நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
லெனின் சின்னத்தம்பி அனோஜன் பாலகிருஷ்ணன் என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச் சூழலுக்குள் நுழைந்து அவர்களுடன் கலந்தாலும், அங்கே அவ்வாறு அச்சூழலுக்கு ஏற்ப வாழ்வதாகப் பாவனைதான் செய்ய இயலுமே…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழ அகதியின் துயர வரலாறு . என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஈழத்தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு உண்மைப்பதிவு .தமிழகத்தில வாழும் அகதிகள் பற்றிய கதை .
-
- 1 reply
- 1.3k views
-
-
"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு! பேரா.நா.மணி 1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார். வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் …
-
- 1 reply
- 6.1k views
-
-
புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும் ஜெயமோகன் jeyamohanJanuary 6, 2023 சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது. ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக…
-
- 1 reply
- 334 views
-
-
எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.
-
- 1 reply
- 191 views
-
-
ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகா சமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில் அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமே என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், பல்வர் கால, சோழர்கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் என்ன இந்த ஆழ்ந்தகன்ற சமுத்திரத்தில் ஒரு துளியாவது நம்மவர்கள் அறிவார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல இக்காலப் பல்கலைக்கழகப் படைப்பாளிகள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. பழந்தமிழ் இலக்கியம் பற்றிப் பேசு…
-
- 1 reply
- 5.4k views
-
-
முகமற்ற புத்தனின் உடல் எங்கும் நிறைந்திருக்கிற சூழலில்.. தவிர்க்கமுடியாத ஆயுதங்களுடன் புத்தனின் முகம்.. அது தமிழ் இனத்தின் முகம்..அதுவே தமிழ்ச்செல்வனின் முகம்.. - டிராட்ஸ்கி மருதுவின் கோடுகளும் வார்த்தைளும் நூலில்.. கோடுகளும் வார்த்தைகளும் நூலினை தற்போது இணையத்தில் பெற முடியம் http://vadaly.com/shop/?page_id=3&cate...p;product_id=14
-
- 1 reply
- 1.5k views
-
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்!… தெய்வீகன். அகரன்November 27, 2018 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குட…
-
- 1 reply
- 827 views
-
-
அந்த நிலவறை மனிதன் யார்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான், நவீன தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தது. குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்ததற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான கரமசோவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்ஸின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயேவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்…
-
- 1 reply
- 985 views
-
-
இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது. ஐ.டியில் பணிபுரிந்து பின்னர் ஒரு முக்கிய சினிமாவில் வில்லனாய் நடித்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் தான் இயக்குநராக விரும்புவதாய் தெரிவித்தார். எப்படி அதற்காய் தயாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் “நான் யாரிடமும் உதவி இயக்குநராய் பணி புரியவில்லை. நானாகவே கற்றுக் கொள்கிறேன்” “எப்படி? சினிமா பற்றின புத்தகங்கள் படிக்கிறீர்களா?” “நான் புத்தகங்கள் அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு நானும் போனேன். மண் மறவா மனிதர்கள் என 17 பேரைப்பற்றி வி.ரி. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு எழுதி புத்தகமாக வெளியிட்டார். அணிந்துரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசுவும் எழுதியிருக்க மேடையில் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொருத்தர் பேசினர். 1- சர்வதேசரீதியில் புகழ்பெற்ற சண் பற்றி முன்னைநாள் ஈழநாட்டில் வேலைசெய்தவரும் ரிரின் மற்றும் தீபம்தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியருமான கந்தசாமி அவர்களும் 2- டானியல் பற்றி வண்ணை தெய்வம் அவர்களும் 3-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் பற்றி நடிகர் கோமாளிகள்புகழ் அப்புக்குட்டி அவர்களும் 4- எல்லோருக்கும்இனிய மனிதர் சிவகுருநாதன் பற்றி அவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பல புதிய தகவல்களைத் தரும் நூல் இது. ம.பொ.சி. எழுதிய “சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு” என்ற நூலையும் பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிலப்பதிகா…
-
- 1 reply
- 670 views
-
-
சேகுவேரா இருந்த வீடு: யோ.கர்ணனின் சிறுகதைத் தொகுப்பு: ஒவ்வொரு வரியும் வரலாறாக....: யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.13 கதைகளை ஒரே மூச்சில் யாரும் வாசித்துவிட முடியாது.ஒரு கதையை வாசித்துவிட்டு அடுத்த கதைக்குப் போவதற்கு முன் இடைவெளியும் ஒருவித மௌனமும் வாசிப்பைத்தொடர்வதற்கான ஒரு மனத்தயாரிப்பும் தேவைப்பட்டது எனக்கு.ஆகவே இரண்டு மூன்று தினங்களாயின வாசித்து முடிக்க. நேரடியாக வாசகரோடு பேசும் கதைகள் இவை.வாசகர் என்கிற ஹோதாவை சும்மா ஒரு இதுக்கு வைத்துக்கொண்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’ July 26, 2021 “இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க ளைத் தேடலுக்கு உட்படுத்துகிறார். நூலை வாசிப்போரையும் தேடலில் ஈடுபட வைக்கி றார். ‘வடலி’யின் வெளியீடாக வரும் இந் நூலின் கதையை நூலாசிரியர் சொல்லக் கேட்டு, அரங்க இயக்குநரும், பதிப்பாசிரி யருமான சுனிலா கலப்பதி எழுதியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்பு தேவாவுடன் இணை ந்து சத்தியதேவனும், கௌரிபாலனும் செய் துள்ளனர். இந்த நூல் இலங்கைத் தீவிற்குள் தீர்க்கப்பட வேண்டிய அரசியலைப் பேசுவ தற்கான தேடலை ஏற்படுத்துகின்றது. நூலாசிரியர் பணி ஓய்வு பெற்ற கடற்பட…
-
- 1 reply
- 657 views
-
-
ஈழத்து நூல்களின் பட்டியல் http://www.noolaham.net/library/books.htm
-
- 1 reply
- 2k views
-
-
-
-
தெற்கிலிருந்து ஒரு சூரியன்! கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உ…
-
- 0 replies
- 753 views
-
-
Salam Alaik Book Launch Event | SHOBSAKTHI SPEECH | ஷோபாசக்தி பேச்சு
-
- 0 replies
- 709 views
-
-
இன்னும் சொல்லாதவை - தெணியான் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளன…
-
- 0 replies
- 695 views
-
-
கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி… ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது. ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முட…
-
- 0 replies
- 465 views
-
-
ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம் ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீத…
-
- 0 replies
- 634 views
-
-
புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழு…
-
- 0 replies
- 636 views
-
-
ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியது…
-
- 0 replies
- 639 views
-