்கும் ஆய்வு முடிவு தினமும் 9 மணிநேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் நிச்சயம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் தூங்கும் நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், ஒருநாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் இறப்பதற்கான அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது. அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவ…

  2. தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்....! நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.* ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம். கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார…

    • 5 replies
    • 1.4k views
  3. தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே ? டியர் டாக்டர் "தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே?" ''தற்போது ப்ளஸ் டூ முடித்திருக்கும் மாணவி நான். சமீப காலமாக எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர, தினமும் ஒரு மணி நேரம் வியர்த்து விறுவிறுக்க விளையாடுகிறேன். மேலும், சாப்பாட்டின் அளவையும் குறைத்துவிட்டேன். இருந்தும் என் உடல் எடை குறையவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் கல்லூரி வாசலை மிதிக்க இருக்கும் எனக்கு இந்த…

  4. தினமும் ஊறுகாய் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு! [Monday 2015-01-05 12:00] நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். செரிமான பிரச்சனைகள்: ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள …

    • 0 replies
    • 645 views
  5. தேனீரைச் சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் "கிரீன் டீ" என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுக…

  6. இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. கல்லீரல் pixabay ``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற…

    • 1 reply
    • 540 views
  7. தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல்..! - அறிந்து கொள்ளுங்க..! [Thursday, 2014-02-06 21:34:54] பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே,…

  8. பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"![b/] நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது. அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது. ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. அநேகம்பேர் அவ்வளவாக சீண்டாத மற்றும் ஏழைகளின் பழமாக கருதப்பட…

  9. காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் …

    • 0 replies
    • 526 views
  10. தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்! புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலு…

    • 13 replies
    • 3.1k views
  11. தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை Getty Images கட்டுரை தகவல் ரஃபேல் அபுச்சைபே பிபிசி நியூஸ் முண்டோ 13 நிமிடங்களுக்கு முன்னர் இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர். "அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroe…

  12. தினமும் சாப்பிடும் உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம் என சமீபத்தில் சீனாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு மட்டுமில்ல மனதுக்கும் ரொம்ப நல்லதுனு இந்த ஆய்வு சொல்லுது. சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு இந்த ஆய்வை நடத்தியது.அவர்கள் தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினர். அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களின் மன அழுத்தம் குறைந்தி…

  13. மூளை - மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும் அதுதான் மனித உறுப்புகளில் சிக்கலானதும் அதுதான். மனிதனை ஆட்டிப் படைப்பதுவும் அதுதான். 'ஆலும் வளரனும் அறிவும் வளரனும்' என்பதொற்கொப்ப மனிதனின் பாரிய வளர்ச்சியோடு மூளையும் ஒவ்வொரு நாளும் வளருகிறது. தினமும் மூளை வளருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10 000 நரம்பு செல்கள் (நியுரோன்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த சில நாட்களிலேயே அவை அழிந்தும்விடுகின்றன. தினமும் செல்கள் பிறந்து பின்பு இறந்தும் போவதால் என்ன பயன்? இதில் மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது?புதிதாய் பிறந்த நரம்பு செல்கள் சாகவிடாமல் அவைகளை நமக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற ஒரே வழி; ஒவ்வொரு நாளும் புதிதாய் கற்றுக்கொள்வதுதான். புதிதாய் பிறக்கும் செல்லுக்கு வேலை கொடுக்கவி…

  14. உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும். உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத…

  15. ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.* ஒவ்வொருவரும் தங்கள் முட…

  16. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்: [Thursday 2015-12-31 08:00] 1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். 2. அமரும்போது வளையாதீர்கள். 3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள் 4. சுருண்டு படுக்காதீர்கள்। 5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள். 6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள். 7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள். 9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். 10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள். http://www.seithy.com/breifNews.php?newsI…

  17. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களை உறுதியுடன் வைத்திருக்க உதவுகிறது. மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பொஸ்பரஸ் போன்ற கனியுப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்க உதவுகின்றது. முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது. நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குற…

  18. Started by கறுப்பி,

    தியானம் 21 நாட்கள் நடைபெறும். இலவசமாய் பதிந்து பயன் பெறலாம்- இணைப்பு. http://www.chopracentermeditation.com/bestsellers/landingpage.aspx?bookId=178&utm_source=chopracentermed_com&utm_medium=Registration_Recruitment_eBlast&utm_campaign=Perfect_Health

  19. திருநங்கைகளின் உலகம் அன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால், அரை குறையாகச் சேலை கட்டி, கரகரக் குரலில் 'மாமா... மாமா...’ என்று பாலியல் இச்சையோடு கும்மி அடிக்கும் கோமாளிகள்! திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் நாங்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். 'கருவறையில் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாகவே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடையாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந்தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக்கும்பட்ச…

  20. பாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம். அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம…

  21. நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம். ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெ…

  22. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் பிரகாரம்.. திருமணம் மற்றும் விவாகரத்துச் செய்து கொள்ளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் உடல் நிறை அதிகரிப்பது அல்லது அதிகரிப்பதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறை அதிகரிப்பு.. உடல் உபாதைகளை நோக்கியும் அவர்களை கொண்டு செல்கிறது. ஆண்களைக் காட்டிலும் இந்தப் பாதிப்பு பெண்களிடத்தில் சற்று அதிகமாகவே அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கொண்ட குடித்தொகை மாதிரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகள் தொடர்ச்சியான கண்காணிப்பையும் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆராய்ச்சியின் நம்பகத்தன்மை ஓரளவுக்கு உறுதி செய்யக் கூடியதாகவும் அமைகிறது. உடல் திணிவுச் சுட்டெண் (BMI) அடி…

  23. தீண்டத்தகாத உணவா சோறு? அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள். உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோ…

  24. தீபிகாவின் கதை அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்... (Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi) ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந…

    • 2 replies
    • 737 views
  25. Started by nunavilan,

    தீய கொலஸ்ரோல் டெச்ட்தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போது…

    • 0 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.