Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோவிந்தனின் புதியதோர் உலகம் :மறு வாசிப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதனது இரண்டாவது பதிப்பு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. முதலாவது பதிப்பு வெளியானபோது உயிருடன் இருந்த கோவிந்தன் இரண்டாவது பதிப்பு வெளிவரும் முன்பே, கவிஞர் செல்வியைப் போலவே விடுதலைப் புலிகளால் ‘காணாமல்’ போகச் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் பற்றிய கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை விடுதலைப்புலிகள் பரவலாக விநியோகித்தார்கள். கோவிந்தனின் நாவல் வெளியான காலத்தின் பின், சில மாதங்களில் 1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக் கழக…

  2. நேர்காணல்: விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை! Last Updated : தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும் சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும் படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து... நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கில…

    • 0 replies
    • 739 views
  3. இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில…

    • 3 replies
    • 1.3k views
  4. வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியி…

  5. “ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும் ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும். அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் …

    • 8 replies
    • 2k views
  6. உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம். உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூல…

  7. A bloodstained label Stuck to his lapel Reads: In... Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?' It bewilders to make it read 'Innocuous Innocent.' சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கான எல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற…

  8. நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல் - எஸ்.வி.வேணுகோபாலன் மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க? மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு. மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும…

    • 1 reply
    • 848 views
  9. பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை! டி.அருள் எழிலன் ஓவியம் : ஸ்யாம் ''இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் …

  10. ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன் சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முட…

  11. http://inioru.com/?p=26837 ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன் நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன் - மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்…

  12. அண்மையில் இந்தியா சென்று வந்த ஒரு உறவு சில ஜெயமோகன் புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். கடந்த வாரம் ரப்பர், உலோகம் மற்றும் இரவு ஆகிய மூன்று ஜெயமோகன் நாவல்களையும் வாசித்து முடித்தேன். மூன்றாண்டுகள் முன்னர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தபோது ஜெயமோகன் என்ற எழுத்தாழனை அறிந்திருக்கவில்லை. அந்த நாவல் ஏற்படுத்திய பிரமிப்பில் (இதை ஜெயமோகனே திரைக்கதை எழுத படமாக்கிய பாலா சொதப்பியது வேறு கதை. இது பாலாவிற்கு மட்டுமான பிரச்சினை அல்ல. பல ஆங்கில நாவல்களிற்கும் நடந்துள்ளது. எந்த நாவலையையும் படத்தால் வெல்ல முடியாது—விஞ்ஞானப் புனைவுகள் புராண அல்ல பூதக் கதைகள் தவிர) ஜெயமோகனின் அனைத்து நாவல்களையும் வாசித்துவிடவேண்டும் என்று ஒரு வெறித்தனமான ஆசை எழுந்தது. கனடாவில் சிற…

    • 13 replies
    • 6.4k views
  13. ஜோர்ச் ஓவலின் '84', டாஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'த இடியற்' மற்றும் 'கிறைம் அன்ட் பணிஷ;மன்ற்' ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த கையோடு, நான்காவதை ஆரம்பிக்கை நினைக்கையில் வேதாளம் தோளில் ஏறி அமர்ந்துகொண்டது. இருபது வருடங்கள் பழக்கமான வேதாளம் தான். 'இங்கிலீசு புத்தகம் தான் படிக்கிறீங்கள் போல...ம் படியுங்கோ படியுங்கோ...அண்ணை தமிழோ...' என்ற தோரணையிலேயே வேதாளம் பேசும். வேதாளத்தோடு விவாதம் சரிப்படாது. விதண்டாவாதத்தில் நேரத்தைச் செலவழிப்பதிலும் ஒரு சில தமிழ் நூல்களைப் படித்து விட்டு நகர்ந்தால் வேதாளம் மறைந்து தொலையும். சோபாசக்த்தி புதிதாய் எதையும் எழுதியதாய்த் தெரியவில்லை. ஜெயமோகனின் எழுத்தில் இப்போது அலுப்புத் தட்டத் தொடங்குகிறது—'டார்த்தனியம'; எழுதிய ஜெயமோகன் இறந்து விட்…

  14. சேகுவேரா இருந்த வீடு: யோ.கர்ணனின் சிறுகதைத் தொகுப்பு: ஒவ்வொரு வரியும் வரலாறாக....: யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.13 கதைகளை ஒரே மூச்சில் யாரும் வாசித்துவிட முடியாது.ஒரு கதையை வாசித்துவிட்டு அடுத்த கதைக்குப் போவதற்கு முன் இடைவெளியும் ஒருவித மௌனமும் வாசிப்பைத்தொடர்வதற்கான ஒரு மனத்தயாரிப்பும் தேவைப்பட்டது எனக்கு.ஆகவே இரண்டு மூன்று தினங்களாயின வாசித்து முடிக்க. நேரடியாக வாசகரோடு பேசும் கதைகள் இவை.வாசகர் என்கிற ஹோதாவை சும்மா ஒரு இதுக்கு வைத்துக்கொண்ட…

    • 1 reply
    • 1.1k views
  15. 18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்) ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை. பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம். அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெரு…

  16. பிரபாகரனோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய கணேசன் (ஐயர்) தனது அனுபவங்களையும் அதன் பின்னணியில் பொதிந்திருந்த அரசியலையும் பகிர்ந்துகொள்கின்ற நூல் பிரித்தானியாவில் வெளியிடப்படுகின்றது. “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஐயரின் நூல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பொதிந்து கிடந்த மர்மமங்களை மட்டுமன்றி, அவற்றிலிருந்து எதிர்கால அரசியல் வெற்றிக்கான திறவுகோலையும் எம் மத்தியில் முன்வைக்கிறது. போராட்டத்தின் தோல்வி குறித்த எதிர்மறைக் கூச்சல்களும், சந்தர்ப்பாவதிகளின் அணி சேர்க்கைகளும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தைச் செழுமைப்படுத்தல் குறித்த புதிய நம்பிக்கைகளை வழங்கும் ஐயரின் நூல் அ…

    • 4 replies
    • 1.6k views
  17. அனொனிமா – முகம் மறைத்தவள் -இளவேனில் அ.பள்ளிப்பட்டி- வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், ம…

    • 0 replies
    • 1.3k views
  18. ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை இன்றும் தொடர்கிறது. யாழ்ப்பாண நூலக எரிப்பும், வன்முறைகளும், 1983-லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்…

  19. சயந்தனின் ஆறா வடு குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 16 பெப்ரவரி 2012 ஈழத்தில் கவிதை அரசியல் மயப்பட்டிருப்பது போலவே இலக்கிய விமர்சனமும் அதி அரசியல்மயப்பட்டதாகத்தான் இருக்கிறது. கோவிந்தனின் புதியோர் உலகம் நாவலின்பின் முக்கியத்துவம் பெற்ற, விவாதிக்கப்பட்ட நாவல்களாக ஷோபா சக்தியின் கொரில்லாவும், விமல் குழந்தைவேலின் கசகறணம் போன்றனவும்தான் இருக்கின்றன. ஈழத்தின் அரசியல் விமர்சனத்தில் செயல்படுகிற அதே மன அமைவுதான் இலக்கிய விமர்சனத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலி ஆதரவு-எதிர்ப்பு எனும் இரு துருவப் பார்வையில் இருந்து ஏதேனும் ஒரு துருவத்தைச் தேர்ந்து கொண்டு எழுதுவதுதான் ஈழ இலக்கியத்தின் அரசியல்சார் தீவிரப் பண்பு என…

  20. நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்: நிழலி பகுதி 1 எனக்கு ஐந்து வயசு இருக்கும், அப்பாவுக்கு இடம் மாற்றலாகி நாங்கள் எல்லாரும் குருணாகலுக்கு போய் 83 கலவரம் வரை வசிக்க வேண்டி வந்தது. அப்பா அரசாங்க உத்தியோகம் என்பதால் அங்கு அழகான ஒரு `குவார்ட்டஸ்`தந்து இருந்தார்கள் அந்த வீடு அமைந்து இருந்த இடம் குருணாகலின் முக்கியமான அரச வேலைத்தளங்கள் இருக்கும் இடம். மருந்துக்கும் கூட அப்பகுதியில் என்னுடன் விளையாட தமிழ் குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. சிங்களம் தெரியாத வயது அது. ஆனால் எம் வீட்டின் அதே வளவில்தான் குருணாகலின் மத்திய நூல் நிலையம் அமைந்து இருந்தது. வீட்டில் இருந்து 10 அடிகள் எடுத்து வைத்தால் நூலகத்தின் உள்ளே நுழையலாம். பள்ளிக்கூடம் விட்டு வந்தபின…

  21. யூதரும் தமிழரும் http://youtu.be/_1fIlGeg4MQ

  22. ஈழக் கவிஞர் தீபச்செல்வன் முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறு…

  23. “ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை” - கார்டன் வெய்ஸ் தொகுப்பு: கானகன் தற்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் கார்டன் வெய்ஸ் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் மனிதநேயச் சட்டத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இயற்கைப் பேரிடர்களுக்கும் போர்ச் சிக்கல்களுக்கும் உள்ளான போஸ்னியா, கொஸாவா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்ஃபூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காஸா, அஸே, ஹைட்டி போன்ற பல பகுதிகளில் பணியாற்றியவர். வானொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்குச் சுயேச்சையான செய்தியாளராகவும் இருந்தவர். ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக 2007 முதல் 2009வரை வெய்…

  24. ஈழத்தில் முகிழ்த்த நாவலாசிரியர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் இன்னும் இருக்கிறது...இந்த நிலையில் சயந்தனின் ஆறாவடு நாவலுடனான வரவு ஈழத்து இலக்கியத்திற்க்கு புத்துயிர் கொடுக்கும் ஒன்றாக இருக்கும்...சயந்தனின் நாவல் பற்றிய சிறுகுறிப்பை இன்று தமிழ்ப் பேப்பரில் படிக்கக்கிடைத்தது...அதில் அந்த நாவலில் வரும் ஒரு சிறுபகுதியை இணைத்திருந்தார்..என்னடா இது என்னைப்பற்றியே எழுதி இருக்குது எண்டு வியந்தேன்..அந்தக்காலப் பகுதியில் அந்தமண்ணில் இருந்திருந்தால் நீங்கள் எல்லோரும் அப்படித்தான் உணருவீர்கள்...அந்தக் காலப்பகுதியில் அங்கு இல்லாதவர்கள் அந்தக் காலத்தை சயந்தனின் எழுத்துக்களில் சுவாசிப்பீர்கள்..எங்கட மண்ணின்ர தூசியைக் கூடச் சுவாசித்துப் பாக்காதவர்கள் எல்லாம் உலோகங்களாய்…

    • 6 replies
    • 1.6k views
  25. பிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது... புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்! ''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.