வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். …
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 11 replies
- 2.2k views
-
-
Caanada Just for laugh ல் தமிழரா ? @9.47
-
- 11 replies
- 2.4k views
-
-
இதனை சில நாட்களின் முன்னர் அரிச்சுவடியில் பதிவிட்டிருந்தேன் , ஈழப்பிரியன் அறிவுறுத்தியிருந்தார் சரியான பகுதியில் இணைத்துவிடும் படி அன்பர் ஈழப்பிரியனின் குறிப்பிடுதலுக்கு அமைய அரிச்சுவடியில் இட்ட பதிவை இங்கே வாழும் புலத்தில்மீள் பதிவிடுகிறேன் கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார். £10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது. அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர். கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர், 'An Idiot, killed an Idoit' என்று சிம்பிள் ஆக சொன்னார். முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்…
-
- 17 replies
- 2.5k views
-
-
கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்! கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த தேர்தலில் ஸ்காபரோ கில்வூட் தொகுதியின் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் குயின்ரஸ் துரைசிங்கம் என்ற தமிழர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு ஊடகவியலாளராக, தன்னார்வத் தொண்டனாக, சமூக சேவையாளனாக, அறிவிப்பாளராக, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, ஒரு எழுத்தாளராக, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளராக, அரசியல் விமர்சகராக என பல்வேறு தளங்களிலும் அவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavanne…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது! லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்க…
-
- 11 replies
- 1.7k views
-
-
பாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்! பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவரை 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://athavannews.com/பாலியல்-குற்றச்சாட்டு-இ-2/
-
- 0 replies
- 769 views
-
-
மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கையை முற்றாக நிராகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரிய தரவுகளுடன் எடுத்துரைத்த தடயவியல் நிபுணர் சேவியர் செல்வா.....
-
- 0 replies
- 751 views
-
-
இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது. எனினும் In…
-
- 0 replies
- 908 views
-
-
லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!! பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
சிக்குவாரா சிங்கன் கழுத்தை அறுப்பேன் என்று மூன்று முறை சைகை காட்டினார் பிரியங்கா பெர்னாண்டோ. பிரித்தானிய குடிகளான தமிழர் நால்வர் கொடுத்த குறைபாட்டினை தொடர்ந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் மூன்று முறை நடந்த வழக்கில் இலங்கை தூதரகம் சிரத்தை எடுக்கவில்லை. இப்போது, அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு கிடைக்கப் கூடிய வரைமுறைக்கு அமைய அவரது நடவடிக்கை அமையவில்லை என நீதிமன்று அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மார்ச் 14ம் திகதி நடத்துகிறது. தமது ராஜதந்திர பிரதேசத்துக்கு வெளியே வந்து பிரிட்டிஷ் குடிமக்களை கொலை பயமுறுத்துதல் விடுப்பது அவரது அல்லது அவரது தூதரகத்தின் வழமையான வேலைக் விபரத்தனத்துக்குள் இல்லை என நீதிமன்றம் சொல்லி உள்ளது. வாரிச் சுருட்டிக் கொண்டு தூதரகம்…
-
- 2 replies
- 1.5k views
-
-
March 6, 2019 பிரித்தானிய விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் under the Terrorism Act 2000 திற்கு அமைவாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவின் பறை இசைக் குழுவைச் சேர்ந்த கலைஞரான 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின…
-
- 0 replies
- 785 views
-
-
நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2019: நீங்களும் பரிந்துரை செய்யலாம் நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது. நோர்வே வாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ் 3 இன் ‘தமிழர் மூவர்’ – 2019 மதிப்பளிப்பிற்கான …
-
- 0 replies
- 728 views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா. முன்றலில் அலையேன திரண்ட புலம்பெயர் மக்கள்! தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா.நோக்கிய கவனயீர்ப்புப் போராட்டம்ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐ.நா சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டிடத்தொடர்இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரத்தில் மேலதிக கால அவகாசம்வழங்க பிரித்தானியா உள்ளிடட முக்கியமான நாடுகள் தயாராகி இருக்கும்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றைஏற்பாடுசெய்திருந்தனர். இன்று ந.பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்தின் முன்பாகஇருந்து ஆரம்பமான இந்த மக்கள் பேரணி ஐ.நா சபை முன்றலில் இருக்கும்முருகதாசன் திடலை சென்றடைந்து அங்கு காலை நிகழ்வுகள்…
-
- 0 replies
- 939 views
-
-
உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019): உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது. முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் …
-
- 13 replies
- 2.1k views
- 1 follower
-
-
பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரி…
-
- 1 reply
- 1.3k views
-
-
தாயக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.......!! சர்வதேச நீதி விசாரணை வேண்டி இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அவ்மாபெரும் போராடத்திற்கு ஆதரிக்கும் முகமாக இன்று(25/02/2019) காலை 10மணியளவில் பிரித்தானிய பிரதமரின்(10 Downing Street) அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. இலங்கை அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்க்கூடாது என்றும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கானோருடன் மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. அப்போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்கு பிரித்தானிய வாழ் தமிழர்களால் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குரல்களை பிரித்தா…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தக்கூடிய,நீண்டு நிலைக்கக்கூடிய புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை,எமது கலாச்சாரம் ,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுற்கு ஏற்ப,எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து ,அதற்கேற்ப செயலாற்றும் “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு-ஐக்கிய இராச்சியம் “ தனது அங்குரார்பன நிகழ்வினை வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துகிறது. நேரம்- பிற்பகல் 3 மணி,நடைபெறும் இடம்- vale farm sports centre,Watford road,London HA0 3HG.எந்த விதமான பாகுபாடுகளுமின்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும்,மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு உதவுவதும் என்ற அடிப்படையில்,அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றீர்கள்.தமிழ் பேசும் மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாகக் கெளதம் என்ற இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திருகோணமலையினை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தற்போது றொரன்ரோவில் உதைபந்து பயிற்சியாளராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இலங்கையினை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான PC கட்சி வேட்பாளர் தெரிவில், Scarborough - Guildwood தொகுதியில், திரு. குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள்.
-
- 1 reply
- 1k views
-
-
இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸிற்கு ஆயுட்காலச் சிறை! ரொறன்ரோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு, ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர் கொலையாக புரிந்தமையை ஏற்றுக்கொண்ட மக்காதர், நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், அவருக்கான இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 10 replies
- 3.9k views
-
-
சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் லண்டன் – சற்ரன் நகர சபையில் சித்திரைப் புத்தாண்டினை இந்து-பௌத்த புத்தாண்டுக் கொண்டாட்டம் என்னும் பெயரில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவுள்ளது. ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை…
-
- 1 reply
- 952 views
-