யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
புது வருசமும் பிறக்கப் போகுது. யாழும் புது மாற்றங்களோடை வரப் போகுதான். நல்ல விசயம்... இந்த நேரத்திலை எங்கடை பிள்ளைகளிட்டையும் யாழ் இப்படிச் செய்தால் நல்லாயிருக்கும்... அப்படிச் செய்தால் நல்லாயிருக்கும் எண்டு கன பிளானுகள் இருக்கும். அதைப் பற்றிக் கதைக்கத் தான் இந்தத் திரி.. அதுகளை நாங்கள் இங்கை பகிர்ந்து கொள்ளுவம். புத்தி சொல்லுறதும் பிழை பிடிக்கிறதும் தானே உலகத்திலை லேசான வேலைகள். சரி நானும் என்ரை மனசிலை பட்டிறதைச் சொல்லுறன்.... முதலாவது சொந்தப் படைப்புகளும் ஆக்கங்கம் வாறது குறைவு எண்டு பன பேர் அங்கலாய்க்கினம்.நியாயமான அங்கலாய்ப்புத் தான். யாழும் சொந்தப் படைப்புக்களுக்கு ஒரு முக்கியத்துவம் குடுக்க வேணும். இப்ப என்னண்டா முகப்புப் பக்கத்திலை கடைசியாப் பதிஞ்ச கொஞ்ச விசயங…
-
- 33 replies
- 2.8k views
-
-
தற்போது யாழ்களம் பலர் பார்வையிடும் தளமாக மாறிவிட்டது. யாழ் ஒரு தனி தமிழுக்கான தளம்!! சிலவேலைகளில் இங்கு கருத்தெழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) பல எழுத்துப் பிழைகளை விடுகிறோம். இந்தப் பிழைகளை முற்று முழுதாக திருத்த இயலா விடினும், விடயத் தலைப்புகளில் வரும் பிழைகளையாவது மட்டுறுத்தினர்கள் திருத்தலாம்தானே??? .... சில கருத்துக்களை களத்திலிருந்து மாயமாக்கும் சில மட்டுறுத்தினர்கள், கொங்ச நேரத்தை இதில் செலவிடலாம்தானே!!!! இல்லையேல் தூள்கிங் "ராமராசன்" டமிழ் பேசியதை கேட்பது போல்தான், யாழ்களமும் வாசிக்க வேண்டி வரும்!!!!!
-
- 16 replies
- 2.8k views
-
-
யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள். உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்? மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)? தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா? அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்? நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)? எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)? தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே…
-
- 13 replies
- 2.8k views
-
-
இன்று யாழ்களத்தில் இப்போது ஒரேசமையத்தில் 481 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
-
- 18 replies
- 2.8k views
-
-
பெயர் மாற்றம்!?.. வணக்கம் கள உறவுகளே! இவ்வளவு காலமும் யாழ்களத்தில் "கணொன்" எனும் பெயரில் கடித்தெடுத்தவன், "சோழன்" ஆக மாற விரும்புகிறேன். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை, எல்லாம் ஒரு தமிழ்ப் பெயரில் இங்கு உலாவ விரும்பியதால்தான்! நிர்வாகம் பெயரை மாற்றுமென நம்புகின்றேன். அப்படியாயின் "கணொன்" எனும் பெயர் ஏன் வந்தது: இதை இங்கு கூறத்தான் வேண்டும். ... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு மகன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும், எனது உறவினனான நண்பனும் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு அக்குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான பேச்சு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எனது நண்பனோ அவர்களிடம் "உங்கள் மூத…
-
- 15 replies
- 2.8k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக…
-
- 20 replies
- 2.8k views
-
-
hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message
-
- 12 replies
- 2.8k views
-
-
அண்மை நாட்களாக "யாழ் வழிகாட்டி பகுதியில்" தாயகப்பறவை இணையத்தளம் பற்றி சில கருத்துக்களை எழுதி வந்தேன். தற்பொபொழுது அக்கருத்துக்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன, அண்ணாவி, மேதாவி, விண்ணர் என்று தற்பெருமை பட்டுக்கொள்ளும் வலைஞனினால் அந்த கருத்துக்கள் கடாசப்பட்டது. அதற்கு அவர் கூறிய விஞ்ஞான விளக்கங்கள்.... அந்த கருத்துகளிலே நான் எவரின் பெயரை நேரடியா குறிப்பிடவில்லை, (ஆனால் சிலர் தங்களுக்கு தொப்பி மிகப்பொருத்தமாக இருந்த படியினால் போட்டுக்கொண்டார்கள் என கேள்வி), ஆனால் நான் குறிப்பிட்டது நாட்டை மட்டுமே. ஒரு நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் வருகிறார்கள்? மேதாவி சாறி மேதகு வலைஞனின் ஞானக்கண்ணுக்கு மாத்திரம் நான் குறிப்பிட்ட நாட்டை, அங்கிருந்து யார் யார் வருகின்றார்கள…
-
- 10 replies
- 2.7k views
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.7k views
-
-
யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும
-
- 18 replies
- 2.7k views
-
-
இராமன் சாமி பெரிசா? இராமசாமி பெரிசா? எவர் பெரிசா இருந்தா நமக்கென்ன? நாளைய சாப்பாட்டுக்கு என்ன வழி? எமக்கு பசி ஈழம். அதுக்கு சாமி பெரிசா இராமசாமி பெரீசா என்டு சில்லெடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு இடுப்பில கட்டுறதுக்கு கூட துண்டில்ல தலையில கட்டுறதுக்கு எதுக்கு பட்டு குஞ்சம்? யாழ்கள செயற்பாட்டின் உச்சத்தை எட்டக் கூடிய காலகட்டத்தில் நிற்கிறோம். வந்து கதையுங்கோ.
-
- 8 replies
- 2.7k views
-
-
அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள், தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை. எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி! அண்மையில் வீரச்சாவு அடைந்…
-
- 24 replies
- 2.7k views
-
-
யாழுக்கு என்ன நடக்கிறது ? கடந்த சில தினங்களாக யாழ் எனக்கு வேலை செய்யவில்லை. யாழுக்கான தொடர்பில் அழுத்தும்போது வேறெங்கோ போகிறது. அப்படியொரு தளமே இல்லை என்று சொல்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது வேறு யாருக்காவது இப்பிரச்சினை இருக்கிறதா??
-
- 33 replies
- 2.7k views
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். சில தொழ…
-
- 23 replies
- 2.7k views
- 1 follower
-
-
நேற்று இரவு எங்களுக்கு நேரம் மாறீட்டிது. ஒரு மணித்தியாலம் நேரத்தை கூட்டி இருக்கிறாங்கள். இப்ப யாழில இருக்கீற டீபோல்ட் நேரத்துக்கும் எங்களுக்கும் கனடா கிழக்கு கரை நேரத்துக்கும் - அஞ்சு மணித்தியாலம் வித்தியாசம் காட்டிது. உங்கட நாடுகளிலையும் - முக்கியமா யூரோப், அவுஸ்திரேலியா - நேரம் மாறீட்டிதா? உங்களுக்கு இப்ப எத்தின மணி எண்டுற ஒருக்கால் அறியத்தருவீங்களோ? அதாவது, முன்பு இருந்ததை விட எத்தின மணித்தியாலம் முன்னுக்கு பின்னுக்கு போய் இருக்கிது எண்டு. இப்ப சரியா எங்களுக்கு கனடா கிழக்கு கரை நேரம் - ஞாயிறு காலம்பற 11.33 எண்டு கணணி காட்டுது. நன்றி!
-
- 11 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்! .... * நீங்கள் உருவாக்கிய ஒரு ஆக்கம் இன்னொருவர் மூலம் இணையத்தில் காப்புரிமை அத்துமீறல் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? உதாரணமாக, நீங்கள் ஒரு அழகிய கவிதையை அல்லது மிகச்சிறந்த ஒரு நகைச்சுவை ஒன்றை நீண்ட நேரம் செலவளித்து சுயமாக உருவாக்கி யாழ் இணையத்தில் இணைக்கின்றீர்கள் என வைப்போம். இதை இன்னொருவர் உங்கள் பெயரைக் குறிப்பிடாது வெறுமனே உங்கள் ஆக்கத்தை மட்டும் பிரதி எடுத்து மிகவும் பிரபலமான ஒரு இணையத்தில் இணைத்தால் அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி கோபம் வரும்? உங்கள் கவனத்திற்கு கீழ்வரும் விடயங்களை கொண்டுவருகின்றேன்... * யாழ் இணையத்தில் நடைபெறும் காப்புரிமை அத்தும…
-
- 14 replies
- 2.6k views
-
-
பல பகுதிகளில் குணாளன் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில கருத்துக்களும் நீக்கப்பட்டு, குணாளன் களத்தில் எழுதுவதற்கும் தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது. அருமையான முடிவு. தடை என்பது திருந்துவதற்கான சந்தர்ப்பம். ஒவ்வொரு தண்டனையும் திருந்துவதற்க்காகத்தான். திருந்தி தனிமடல் போட்டால் கட்டை அவிழ்த்து விடவும்...அட சா தடையை எடுத்துவிடவும். நான் ஒரு ஜனநாயகவாதி :P :P :P
-
- 14 replies
- 2.6k views
-
-
இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்..... இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன். அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம். இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும். நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவ…
-
- 16 replies
- 2.6k views
-
-
வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.
-
- 4 replies
- 2.6k views
-
-
யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…
-
- 35 replies
- 2.6k views
-
-
வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன். யாழ் இணையம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1 # Daily Pageview : 51745 # Daily Ads Revenue : $156.97 புதினம் (செய்தித் தளம்): # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4 # Daily Pageview : 42392 # Daily Ads Revenue : $129.18 தமிழ்நாதம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8 # Daily Pageview : 41587 # Daily Ads Revenue : $126.76 தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி): # இன்றைய (இணையப்) பெறும…
-
- 12 replies
- 2.6k views
-
-
இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை. களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ?
-
- 11 replies
- 2.6k views
-
-
அன்புடன் நிர்வாக குழவினருக்கு இவ் மடல் ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது யாதெனின் .... எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால் தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....??? இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும் எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது உள்ளது . என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில் இத்தோடு நிறைவு செய்கிறேன் . எனவே அது பற்றிய தங்களது விரிவான தெளிவான …
-
- 17 replies
- 2.5k views
-
-
கள உறவுகளே!!!!!!!!!!! எனக்கு தமிழில் ஒரு சில இடங்களில் எழுதிவதில் மயக்கம் ஏற்படுகின்றது . ஒரு சில உறவுகள் அதை சுட்டிக்காட்டிய பொழுதிலும் , சில எழுத்துப் பிரையோகங்களில் மனக்குளப்பமே ஏற்படுகின்றது . அதாவது சுற்ரம் , சுற்ருலா , பற்ரவைத்தல் , இது எனது எழுத்து . ஆனால் எனது நெருங்கிய , எனது வளர்சியில் அக்கறை கொண்ட நண்பர் , எனது எழுத்தைப் பினவருமாறு மாற்ரியமைக்கப் பரிந்துரை செய்கின்றார் . சுற்ரம் = சுற்றம் , சுற்ருலா = சுற்றுலா , பற்ரவைத்தல் = பற்றவைத்தல் , என்று திருத்தச் சொன்னார் . ஆனால் , எனது அறிவோ இலக்கணப்படி ர + உ = ரு , ர +அ = ர , என்று சொல்கின்றது . உங்களில் யாராவது தமிழில் , கலைமாணி அல்லது முதுகலை மாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள் இருந்தால் எனது ஐய்யப…
-
- 22 replies
- 2.5k views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…
-
- 7 replies
- 2.5k views
-