யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வணக்கம் நிழலி தமிழ்வின் இணைப்பு என்பதற்காக நான் இணைத்த ஒரு இணைப்பு நீக்கப்பட்டது என்று அறிய தந்துள்ளீர்கள். உண்மையில் எனக்கு அப்படி ஓர் விதிமுறை இருப்பது தெரியாது .இது சம்பந்தமாக தெளிவு படுத்துவீர்களா. நன்றி
-
- 2 replies
- 693 views
-
-
rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…
-
- 18 replies
- 2.4k views
-
-
ஒரு பதிவுக்கு பச்சை அல்லது சிகப்பு புள்ளி குத்துவோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கு ஆனால் அதை எல்லோரும் பார்க்கும் படி இருக்கே? அது சரியா ? அல்லது தவறா? நான் சொல்ல வாறது எனது கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நான் மட்டும் பார்க்கும்படி செய்வது நல்லதா? அது சாத்தியமானதா? இது வெறும் கேள்விதான் . ஆனால் யாரால் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கும் இந்த முறையானது நல்லது என நினைக்கின்றேன். நன்றி.....
-
- 15 replies
- 1.7k views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 0 replies
- 741 views
-
-
இங்கு யாழில் அங்கத்தவர்களின் பெயருகளே பலவித குழப்பங்களை தோற்றப்பார்க்கிறது. தமிழில் இல்லாத சொற்களா? பெயருகளா?? ஏன் ஒரே பெயரில் நடமாட நிற்கிறார்கள்?????? "narathar, narathar70, சோழன், sozan, ........."!!!!!!!!!!!!!!!!!
-
- 11 replies
- 1.4k views
-
-
வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள். இப்படி வக்காலாத்து வாங்கியவருக்கு யாழ்களம் அடிச்சுதே ஆப்பு அதுதான் பெரும் துன்பம். ஆதாரம்்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317919 முழுவிவாதம்்: http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0
-
- 5 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில யாழ் முரசம் எண்டுற பகுதியில கருத்துக்களில் மாற்றம் எண்டுற பகுதியில மாற்றங்கள் செய்யப்படுகின்ற கருத்துக்கள் பற்றி அறிவிக்கப்படுகிது. இதுமாதிரி உறவோசை பகுதியில மாற்றப்படவேண்டிய கருத்துக்கள் எண்டு... நாங்கள் தவறாக நினைக்கின்ற கருத்துக்களை - அது யார் எழுதி இருந்தாலும் குவோட் மூலம் சுட்டிக்காட்டுறதுக்கு ஒரு பகுதி ஆரம்பிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? அதாவது தெருவில நிக்கிற நாங்களே எங்கட பிரச்சனைகளை புரிந்துணர்வுடன் தீர்த்துக்கொள்ளது பற்றி? உதாரணமா.. நான் ஒண்டு பிழையாக எழுதினால்.. மற்றைய கள உறவுகள் யாராவது அதை - அந்தக் கருத்தை குவோட் போட்டு சுட்டிக்காட்டும்போது நான் எனது கருத்தை மீள் பரிசீலனை செய்து திர…
-
- 26 replies
- 4.3k views
-
-
,,கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கபட்டிருகும். "-- ,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்.,,, இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள் இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா... வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்.. நன்றிகள்
-
- 19 replies
- 3.2k views
-
-
இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html
-
- 0 replies
- 879 views
-
-
லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு! யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,, ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களு…
-
- 75 replies
- 10.9k views
-
-
அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன். இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா??? அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 48 replies
- 5.2k views
-
-
யாழில் இனி எப்ப இவ்வளவு வாசகர்கள் ஒரெ தடவையில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? புலிகள் இல்லாதபடியால் இனி பெரியதாக்குதல் ஒண்றும் நடத்தமுடியாது ஆகவே இனி வரும் காலங்களில் வாசகர்கள் யாழுக்கு இந்த எண்ணிக்கையில் ஒரெ தடவையில் வந்து பார்வையிடமாட்டார்கள் என்பது என் கருத்து. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உச்சநிலைக்கு போனால் அது சாத்தியம்.இனிமேல் அப்படியான உச்ச நிலைக்கு ஆயுத போராட்டம் செல்லும் வாய்பேயில்லை இனி வரும் காலங்களில்
-
- 10 replies
- 1.6k views
-
-
இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
கள விதிகளின்படி களத்தில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. களத்தில் ஆங்கிலத்தில் இணைக்கப்படும் விடயங்களுக்கு தமிழல் சிறிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேவையில்லாதவற்றுக்கு கத்தரி போடும் நீங்கள் ஏன் இதை கவனத்தில் கொள்ள தவறுகின்றீர்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
இன்று ஏன் என்னுடைய ஐ.பி அட்ரஸை தடை செய்து வைத்திருக்கிறீர்கள்.. உடனெ திறந்து விட வேணும்...
-
- 9 replies
- 1.2k views
-
-
இன்று நான் யாழ் கள உறவு திரு. சுவி அவர்களை நேரில் சந்தித்தேன். மிகவும் வித்தியாசமான அதேநேரம் புதுவிதமான சந்திப்பு. முன்பின் தெரியாது. முகம் தெரியாது. அவரைக்கண்டு இருவுரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரது குடும்பத்தை ஏற்கனவே அறிந்திருந்தது தெரியவந்தது. அதன்பின் முகம்தெரியா உறவல்ல. முன் தெரிந்த உறவே அது ஆனது.
-
- 11 replies
- 1.5k views
-
-
இன்று யாழ்களத்தில் இப்போது ஒரேசமையத்தில் 481 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
-
- 18 replies
- 2.8k views
-
-
யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
-
- 1 reply
- 995 views
-
-
நேற்று இரவு எங்களுக்கு நேரம் மாறீட்டிது. ஒரு மணித்தியாலம் நேரத்தை கூட்டி இருக்கிறாங்கள். இப்ப யாழில இருக்கீற டீபோல்ட் நேரத்துக்கும் எங்களுக்கும் கனடா கிழக்கு கரை நேரத்துக்கும் - அஞ்சு மணித்தியாலம் வித்தியாசம் காட்டிது. உங்கட நாடுகளிலையும் - முக்கியமா யூரோப், அவுஸ்திரேலியா - நேரம் மாறீட்டிதா? உங்களுக்கு இப்ப எத்தின மணி எண்டுற ஒருக்கால் அறியத்தருவீங்களோ? அதாவது, முன்பு இருந்ததை விட எத்தின மணித்தியாலம் முன்னுக்கு பின்னுக்கு போய் இருக்கிது எண்டு. இப்ப சரியா எங்களுக்கு கனடா கிழக்கு கரை நேரம் - ஞாயிறு காலம்பற 11.33 எண்டு கணணி காட்டுது. நன்றி!
-
- 11 replies
- 2.6k views
-
-
ஜேர்மனியில்(கிறீபீல்ட் நகரத்தில்) காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எல்லா கடைகளுக்கும் சென்று பணம் சேர்க்கிறார்கள். அப்போது ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார். நாங்கள் பல பிரிவாக பிரிந்து ஜேர்மனியின் வடமேற்கு மாகாணம் முழுவதும் ஒவ்வொருவரும் 200 குழந்தைகளை பராமரிக்க என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தைக் காட்டி பணம் சேகரிக்கிறோம் என்று இவர்கள் சொன்னார்கள் நாம் தனிய ஒரு இன மக்களிடம் வாங்காமல் எல்லோரிடமும் வாங்கிறோம் என்று. இதே வழியை நாமும் பின்பற்றினால் என்ன? நாங்களும் தமிழரிடம் மட்டுமன்றி எல்லோருடனும் கதைத்தால் பணம் சேராவிடினும் இது ஒரு பிரச்சார யுக்தியாக அமையும். இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் பல வெளிநாட்டவரிற்கு இலங்கை என்றால் எங்கை இருக்கு என்று தெரியாது ப…
-
- 0 replies
- 631 views
-
-
உறவுகளே!!! உங்களை நாம் கைவிடப் போவதில்லை- உதவி செய்ய முற்படும் புலம்பெயர் தமிழர்கள். http://www.newjaffna...php?id=MjMxNzc= இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??! உண்மையில் இது பாதிக்கப்பட்ட உறவுகளின் மீதான கருசணையின் நிமித்தம் விடுவிக்கப்பட்ட கோரிக்கையா.. நிச்சயமாக இது அவர்களின் மீட்சிக்கு உதவி நிற்குமா..????! நியூயாவ்னா என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த.. முன்னாள் பெண் போராளிகள் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவத் தயாராக உள்ளனர் என்ற இந்த அறிவிப்பு.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட உறவுகள் வறுமை.. வருமானமின்மை காரணமாக தவறான வழியில் செல்லாது.. …
-
- 2 replies
- 762 views
-
-
விதிமுறைகள்: 1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும். 2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம். கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம். 4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை) சிறந்த கருத்தாளர் தெரிவு: மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வா…
-
- 306 replies
- 28.3k views
-
-
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. …
-
- 157 replies
- 11.8k views
-
-
இவங்களும் துரோகிகளே. அட பெடியள் இன்சை கொழும்பிலை சில துரோகிகள் இதய வீணை நிகழ்ச்சியை பெரிய சத்தமாக போடுறான்கள் எல்லாம் உந்த தேத்தண்ணிக்க்டைகாரன்கள்தான
-
- 8 replies
- 1.9k views
-