வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் ஆர்பாட்டம்… தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆ…
-
- 0 replies
- 704 views
-
-
புலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார். ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
தூத்துக்குடி மக்கள் படுகொலைக்கு எதிரான கண்டன போராட்டம்!! இடம்: இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக (365 Bloor வீதிக்கு அருகில், Toronto, Canada) காலம்: வெள்ளிக்கிழமை, மே 25, 2018 நேரம்: பி.ப. 3:00 - 6:00 மணி தூத்துக்குடி மண்ணில் எம் தமிழ் உறவுகள் மேல் காவல் படையினர் நிகழ்த்திய தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மீதான தாக்குதலை கண்டித்தும், நடந்த படுகொலைக்கானசுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த கோரியும், மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மக்கள்விரும்பாத ஸ்டெர்லைட் ஆலைகளை மூட கோரியும் கனடிய மண்ணில் இந்திய துணைதூதரகத்திற்கு முன்பாக கனடா வாழ் தமிழ் ம…
-
- 1 reply
- 913 views
-
-
கட்டாயத் திருமணம் - இங்கிலாந்தில் தாயாருக்கு சிறை. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஒரு பாகிஸ்தான் வம்சாவளி குடும்பம்... கணவனை பிரிந்து இரண்டாவது கணவனின் மருமகனார் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து வரவேண்டும். வழி என்ன. இரண்டாவது கணவனும்... மனைவியும் யோசித்தார்கள். அவரது முதல் கணவனுக்கு பிறந்த பிள்ளைகளில் 13 வயது சிறுமியை பாகிஸ்தானுக்கு கூட்டிச் சென்றார் தயார். அங்கே அந்த சிறுமியை விட 16 வயது கூடிய 'மாப்பிளை' உடன் சிறுமியை விட்டு விட்டு, தயார் அப்பாவி போல வெளியே சென்று விட்டார். திட்டமிட்ட மாதிரியே... உலகமே புரியாத அந்த அபலைப் சிறுமியை 'துஸ்பிரயோகத்துக்கு' உள்ளாக்கி... அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் இங்கிலாந்து திரும்பிய சிறுமி... சில மாதங்களின் பின் கர்ப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிங்ஸ்ரன் நகர பிதாவாக – ஈழத் தமிழர் தெரிவு!! பிரிட்டன், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவர் போட்டியிட்ட லிபரல் கட்சி 39 ஆசனங்களையும், எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சவேட்டிவ் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், கிங்ஸ்ரன் நகரத்தின் 183ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்ற…
-
- 0 replies
- 926 views
-
-
யாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்……! வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை கட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் இன்னல்களை சந்திக்கின்றார்கள். அந்தவகையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் தன்னுடைய மகனின் மனைவியை அதாவது தனது 37 வயதுடைய மருகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனடிப்படையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அதிர்ச்…
-
- 0 replies
- 953 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங…
-
- 3 replies
- 866 views
-
-
ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. . பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும் தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட…
-
- 0 replies
- 354 views
-
-
மன்னிப்பு என்றொரு சொல் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் இனக்கொலை நாட்கள் கடக்கும்போதும் ”ஈழத்தமிழர் அழிவதுபற்றிக் கவலைப்படாமல் பிரபாகரன் கொல்லப்படும்வரை போரை தொடர்க” என்று சொல்லப்பட்ட வார்த்தைகளும் போர்நிறுத்தம் என்று நம்பவைத்துவிட்டு இனக்கொலைமுடிய கூடா நட்புக் கேடாய் முடியும் என்று சொல்லப்பட்ட பழமொழியும் இன்னும் நினைவுக்குவந்து நெஞ்சை அறுக்குது. மன்னிப்பு என்கிற வார்த்தை சொல்லமட்டும் இன்றும் உறவாடும் இரு தரப்புக்கும் தெரியவில்லை.
-
- 0 replies
- 423 views
-
-
பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கண்ணீர் ஆராதனைகளுடனும் ஏக்கம் கலந்த உணர்வுகளுடனும் கடைப்பிடிக்கப்பட்டது. http://newuthayan.com/story/09/பிரான்ஸில்-நடைபெற்ற-முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்.html
-
- 0 replies
- 690 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்த நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvஇல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து, Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தியுள்ளனர். இதன்போது, படுகொலை செய்யப்பட்ட …
-
- 0 replies
- 550 views
-
-
பிரித்தானியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு பிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டதன் பின்னர் ஒன்று திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். …
-
- 0 replies
- 624 views
-
-
ஜேர்மனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், ஜேர்மனில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்கள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஜேர்மன், டுசில்டோர்வ் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஜேர்மன் மக்கள் அனைவரும் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) வளாகத்தை வந்தடைந்தனர். இதேவேளை, முள்ளவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலியும், வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றள்ளன. http://www.tamilwin.com/community/01/…
-
- 0 replies
- 460 views
-
-
சுவிஸில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுவிட்ஸர்லாந்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்து, பேர்ண் பாராளுமன்ற முன்றலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் தாயக தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட நாளை தமிழின அழிப்பு நாளாக இன்றைய தினம் அனுஷ்டக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.ta…
-
- 0 replies
- 467 views
-
-
மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!! Get real time updates directly on you device, subscribe now. Subscribe “மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி – டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16/மறக்கவும்-மாட்டோம்-மன்னிக்கவும்-மாட்டோம்-முள்ளிவாய்க்கால்-படுகொலை-கண்காட்சி.html
-
- 0 replies
- 750 views
-
-
தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. 14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், உய…
-
- 17 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம் 2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது. இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம். யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒரு கிராமம் என்னும் போது வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள். இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆப…
-
- 23 replies
- 2.7k views
-
-
Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய் இறைச்சியை வாங்கி இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான். Steakக்குக்கு Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wineஐ வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான். அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன். கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வ…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு 'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்: 01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் …
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜேர்மனியில் 3 ஆவது நாளாகவும் கவனவீர்ப்புப் பேரணி நேற்று நடைபெற்றது. மன்சார் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய வீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால…
-
- 0 replies
- 728 views
-
-
லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது. சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news
-
- 13 replies
- 2.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
சுவிற்சர்லாந்தில் 5300 மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் மொழி பொதுத்தேர்வு சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும். தமி…
-
- 0 replies
- 719 views
-
-
நாய்குட்டியை ஆட்டையைப் போட்ட அமேசன் டெலிவரி டிரைவர். இங்கிலாந்து பக்கிங்காம் செயர் பகுதியில், தனது நாய்குட்டிக்கு, சிறந்த ரக உணவினை அமேசன் தளத்தில் ஓடர் செய்திருந்தார் ஒரு வாடிக்கையாளர். பொருளை வாங்கி, உள்ளே போய் உடைத்து, நாய்குட்டியை சாப்பாட்டுக்கு கூப்பிட்டால்... அது வந்தால் தானே. அரிதான, அதிக விலை மிக்க, நாய்குட்டியை தேடோ தேடென்று தேடி களைத்து விட்டார், ரிச்சர்ட். இருந்து யோசித்துப்பார்தார் ரிச்சர்ட், யார், யார் வீட்ட வந்தது. ஆ... டெலிவரி.... அதன் பிறகு தான் நாய்குட்டியை காணோம். அமேசனுக்கு போனைப் போட்டார்... நம்ம நாயைக் காணல்ல... உங்காளு தான் கடைசியா வந்தாரு.... அவருக்கு பின்னால ஓடி போயிருச்சோ தெரியல்ல... விசாரிச்சு ச…
-
- 5 replies
- 1.1k views
-