நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நீண்ட நாட்களாக கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை படிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். ஒருவாராக இந்த வார விடுமுறையில் வாசித்து விட்டேன். சோழ வரலாற்றைப் படித்தவர்களுக்கு இரண்டு விடயம் ஒரு தெளிவில்லாமலேயே இருக்கும். ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை மற்றொன்று "காந்தளூர்ச் சாலை கலமறுத்த" என்ற வாக்கியத்தின் பொருள். இதைப் பற்றி யாரும் தெளிவாக இதுவரை வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதவில்லை. இந்த இரண்டையும் தேடி இணையத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். முதன் முதலாக கோகுல் சேஷாத்ரி காந்தளூர்ச் சாலை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார். காந்தளூர்ச் சாலை பற்றி சுஜாதா "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" என்ற நாவல் எழுதியிருந்தார். ஏனோ அதை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு செ…
-
- 3 replies
- 4.8k views
-
-
நீலகண்டம் முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “நீலகண்டம்” இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே “நீலகண்…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
வரதர் என்ற தி.ச.வரதராஜனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு ஒரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன். http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_26.html
-
- 7 replies
- 3.1k views
-
-
வடலி வெளியீடுகளான கருணாகரனின் பலிஆடு கவிதை நூல் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் வெள்ளி 28 ஓகஸ்ட் மாலை 6 மணிக்கு கனடாவில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்கள் கீழே..
-
- 19 replies
- 2.7k views
-
-
மாபெரும் தாய் – வாசிப்பு EditorOctober 23, 2022 “My Poetry has obviously more in common with distinguished contemporaries in America than with anything written in England”- T.S.Eliot புலம் பெயர்வைப் பேசக்கூடிய இலக்கியம் உலகில் நிறைய இருக்கின்றன. ஒன்று, தனிப்பட்ட அரசியல் காரணங்களால் நடப்பது. இன்னொன்று, போர்ச் சூழலால் நிகழ்வது. அதிலும் ஒரே மொழியைச் சேர்ந்த (பழைமான மொழி என்கிற பெருமையைக் கொண்ட) இனத்தின் ஒரு நிலம் செல்வாக்கோடும் செழிப்போடும் ஆட்சியில் கோலோச்சியிருக்கிறபோது பிறிதொரு நிலம் அடிமையில் நசுக்கப்பட்டும் விரட்டப்படுவதுமான முரணான தன்மையில் நிலம் மீள போராடும் விதியைக் கொண்டிருப்பது தமிழ் ஈழம் மட்டும்தான். இதுமாதிரியான புவியியல் அமைவின் பின்னணியில் இலக…
-
- 1 reply
- 610 views
-
-
புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்றும் நல்ல புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகள் என்றும் வாசிப்பே மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்றும் பேசப்பட்ட கால கட்டம் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதைப் போல இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை பதிப்பிப்பதும் புத்தகங்களைப் பெறுவதும் மிகவும் அரிதாக இருந்தது. அப்போது வாசிப்பும் புத்தக தேடலும் புத்தக பாதுகாப்பும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொடர்பாடலில், பதிப்புத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும் பாய்ச்சல்களும் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பு மிகவும் கவலைக்கிடமாகவல்லவா இருக்கிறது? இன்று உலக புத்தக தினமாகும். இதனை பத…
-
- 1 reply
- 1k views
-
-
லெனின் சின்னத்தம்பி அனோஜன் பாலகிருஷ்ணன் என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச் சூழலுக்குள் நுழைந்து அவர்களுடன் கலந்தாலும், அங்கே அவ்வாறு அச்சூழலுக்கு ஏற்ப வாழ்வதாகப் பாவனைதான் செய்ய இயலுமே…
-
- 1 reply
- 1.2k views
-
-
வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியி…
-
- 0 replies
- 3.3k views
-
-
Manual of Vanni Districts(1985)-J.P.LEWIS. ஜே.பி .லூயிஸ் ஆங்கிலத்தில் எழுதிய கையேடு இப்போது தமிழில் தமிழாக்க குழு வன்னியால் வெளியிடப்பட்டுள்ளது . வன்னியின் அரசியல் ,பொருளியல் ,சமூக வரலாற்றுக்கான விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இதற்கு விரிவான முன்னுரையை வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதியுள்ளார் .
-
- 0 replies
- 628 views
-
-
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவின் தொகுப்பான ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை தலைமை தாங்கினார். மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர் க. ஸ்ரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார். அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், இம்மாமன்றத்தின் பிரதித் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் அங்கத்தவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்காக சக…
-
- 2 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு நவம்பர் 1992ல் மரணித்த மலரவன் என்கின்ற போராளியின் நாட்குறிப்பானது தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலரவன் போரில் மரணித்ததன் பின்னர் போர் பற்றிய நாட்குறிப்பானது அவரது சக போராளித் தோழர்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. விஜின்தன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட மலரவன், எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இதுவே பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் தனது நாட்குறிப்பில் நிச்சயமற்ற வாழ்க்கை தொடர்பாகவும் அதன் ஏற்ற இறக்கங்கள் தொடர்பாகவும் போர் …
-
- 0 replies
- 685 views
-
-
ஈழ அகதியின் துயர வரலாறு . என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஈழத்தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு உண்மைப்பதிவு .தமிழகத்தில வாழும் அகதிகள் பற்றிய கதை .
-
- 1 reply
- 1.3k views
-
-
செந்தியின் ‘தனித்தலையும் செம் போத்து’ தொகுப்பு நகரமய மாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்து விட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக, செங்குளத்தை இரண்டாகப் பிரித்து/வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை/குட்டைகள் அரிதான வெளியில்/கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப்/பெரும் களிப்பூட்டியிருக்கலாம் என்ற ‘கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள்’ கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற காமம் குறித்த கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட உணர்வை இளவயதில் எல்லோரும் அனுபவித்தவர்கள்தான் என்ற முறையில் சரியான வார்த்தைகளால் அவை சொல்லப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 811 views
-
-
வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது - முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் By VISHNU 19 OCT, 2022 | 09:39 PM (எம்.நியூட்டன்) வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம் திருக்றுகோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (18) புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழ கையாலபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றபோது நிகழ்வில் கருத்துரையாற்றுகையிலேயே …
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். வழி தவறிப்போக இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இந்தத் தோல்விகளின் குமுறல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கிறார் பிள்ளை சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள். ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி …
-
- 3 replies
- 750 views
- 1 follower
-
-
இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன் வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழ…
-
- 0 replies
- 495 views
-
-
பா-தீனதயாளன் எழுதியது -நடிகையாக அல்ல சிலுக்கை ஒரு பெண்ணாக அணுகி அவரது வாழ்வை ஆராயும் நூல் என போட்டிருக்கின்றது.இப்ப தான் வாசிக்க தொடங்கியிருக்கின்றேன். யாராவது வித்யா பாலன் நடித்த DIRTY PICTURE பார்த்தீர்களா? அதுவும் சில்கின் கதைதான்.
-
- 13 replies
- 2.6k views
-
-
"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு! பேரா.நா.மணி 1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார். வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் …
-
- 1 reply
- 6.1k views
-
-
ஓராயிரம் சூரியன்கள்! "மரியம் தன் கடைசி இருபது அடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடரும் இளம் தலிபான் ஆயுத தாரியின் நிழல் அவளோடு கூடத் தொடர்ந்தது. இவ்வளவு முயன்றும் இப்படித் தான் என் வாழ்வு முடியப் போகிறதா என்ற கேள்வியும் அவளுள் தொடர்ந்து வந்தது. ஆனால், ஒரு சிறு நல்ல காரியமாவது செய்து விட்ட திருப்தியோடு தான் போகிறேன் என்ற எண்ணமும் ஒரு மன மூலையில் இருந்தது!" (வரிக்கு வரி மொழிபெயர்ப்பல்ல) ஏற்கனவே நூற்றோட்டம் பகுதியில் நாம் பார்த்த பட்டமோடியை எழுதிய காலித் ஹொசைனியின் இன்னொரு படைப்பு இந்த "ஓராயிரம் சூரியன்கள்" நாவல். நாவலின் பின்புலம் கம்யூனிச பொம்மை ஆட்சியை ரஷ்யா ஏற்படுத்தி விட்ட பின்னர், தலிபான் உட்பட்ட யுத்தப் பிரபுக்களின் குழுக்கள் மீண்…
-
- 0 replies
- 833 views
-
-
புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 3.2k views
-
-
பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் தலைமையுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நோ.கிருஷ்ணவேணியும் வரவேற்புரையினை அருந்தாகரனும், பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், வெளியீட்டுரையினை நூலாசிரியர் பாக்கியநாதன் அகிலனும் சிறப்புரையினை நிலாந்தனும் ஆற்றவுள்ளனர். அத்துடன் பாராம்பரி…
-
- 0 replies
- 367 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு December 1, 2021 வடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மன்னாரில் நடை பெறவுள்ளது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான எதிர் வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற உள்ளது. மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி ஏ.சகிலா பானு கலந்து கொள்ளவுள்ளார். …
-
- 0 replies
- 377 views
-
-
மேற்கத்திய இசையை எளிதாக கற்றுக்கொள்வதற்கும், மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கும் தமிழில் பாடங்களே இல்லை என்ற குறையைப் போக்க வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செழியனின் ‘த மியூசிக் ஸ்கூல்’ வெளியீடு. எளிய தமிழில் வந்திருக்கும் இந்தப் புத்தகங்களின் மூலம் வீட்டிலிருந்தே மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த இசைப்பாடங்கள் பத்து வயதிலிருந்து, பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு உதவுபவை. 15 ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. 1,700 பக்கங்கள், 200-க்கும் மேற்பட்ட பாடங்கள், 1,000-க்கும் மேற்பட்ட விளக்கப் படங்கள் போன்றவற்றோடு இந்தப் புத்தகத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகுப…
-
- 0 replies
- 2.9k views
-
-
http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF- அண்மையில் சென்னையிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" மற்றும் "காவியத்தூது" ஆகிய இரு நூல்களையும் தற்சமயம் சென்னையில் இரு விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
-
- 34 replies
- 8.8k views
-
-
புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும் ஜெயமோகன் jeyamohanJanuary 6, 2023 சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது. ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக…
-
- 1 reply
- 334 views
-