வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி 2 Views கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது. இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொர…
-
- 0 replies
- 426 views
-
-
-
மிக விரைவில் மார்க்கம் நகரில் ஒரு வீதிக்கு வன்னி வீதி என பெயர் சூட்டப்பப்படவுள்ளது .இதற்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி (குறிப்பாக லோகன் கணபதி ). இந்த வீதிக்கு மிக அருகில் 66.5 million டொலர் செலவில் 120,000 sq ft இல் ஒரு கொம்மிநியுற்றி சென்டரும் கட்டவுள்ளார்கள் . எனக்கு நடை தூரம் என்பது மிக நல்லசெய்தி .
-
- 4 replies
- 805 views
-
-
19 - 9 - 2009 சனிக்கிழமையுடன் 150 நாட்களைத் தொடுகிறது இக்கவனயீர்ப்புப் போராட்டம் கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 நாளைத் தொடும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம். பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம் நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.
-
- 5 replies
- 1.8k views
-
-
23 வயதான Centennial கல்லூரியின் பழைய மாணவனும், யோர்க் பல்கலைகழகத்திற்கு செப்ரம்பரில் கல்வி கற்க அனுமதி பெற்றிருந்தவருமான தமிழ் இளைஞன் "கிரிஸ்டியன் தனபாலன்" (Kristian Thanapalan ) சனிக்கிழமை இரவன்று 25 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவொன்றினால் பொல்லுகளாலும் மட்டைகளாலும் மோசமாகத் தாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கனடாவின் பிரபல ஆங்கில நாளிதல் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலதிக செய்தி ஆங்கிலத்தில்: Kristian Thanapalan never stood a chance. The 23-year-old, looking forward to beginning his studies at York University in September, was swarmed by as many as 25 men and beaten to death with baseball and cricket bats early Saturday, according to a friend…
-
- 7 replies
- 3.1k views
-
-
கனடாவில் 27 வருடங்கள் வாழ்ந்தவர் குடியுரிமைக்காக போராட்டம் ஜொனத்தன் குய்பெர் (Jonathan “Yoani” Kuiper) என்பவரின் குடியுரிமை தொடர்பான நிலைமை, இரு வாரங்களிற்கு முன் தெரியவந்தமையை அடுத்து அது கனடா எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. அவர் அரசியல்வாதிகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், அவரது நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 33 வயது நிரம்பிய குய்பெர் (Kuiper) ,14 மாதங்களேயான குழந்தையாய் இருந்தபோது தமது பெற்றோருடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்து London, Ont இற்கு அருகாமையில் உள்ள Aylmer என்ற நகரிற்கு வந்துள்ளார். இந்த 33 வருட காலப்பகுதியில் 27 வருடங்கள் கனடாவில் வாழ்ந்து, கல்வியும் கற்றவருக்கு தனது குடியுரிமை பற…
-
- 1 reply
- 1.1k views
-
-
இம் மாதம் கனடா ஸ்காபரோவில் 21 வயதுடையவரான துஷாந்த் அரியநாயகம் என்பரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் இளைஞரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதுடைய ரவிசங்கர் வல்லிபுரம் என்னும் இளைஞனும் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டவர்கள் தகவல் தருமாறு பொலிஸார் வேண்டுதல் விடுத்து செய்திவெளியிட்டுள்ளனர். http://torontopolice.on.ca/newsreleases/34270 http://www.seithy.com/breifNews.php?newsID=154308&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 811 views
-
-
கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். $8M 'lost and laundered' in elaborate scheme: police …
-
- 30 replies
- 2.9k views
-
-
கனடாவில் COViD -19 வைரஸ் பரம்பலை எதிர்கொள்ளும் செயற்பாடுகளும், வைரஸ் தாக்கத்தின் விளைவுகளும்
-
- 1 reply
- 567 views
-
-
ரொரன்ரோ Markham மற்றும் Scarborough பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்திகளில் அவசர கவனயீர்ப்புக்களை நடத்த உடனே அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக CTR வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களுக்கு உடனே வருமாறு கோரப்பட்டுள்ளது. வரும்போது TamilNet இல் உள்ள செய்தியை முடிந்தளவு பிரதியெடுத்து கொண்டு வரவும். Markham: Markville Mall (Highway 7 and McCowan) Scarborough: Kennedy Rd and Steeles Ave Kennedy Rd and Sheppard Ave Markham Rd and Eglinton Ave மேலதிக தகவல்களுக்கு CTR வானொலியை கேட்கவும்
-
- 9 replies
- 3.6k views
-
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல். கனடாவில் Toronto நகரிலும், முள்ள...5,110 次播放 · 56 个心情 | கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய...கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்.... https://www.instagram.com/eastfmtamil/reel/DJpmSzJJCy6/
-
-
- 18 replies
- 828 views
- 2 followers
-
-
கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர். முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும். தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது
-
- 47 replies
- 7k views
-
-
CANADIAN TAMILS' NEXT BIG EVENT IS HERE & ITS THIS FRIDAY MARCH 13! LOCATION: TORONTO DOWNTOWN - Exact location TBA [Refer to Tamil Radios/TVs] TIME: 7AM - 10AM DATE: FRIDAY MARCH 13, 2009 SHOW YOUR SUPPORT AND SPREAD THE MESSAGE! MORE PEOPLE, MORE WE CAN DO! LETS MAKE THIS EVENT A SUCCESS STORY ALIKE THE HUMAN CHAIN! ONLY 3 HOURS OF YOUR TIME IS REQUIRED! MARK YOUR CALENDER: MARCH 13, 2009! There is nothing Youth can't achieve
-
- 4 replies
- 1.7k views
-
-
December 14th, 15 வெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால் “ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்” என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்… ‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது… கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது போனா…
-
- 15 replies
- 3.7k views
-
-
கனடாவில் அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக கனேடிய தமிழ்ச் சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 360 University Avenue இல் அமைந்துள்ள (Dundas வீதிக்கும் Queen வீதிக்கும் இடையில்) அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (03‐03‐2009) பி.ப 1:00 மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
கனடாவில் அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பில் குறைந்த மக்களே வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வந்து கலந்துகொள்ளும்படி கேட்கின்றனர் http://www.youtube.com/watch?v=z2e9JkpU158 http://www.youtube.com/watch?v=6JsunPFqJk8 http://www.youtube.com/watch?v=bU2g4GmPyMc
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்தத…
-
-
- 12 replies
- 621 views
- 1 follower
-
-
கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராகப் மாபெரும் கறுப்புக்கொடி போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…
-
- 0 replies
- 491 views
-
-
கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் இரு தமிழர்கள் கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களான 42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாத…
-
- 0 replies
- 587 views
-
-
கனடாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை: 150 தமிழர்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி! புதன், 23 பெப்ரவரி 2011 01:21 கனடாவில் அப்பிள் தோட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவார்கள் என்று சொல்லி சுமார்150 தமிழ் இளைஞர்களிடம் இருந்து முற்பணம் என்கிற பெயரில் தலா 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரு கும்பல் மோசடி செய்து உள்ளது. இக்கும்பல் கொழும்பை தளமாக கொண்டு இயங்கி வந்து உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்களை இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைத்து இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இக்கும்பலுக்கு உதவி, ஒத்தாசையாக செயல்பட்டவர்களில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் முக்கியமானவர். யாழ். மாநகர சபையில் க…
-
- 0 replies
- 2.1k views
-
-
கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..! கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
“அன்பின் பணி - Help for Love” பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி. நாம்வாழும் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்றி உணர்வோடு நமது குழந்தைகளும், பெற்றோரும், மற்றவர்களும் முன்வந்து ஏற்பாடு செய்திருக்கும் “அன்பின் பணி” என்ற அறப்பணிச் சேவைக்கு உங்கள் அன்புக் கரங்களை நாடுகிறோம். பாரதி கலைக்கோயிலின் இசைக்குழு, சிறந்த இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்பது நீங்கள் அறிந்ததே. இவ் இளம் இசைக் கலைஞர்கள், தொடர்ச்சியான 24 மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி சாதனை படைக்கவிருக்கிறார்கள். இதன் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடை யாவும் Rouge Valley Centenary hospital (Neilson & Ellesmere) இற்கு வழங்கப்படவிருக்கி…
-
- 6 replies
- 1.9k views
-
-
கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது! கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் ச…
-
-
- 6 replies
- 609 views
-